நம் உடல் ஆரோக்கியமாக மற்றும் சீராக இருப்பதை உறுதி செய்வதில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது,. ஆரோக்கியமான குடல் என்றால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விட நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை குறிக்கிறது. நம் உடலில் உள்ள பல செயல்முறைகளுடன் நேரடியாக குடல் ஆரோக்கியம் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல ஆரோக்கியமான குடல் இதய நோய் ஆபத்தை குறைப்பது, உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பது, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்குவது, மூளை ஆரோக்கியம், நிம்மதியான தூக்கம் மற்றும் நல்ல உள்ளிட்ட பல நன்மைகளுக்கு துணையாக இருக்கும்.
இந்நிலையில் பிரபல ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா, குடல் ஏன் நம் உடலின் இரண்டாவது மூளை என குறிப்பிடப்படுகிறது என தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போஸ்ட்டில் குடலை பற்றி நமக்கு தெரியாத பல உண்மைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவில் க்ளினிக்கல் டிப்ரஷன் மற்றும் கேன்சர் உட்பட நமக்கு ஏற்படக்கூடிய சுமார் 90% நோய்களுக்கு ஆரோக்கியமற்ற குடல் /பெருங்குடல் காரணமாக இருப்பதாக டிம்பிள் ஜங்தா குறிப்பிட்டுள்ளார்.
மூளையில் உள்ள நியூரான்களை விட குடல் சுவரில் அதிக நியூரான்கள் இருப்பதால் குடல் இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒருசில நம் உள்ளுணர்வு குடலில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அதே போல நம் குடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியும் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். உணர்ச்சிகள் மற்றும் நினைவுகள் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் இடம் நமது குடல். ஏனென்றால் நாம் கவலையாகவோ, பயமாகவோ, பீதியாகவோ. உற்சாகமாகவோ, மகிழ்ச்சியாகவோ அல்லது பதற்றமாகவோ உணரும் போது முதலில் அதை நம் குடலில் தான் உணர்கிறோம். இதன் விளைவாக அல்லது தொடர்ச்சியாக தான் சியா அறிகுறிகளை நாம் வெளிப்படுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நம் குடலில் 75% செரோடோனின் வெளியிடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..? என வினவி இருக்கிறார் டிம்பிள் ஜங்தா. குடலுக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பிலும், நம் குடலின் சரியான செயல்பாட்டிலும் செரோடோனின் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு ஆரோக்கியமான பெரியவருக்கு 1 கிலோ பாக்டீரியா காணப்படும். நமது குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் நமது மன ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். சருமம் மற்றும் முடி, நரம்பியல் ஆரோக்கியம், இரைப்பை குடல் ஆரோக்கியம், மூச்சுக்குழாய் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல், புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கும், மனச்சோர்வுக்கும் தொடர்பு உண்டு. குடல் நமது உடலின் ஒரு மைய உறுப்பு மற்றும் ஒரு ஃப்யூயல் டேங்க் போல செயல்படுகிறது. நம் மற்ற அனைத்து உறுப்புகளும் உயிர் ஆதரவு ஊட்டச்சத்தை வழங்குவதற்கு சார்ந்துள்ளது. குடல் பகுதியில் தான் உணவு செரிக்கப்படுகிறது, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, கழிவுகள் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன என்றும் விளக்கி இருக்கிறார்.
Also Read : குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் : ஏன் தெரியுமா..?
இதற்கிடையே பிரபல டயட்டிஷியனான கரிமா கோயல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம் என்கிறார். குடல் நுண்ணுயிரிகள் ப்யூட்ரேட், ப்ரோபியோனேட் மற்றும் அசிடேட் போன்ற பல ஷார்ட் செயின் ஃபேட்டி ஆசிட் (SCFA) உற்பத்தி செய்கின்றன. மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பசியை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்கிறார். இரைப்பை குடல் செயல்பாட்டு கோளாறுகள் உள்ள பலர் பிறரை விட தீவிர வலியை உணர்வதாக Harvard Medical School கூறுகிறது. ஏனெனில் அவர்களின் மூளை GI பாதையில் இருந்து வரும் வலி சார்ந்த சிக்கனல்களுக்கு பதிலளிக்க கூடியதாக இருக்கிறது. எனவே நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டால் மன அழுத்தத்தை தணிக்க முயற்சிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gut Health, Health