• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும் நெல்லிக்காய் முருங்கை இலை ஜூஸ் : தினம் காலை அரை கிளாஸ் குடிக்கலாம்..!

நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும் நெல்லிக்காய் முருங்கை இலை ஜூஸ் : தினம் காலை அரை கிளாஸ் குடிக்கலாம்..!

நெல்லிக்காய் முருங்கை இலை ஜூஸ்

நெல்லிக்காய் முருங்கை இலை ஜூஸ்

நெல்லிக்காய் , முருங்கை இலை இரண்டிலும் தனித்தனியே நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒன்றாக சாப்பிடும்போது கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தி பலம் கிடைக்கிறது. அதோடு விட்டமின் சி நிறைவாக உள்ளது.

  • Share this:
கொரோனா நோய் தொற்றை சமாளிக்க உடலுக்கு தேவையானது நோய் எதிர்ப்பு சக்தி. கொரோனாவிற்கான சரியான மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்காத நிலையில் நம் உடல்தான் நமக்கான பாதுகாப்பு. அப்படி இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் உண்ணும் உணவு முறையில் ஊட்டச்சத்தை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

இதற்கான சிலர் மூலிகை பானங்களையும் வீட்டில் முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் நெல்லிக்காயும் , முருங்கை இலையையும் சேர்த்து அரைத்து அதன் சாறை அருந்துவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்தியா டுடே இதழில் ஊட்டச்சத்து நிபுணர் பிரீதி மேதா இந்த ஜூஸை பரிந்துரைத்துள்ளார்.

நெல்லிக்காய் , முருங்கை இலை இரண்டிலும் தனித்தனியே நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒன்றாக சாப்பிடும்போது கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தி பலம் கிடைக்கிறது. அதோடு விட்டமின் சி நிறைவாக உள்ளது. எனவே நெல்லிக்காய் முருங்கை இலை ஜூஸை அரை கிளாஸ் வீதம் குடித்தாலே தேவையான எதிர்ப்பு சக்தி உங்களுக்குக் கிடைத்துவிடும். இந்த ஜூஸ் எப்படி போடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கை இலை - சிறிதளவு
நெல்லிக்காய் - 1
தண்ணீர் அரை கிளாஸ்



செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து பின் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா..?

நன்கு அரைபட்டு சாறு வந்ததும் அதை வடிகட்டிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் ஜூஸ் தயார். இதை அப்படியே வெறும் வயிற்றில் கண்ணை மூடி குடித்துவிடுங்கள்.

முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..? இதை படித்தால் வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவீங்க..!

குறிப்பு : இதை காலையில் வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கக் கூடாது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: