உங்களுக்கு படிகட்டுகளில் ஏற சிரமமாக உள்ளதா ? கட்டாயம் இதை படியுங்கள்..

காட்சி படம்

மாடிப்படி ஏறுவதில் மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் இதய பாதிப்பைக் குறிக்கும் அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 • Share this:
  நம் உடலில் ஏதேனும் பாதிப்பு உள்ளது எனில் அதை சில அறிகுறிகளை வைத்து எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி தசை வலி , மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற சின்ன சின்ன அறிகுறிகளைக் கூட கண்டுகொள்ளாமல் விடுவது ஆபத்துதான். ஏனெனில் இதுபோன்ற அறிகுறிகள் தீவிர நோயை விளைவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  அந்த வகையில் நீங்கள் மாடிப்படி ஏறுவதில் மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில், வேகமாக ஏற முடியவில்லை எனில் அது இதய பாதிப்பைக் குறிக்கும் அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எப்படி எந்தெந்த வகைகளில் பாதிப்பை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.

  2020 ஆண்டும் ஸ்பானிஷ் ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் ஒருவர் நான்கு படிக்கட்டுகளை ஏற ஒன்று அல்லது அரை நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் எனில் அவருடைய இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். எனவே அவர்கள் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்வது நல்லது என்கின்றனர்.

  இந்த ஆய்வை 165 நபர்களுக்குச் செய்துள்ளனர். அவர்களுக்கு கரோனரி தமனி நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு ஆய்வில் மாடிப்படி ஏற சிரமப்படுவோருக்கு இறக்கும் அபாயம் இரண்டு மடங்கு உள்ளது எனக் கூறியுள்ளது. இதை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் மெல்லிய இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் எனக் கூறியுள்ளது.

  Also read : உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீரை தவிர வேறு எந்த பானங்களை குடிக்கலாம் ?

  எனவே இதுபோன்ற அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்யலாம் என்கிறது. அப்படி வராமல் தடுக்க நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் இதய பாதிப்புகளை தவிர்க்கலாம் என்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: