• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சிறுநீர் கழிக்க சோம்பேறித்தனம் வேண்டாம் : அடக்கி வைத்தால் இதுதான் நடக்கும்..!

சிறுநீர் கழிக்க சோம்பேறித்தனம் வேண்டாம் : அடக்கி வைத்தால் இதுதான் நடக்கும்..!

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது மற்ற ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது

சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது மற்ற ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது

சிறுநீர் பையில் கால்சியம் சேர்ந்து சிறுநீர் பையில் கல் உருவாகும் ஆபத்தும் உள்ளது. எனவே சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக சிறுநீர் வெளியேற்றிவிட்டு வாருங்கள்.

  • Share this:
    சிறுநீர் உடல் வெளியேற்றும் தேவையற்ற நீர். இது உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உடல் நடத்தும் செயல். உடல் அதன் வேலையை சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது அதற்கு நீங்கள் ஒத்துழைக்காமல் முட்டுக்கட்டை போட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..?

    நம்முடைய சிறுநீர் பையானது 1.5 முதல் 2 கப் தண்ணீரை தேக்கி வைக்கும். அதில் அதிகபட்ச அளவான 2 கப்பை தேக்கி வைக்கும்போதுதான் அவசர அவசரமாக வரும் சிறுநீராகும். இப்படி அடிக்கடி சிறுநீர் வர சில காரணங்கள் உள்ளன. அதில் ஆரோக்கியமான காரணம் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதாலும், காஃபி குடிப்பதாலும் நிகழலாம். இப்படி 3 அல்லது 4 மணி நேரத்திற்கு சிறுநீர் வருவது இயல்புதான். அதுவும் நீங்கள் தண்ணீர் அருந்தும் அளவைப் பொருத்தது.

    பெண்கள் பிறப்புறுப்பின் மீது இருக்கும் முடிகளை அகற்றலாமா..? அதன் விளைவுகள் என்ன..?

    சிலர் இரவில் எழுவதால் தூக்கம் தடைபடும் என்றும், வேலை இருந்தால் அடக்கி வைப்பதும், சிலர் அடிக்கடி பாத்ரூம் செல்ல பிடிக்காமல் அடக்குவதும் என பல காரணங்களுக்காக சிறுநீர் கழிப்பதை தள்ளிப்போடுகின்றனர்.



    இவ்வாறு செய்வதால் சிறுநீர் நீண்ட நேரம் சிறுநீர் பையில் தேங்கியிருந்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீர் தொற்றை உண்டாக்கும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தேக்கி வைப்பதே போதுமானது. அதற்கும் மேல் தேக்கி வைத்தால் ஆபத்து. சிறுநீர் பையில் தொற்று உண்டானால் சிறுநீர் பாதையிலும் தொற்று ஏற்படும். இது சிறுநீர் கழிப்பதையே உங்களுக்கு சிரமமாக்கலாம். அதேபோல் சிறுநீர் பையில் கால்சியம் சேர்ந்து சிறுநீர் பையில் கல் உருவாகும் ஆபத்தும் உள்ளது. எனவே சிறுநீர் கழிக்கும்போது முழுமையாக சிறுநீர் வெளியேற்றிவிட்டு வாருங்கள். மிச்சம் இருந்தால் மீண்டும் பாத்ரூம் ஓட வேண்டியது இருக்கும்.

    எனவே இரவானாலும், பகலானாலும் சிறுநீர் வந்தால் வெளியேற்றிவிடுங்கள். கழிப்பறையே இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் மட்டும் தண்ணீர் குடிப்பதைக் கட்டுப்படுத்தி சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க:

     

     

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: