இன்று புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய நீங்கள், நாளை உங்களின் பேத்தியின் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கப்போகிறீர்கள் என்பதை அறிவீர்களா? மனித வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படியொரு தகவலை ஆய்வு முடிவு ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 90களில் பிறந்த சுமார் 14,000 தனிநபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். 2014ம் ஆண்டு இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது 2ம் முறையாக இந்த ஆய்வின் முடிவுகள் journal Scientific Reports தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தந்தைவழி தாத்தா பருவமடைவதற்கு முன்பே புகைபிடிக்கத் தொடங்கியிருந்தால், குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியில் (13 - 16 ஆண்டுகள்) ஒப்பிடும்போது, அவரது பேத்திகள், அதிக உடல்பருமனுடன் இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் சந்ததியினர் இதனால் பாதிப்படையவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
Also read: வக்கிர புத்தி படைத்த தந்தையால் மைனர் சிறுமிக்கு சேர்ந்த அவலம்!!
இரண்டு முக்கிய ஆய்வு முடிவுகள்:
இந்த ஆய்வினை நடத்திய ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவரும், பேராசிரியருமான ஜீன் கோல்டிங் கூறுகையில், “இந்த ஆய்வு இரண்டு முக்கியமான முடிவுகளை நமக்கு வழங்குகிறது. முதலாவதாக, பருவமடைவதற்கு முன், ஒரு சிறுவன் குறிப்பிட்ட ரசாயண பொருளை உட்கொள்ளும் போது, அது பின்தொடரும் தலைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டாவதாக, குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர்களின் தற்போதைய உணவு மற்றும் உடற்பயிற்சியை அதிகம் செய்யாமல் இருப்பதாக இல்லாமல், அவர்களின் முன்னோர்களின் வாழ்க்கை முறை அல்லது பல ஆண்டுகளாக தொடர்புடைய காரணிகளாகவும் இருக்கக்கூடும்” என தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் இந்த தரவுத்தொகுப்பு உறுதிசெய்யப்பட்டால், இது நான்கு தலைமுறைகளில் பரவும் ஒரு தலைமுறை மாற்றத்தின் முதல் மனித நிரூபணமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Also read: காங்கிரஸ் கட்சியில் சேராதது ஏன் - பிரசாந்த் கிஷோர் விளக்கம்
2014 ஆம் ஆண்டின் முந்தைய ஆராய்ச்சி முடிவில், ஒரு தந்தை பருவமடைவதற்கு முன்பு (11 வயதுக்கு முன்) தொடர்ந்து புகைபிடிக்கத் தொடங்கினால், அவரது மகன்கள், (மகள்கள் பாதிப்படையவில்லை) அதிக உடல் பருமனைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் முந்தைய ஆராய்சியின் நீட்சியாகும். இந்த ஆய்வு மேலும் தொடர்ந்து வருவதால் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lifestyle, Obesity, Quit Smoking, Smoking