Home /News /lifestyle /

NetraSuraksha | நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியா? உங்கள் கண் பார்வை மீது கவனம் செலுத்துங்கள்.

NetraSuraksha | நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியா? உங்கள் கண் பார்வை மீது கவனம் செலுத்துங்கள்.

NetraSuraksha

NetraSuraksha

Diabetic Retinopathy | இங்கே NetraSuraksha சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

  சர்க்கரை நோயின் ஆபத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்டர்நேஷனல் டயாபெட்டிஸ் ஃபெடரேஷன் அட்லஸ் 2019 இன் படி, 2000 ஆம் ஆண்டில் சுமார் 151 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  20-79 வயதுக்குட்பட்டவர்களில் நோய் கண்டறியப்பட்ட மற்றும் நோய் கண்டறியப்படாத நபர்களாக வகை 1 மற்றும் வகை 2 என அடங்குகின்றனர். அப்போது, இது உலக மக்கள் தொகையில் 4.6% ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டில், மொத்த எண்ணிக்கை 463 மில்லியனாக அதிகரித்துள்ளன, இது மக்கள் தொகையில் 9.3% ஆகும். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 578 மில்லியன் மக்கள் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது (உலக மக்கள் தொகையில் 10.2%). அதாவது 10 நபர்களில் 1 நபர் பாதிப்புக்கு ஆளாவார்.

  அதிக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட நபர்கள் நோய் கண்டறியப்படாதவர்கள் ஆவார். ஏன் இவ்வாறு நடக்கிறது? பெரும்பாலும் சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள் என்னவென்றால்: சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி எடுத்தல் ஆகும் - இவை அனைத்தையும் நாம் பெரிய அளவில் எடுத்துக் கொள்வதில்லை ஏனெனில் இவை படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. சிலருக்கு, சர்க்கரை நோய் என்பது படுக்கையில் சிறுநீர் கழித்தல், திடீர் எடை இழப்பு மற்றும் மங்கலான கண் பார்வை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்1, மருத்துவரை வழக்கமான முறையில் அணுகுவது நோய் கண்டறிதலுக்கு உதவும்.

  நோய் கண்டறியப்பட்டவுடன், டயாபெட்டிஸ் (குறிப்பாக வகை 2 டயாபெட்டிஸ்) ஐ மிகவும் திறம்பட நிர்வகிக்க முடியும் - அதாவது வழக்கமான உடற்பயிற்சி, உணவுமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் நிர்வகிக்க முடியும், பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் தங்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படவில்லை என்று உணர்கின்றனர். உண்மையாகச் சொல்லப்போனால், ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறிப்பட்டால், வகை 2 டயாபெட்டிஸ் இப்போது மீளக்கூடியதாக கருதப்படுகிறது.

  இருப்பினும், சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், சர்க்கரை நோய் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 2019 ஆம் ஆண்டில், 20-79 வயதுடைய 4.2 மில்லியன் பெரியவர்கள் சர்க்கரை நோய் மற்றும் அதன் சிக்கல்களின் விளைவாக மரணத்திற்கு உள்ளாவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  • டயாபெட்டிஸ், உயர் இரத்த அழுத்தம் அல்லது இரண்டின் கலவையானது, உலகளவில் 80% சிறுநீரக நோயின் இறுதி கட்டத்திற்கு வழிவகுக்கிறது.

  • டயாபெட்டிஸ் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் இரண்டும் இருதய பிரச்சனைக்கு வழிவகுக்கக்கூடியது

  • உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 40 முதல் 60 மில்லியன் மக்களை பாதிக்கும் டயாபெட்டிக் பாதம் மற்றும் கீழ் மூட்டு பிரச்சனைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நோயுற்ற தன்மைக்கான முக்கிய ஆதாரமாகும்

  • நாள்பட்ட புண்கள் மற்றும் உடல் உறுப்பு துண்டிப்புகள் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்து ஆரம்பகால மரண அபாயத்தை அதிகரிக்கும்.


  கூடுதலாக, டயாபெட்டிக் கண் நோய் என்பது சர்க்கரை நோயின் மிகவும் பயப்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும், மேலும் இது இரட்டைப் பார்வை மற்றும் கவனம் செலுத்த இயலாமையுடன் முக்கியமாக டயாபெட்டிக் ரெட்டினோபதி, டயாபெட்டிக் மாகுலர் எடிமா, கண்புரை மற்றும் குளுக்கோமா ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். பெரும்பாலான நாடுகளில், டயாபெட்டிக் ரெட்டினோபதி என்பது உழைக்கும் வயதினரின் கண் பார்வை இழப்பின் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது, இது பேரழிவு தரக்கூடிய தனிப்பட்ட மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 57 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் ரெட்டினோபதி நோயால் பாதிக்கப்படுவார்கள். இது ஒரு அச்சம் ஏற்படுத்தக்கூடிய புள்ளிவிவரமாக உள்ளது.

  மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆரம்ப கட்டங்களில், டயாபெட்டிக் ரெட்டினோபதி முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கும். அப்படியானால் நீங்கள் அறிகுறிகளை காணும் போது, சில கண் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டிருக்கும். இருப்பினும், DR கண்டறியப்பட்ட பிறகு, அதை நிர்வகிக்க முடியும், மற்றும் மேலும் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுக்க முடியும்.

  டயாபெட்டிக் ரெட்டினோபதி கண் பார்வையை எவ்வாறு பாதிக்கிறது? உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள், சரிபார்க்கப்படாமல் இருப்பது, உங்கள் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறிய இரத்த நாளங்களில் தடுப்புகள் உருவாக்கப்படும். விழித்திரை என்பது கண்ணின் பின்புறத்தில் இருக்கும் ஒன்றாகும், இது ஒளியை படங்களாக செயலாக்குகிறது. இரத்த நாளங்களில்  வீக்கம், திரவ கசிவு அல்லது இரத்தப்போக்கு ஏற்படலாம், இது பெரும்பாலும் கண் பார்வை குறைவு அல்லது கண் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கிறது.

  இந்தியாவின் ரெட்டினா சொசைட்டியின் இணைச் செயலாளரான டாக்டர் மனிஷா அகர்வால் கூறியதாவது, ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று என்னவென்றால் வாசிப்பதில் தொடர்ச்சியான சிரமம் ஏற்படக்கூடும், கண் கண்ணாடியை மாற்றினாலும் இந்தப் பிரச்சனை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆரம்ப அறிகுறியாகும், இதனை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அலட்சியப்படுத்தினால், அறிகுறிகள் கண் பார்வைத் துறையில் கருப்பு அல்லது சிவப்பு புள்ளிகள் காணப்படும் அல்லது கண்ணில் இரத்தக்கசிவு காரணமாக கூட கண் பார்வை தெரியாமல் போகலாம்.

  இதில் நல்ல விஷயம் என்று பார்த்தால் டயாபெட்டிக் ரெட்டினோபதி என்பது 100% தடுக்கக்கூடியது. டயாபெட்டிக் ரெட்டினோபதியைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், அது அறிகுறியாக மாறுவதற்கு முன்பு அதைக் கண்டறிய வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் கண் மருத்துவரிடம் (கண்ணாடி கடையில் அல்ல!) ஒரு எளிதான, வலியில்லாத மற்றும் வழக்கமான கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு இது தெரிவதில்லை.

  Network18 இந்த விழிப்புணர்வு குறைபாட்டை சரி செய்ய Novartis உடன் இணைந்து Netra Suraksha' - India Against Diabetes initiative என்பதைத் தொடங்கியுள்ளது. விழிப்புணர்வின் போது, டயாபெட்டிக் ரெட்டினோபதி நோயை எவ்வாறு கண்டறிவது, எவ்வாறு தடுப்பது மற்றும் அதற்கான சிகிச்சையைப் பற்றி  நடத்தப்பட்ட வட்டமேஜை விவாதங்களை Network18 ஒளிபரப்பும். இந்த விவாதங்கள், விளக்கக் காணொளிகள் மற்றும் கட்டுரைகள் மூலம் இந்த நோயைப் பற்றி தெரிவிப்பதன் மூலம், டயாபெட்டிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்படுபவர்கள் தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை தானே முன்வந்து பெற ஊக்குவிப்பதாக இருக்கும் என்று Network18 நம்புகிறது.

  நீங்கள் இதை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் Diabetic Retinopathy Self Check Up ஐ முதலில் மேற்கொள்ளுங்கள். பிறகு, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் அவ்வாறு செய்யும்படி வலியுறுத்துங்கள். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் சர்க்கரை நோயை பரிசோதித்து, உங்கள் குடும்ப நாட்காட்டியில் வருடாந்திர கண் பரிசோதனை தேதியை குறித்துக் கொள்ளவும்.இதை நீங்கள் மறக்க முடியாத தேதியுடன் பரிசோதனையை ஒத்திசைக்கவும், எனவே அது வழக்கமானதாக மாறிவிடும், இனி நீங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.

  உங்கள் கண் பார்வை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும். அதற்குத் தேவையான கவனத்தையும் அக்கறையையும் காட்டுவதில் உங்கள் குடும்பத்தில் முதல் நபராக இருங்கள். அனைத்திற்கும் மேலாக, ஒரு பிரகாசமான எதிர்காலம் மற்றும் உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கு நீங்கள் எப்போதும் தெளிவான நபராக இருக்க வேண்டும். எனவே சுறுசுறுப்பாக இருக்கவும். உங்களை நீங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்கள் உங்களை பார்த்து பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருங்கள். பின்னர், மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

  Netra Suraksha initiative பற்றிய கூடுதல் தகவல்களுக்கு News18.com-ஐ பின்தொடரவும், மற்றும் டயாபெட்டிக் ரெட்டினோபதிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்த தயாராகுங்கள்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Diabetics, Eye care, Health, Netra Suraksha

  அடுத்த செய்தி