Home /News /lifestyle /

NetraSuraksha | நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்பவர் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கண் தொடர்பான சிக்கல்கள்.

NetraSuraksha | நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்பவர் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கண் தொடர்பான சிக்கல்கள்.

NetraSuraksha

NetraSuraksha

Diabetic Retinopathy | இங்கே NetraSuraksha சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

  உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களின் பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது: அதாவது அந்தந்த நேரத்திற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரிபார்ப்பது, ஒவ்வொரு உணவிலும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் கணக்கிடுவது, மருந்துகளை உட்கொள்வது, குளுக்கோஸ் மானிட்டரின் ஸ்ட்ரிப்களை மாற்றுவது, இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது... என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தகையச் சூழ்நிலையில் தினசரி கவனம் தேவைப்படாத நீரிழிவுச் சிக்கல்கள் போன்ற விஷயங்களை நாம் கண்டுகொள்ளாமல் போகலாம். அதனுடன், ஏதேனும் நீரிழிவுச் சிக்கல்கள் இயற்கையில் படிப்படியாக அதிகரிக்கலாம். அவை உங்களை முழுமையாக ஆட்கொண்ட பிறகுதான் நீங்கள் அவற்றை கவனிக்கிறீர்கள், ஆனால், அதற்குள் சேதம் முழுமையடைந்துவிடுகிறது.

  உங்கள் மனச் சுமையை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறோம். எனவே உங்கள் மனதை நிம்மதி கொள்ளுங்கள். இந்த ஆர்ட்டிகலைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் வருடாந்தர கண் பரிசோதனைக்கான உங்கள் காலெண்டரை (கண் மருத்துவரிடம், கண்ணாடி கடையில் அல்ல!) உங்கள் தொலைபேசி காலெண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள். சிக்கலான அறிவுறுத்தல்கள் இல்லை, நீங்களாகவே டாக்டராக நினைத்துக்கொண்டு மருந்துகளை உட்கொள்ள தேவையில்லை மற்றும் அறிகுறிகள் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்கத் தேவையில்லை.

  கீழே உள்ள பட்டியல் பார்ப்பதற்கு கடினமானதாக தோன்றலாம், ஆனால் அவ்வாறு இல்லை. நீரிழிவு நோய் கண்களில் சிக்கல்களை உருவாக்குகிறது, அவற்றை ஆராம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் அவற்றிற்கு எளிதாகச் சிகிச்சையளிக்கலாம். பெரும்பாலான சிக்கல்கள் தடுக்கக்கூடியவை, ஆனால் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு இது தெரிவதில்லை. இந்த சிக்கலை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும்.

  உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமான நீரிழிவு நோயின் அறியப்பட்ட சிக்கலான நீரிழிவு ரெட்டினோபதியின் சிக்கலைச் சமாளிக்க உதவும் மருத்துவம், கொள்கை உருவாக்கம் மற்றும் சிந்தனைக் குழுக்கள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு நிபுணர்களை ஒன்றிணைக்க, Network18 நிறுவனம் Novartis உடன் இணைந்து  'Netra Suraksha' - நீரிழிவிற்கு எதிரான இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.உங்கள் சொந்த மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் பார்வையை சிறப்பாகக் கவனித்துக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன், வட்ட மேசை விவாதங்கள், விளக்கமளிக்கும் வீடியோக்கள் மற்றும் தகவல் தரும் கட்டுரைகளின் ஒளிபரப்பு மூலம் இந்த முயற்சி தகவல்களைப் பரப்புகிறது.

  இதைப் பற்றி விரிவாகப் பார்க்க, முதலில் கண் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  கண் ஒரு கடினமான வெளிப்புறச் சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும். கண்களுக்கு முன்னால் உள்ள தெளிவான, வளைந்த உறை கார்னியா என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய செயல்பாடு ஒளியை மையப்படுத்துவதும், அதே நேரத்தில் கண்களைப்1 பாதுகாப்பதும் ஆகும்.

  கருவிழி வழியாக ஒளி உள்நுழைந்த பிறகு, அது முன் அறை (இது அக்வஸ் ஹ்யூமர் எனப்படும் பாதுகாப்பு திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது) வழியாக, கண்பாவை (இது கருவிழிப்படலத்தில் உள்ள ஒரு துளை, கண்ணின் வண்ணப் பகுதி) வழியாக, அதற்குப் பிறகு அதிகளவு குவியப்படுத்தும் லென்ஸ் வழியாக பயணிக்கிறது. இறுதியாக, ஒளியானது கண்ணின் மையத்தில் உள்ள மற்றொரு திரவம் நிறைந்த அறை வழியாகச் சென்று (விட்ரியஸ்) கண்ணின் பின்புறம், விழித்திரையைத் தாக்குகிறது1.

  விழித்திரை அதன் மீது குவியும் படங்களைப் பதிவு செய்து, அந்த படங்களை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகிறது, அதை மூளை பெற்று டிகோட் செய்கிறது. விழித்திரையின் ஒரு பகுதி நுண்ணிய விவரங்களைப் பார்ப்பதில் சிறப்பு வாய்ந்தது. கூடுதல் கூர்மையான பார்வையின் இந்த சிறிய பகுதி மாகுலா என்று அழைக்கப்படுகிறது. விழித்திரையின் உள்ளேயும் பின்புறமும் உள்ள இரத்த நாளங்கள் மாகுலாவிற்கு ஊட்டமளிக்கின்றன1.

  இப்போது நீரிழிவு நோய் காரணமாக கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பார்ப்போம்

  கண் அழுத்த நோய் (குளுக்கோமா)

  கண் அழுத்த நோய் என்பது, கண்களை மூளையுடன் இணைக்கும் நரம்புத் தொகுப்புகளாக பார்வை நரம்பு என்பதைத் தாக்கும் கண் நோய்களின் ஒரு குழுவாகும். நீரிழிவு நோயானது கண் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது, இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மை ஏற்படலாம்.2

  கண்ணில் அழுத்தம் அதிகரிக்கும் போது கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் விழித்திரை மற்றும் பார்வை நரம்பிற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்களை தாக்குகிறது. விழித்திரை மற்றும் நரம்பு சேதமடைவதால் பார்வை படிப்படியாக இழக்கப்படுகிறது3.

  கண்புரைகள்

  நம் கண்களுக்குள் இருக்கும் லென்ஸ்கள் தெளிவான கட்டமைப்புகள் கொண்டவை, அவை கூர்மையான பார்வையை வழங்க உதவுகின்றன - ஆனால் வயதாகும்போது அவை மங்கலாக மாறும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை எனப்படும் மங்கலான லென்ஸ்கள் உருவாகும் வாய்ப்பு 2-5 மடங்கு அதிகம். நீரிழிவு நோய் இல்லாதவர்களைக் காட்டிலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆரம்ப வயதிலேயே கண்புரை உருவாகலாம் - உண்மையில், நீரிழிவு இல்லாதவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு நோய் தாக்கும் ஆபத்து 15-25 மடங்கு அதிகமாகும்4. அதிக குளுக்கோஸ் அளவுகள் உங்கள் கண்களின் லென்ஸ்களில் வீழ்படிவுகளை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே கண்புரை உருவாகி அவை வேகமாக அதிகரிக்கும்5.

  ரெட்டினோபதி

  நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரையின் அனைத்து கோளாறுகளுக்கும் வழங்கப்படும் பொதுவான சொல். ரெட்டினோபதியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: அவை பெருக்கமடையாதவை மற்றும் பெருக்கமடைபவை. ரெட்டினோபதியின் மிகவும் பொதுவான வடிவமான பெருக்கமடையாதவை வகையைச் சார்ந்த ரெட்டினோபதியில், கண் பலூனின் பின்புறத்தில் உள்ள நுண்குழாய்கள் பைகளை உருவாக்குகின்றன. பெருக்கமடையாத விழித்திரை நோய் மூன்று நிலைகளில் (லேசான, மிதமான மற்றும் கடுமையான) ஏற்படலாம், மேலும் நோய் அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்கள் தடுக்கப்படுகின்றன. பெருக்கமடையும் வகையைச் சார்ந்த ரெட்டினோபதியில், இரத்த நாளங்கள் மிகவும் சேதமடைந்து அவை மூடப்படும். அதன் விளைவாக, விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் வளர ஆரம்பிக்கும். இந்த புதிய நாளங்கள் பலவீனமானவை என்பதால் இரத்தம் கசிந்து, பார்வை தடைபடும். புதிய இரத்த நாளங்கள் வடு திசுக்களின் வளர்ச்சியையும் ஏற்படுத்தும். வடு திசு சுருங்கிய பிறகு, அது விழித்திரையைச் சிதைக்கலாம் அல்லது அந்த இடத்திலிருந்து அதை வெளியே இழுக்கலாம், இது விழித்திரைப் பற்றின்மை எனப்படும்6.

  மாகுலர் எடிமா என்பது நீரிழிவு ரெட்டினோபதி நோய்த்தொகுப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மற்றொரு கோளாறு ஆகும். நாம் படிக்கவும், வாகனம் ஓட்டவும் மற்றும் முகங்களைப் பார்க்கவும் தேவைப்படும் பகுதி விழித்திரையின் மாகுலா என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். நீரிழிவு நோய் மாகுலாவின் வீக்கத்திற்கு வழிவகுக்கும், இது நீரிழிவு மாகுலர் எடிமா என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த நோய் கண்ணின் இந்த பகுதியில் கூர்மையான பார்வையை அழித்து, பகுதியளவு பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். மாகுலர் எடிமா பொதுவாக நீரிழிவு ரெட்டினோபதியின் பிற அறிகுறிகளைக் கொண்டவர்களில் உருவாகிறது2.

  பின்வரும் சந்தர்ப்பங்களில் ரெட்டினோபதி நோய் உருவாகி தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்6:

  • உங்களுக்கு நீண்ட காலமாரக நீரிழிவு நோய் உள்ளது

  • உங்கள் இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு மோசமாக உள்ளது.

  • நீங்கள் புகைப்பிடிக்கிறீர்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொலஸ்ட்ராலை கொண்டுள்ளீர்கள்.


  ஆனால், உறுதியளித்தபடி, நாங்கள் உங்களிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான், உங்கள் கண் மருத்துவரிடம் வருடாந்திர கண் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் - இது வழக்கமான மற்றும் வலியற்ற கண் பரிசோதனையாகும், மேலும் இது நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. நீங்கள் எவ்வாறு தொடங்கலாம் என்பதை இங்கே காணுங்கள் - உங்கள் நோய் ஆபத்தை மதிப்பிடுவதற்கு எங்கள் ஆன்லைன் நீரிழிவு ரெட்டினோபதி சுய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். பின்னர், News18.com தளத்தில் உள்ள  Netra Suraksh முன்முயற்சிப் பக்கத்தைப் படிக்கவும், அங்கு அனைத்து விவரங்களும் (வட்டமேசை விவாதங்கள், விளக்க வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள்) உங்களுக்குக் கிடைக்கும்.

  உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில், சில கூடுதல் படிகள் சேர்கின்றன. எனவே தயங்க வேண்டாம். நீரிழிவு ரெட்டினோபதியைத் தடுப்பதற்கும், உங்கள் பார்வையைப் பாதுகாப்பதற்கும் இன்றே உங்கள் முதல் படியை மேற்கொள்ளுங்கள்.

  குறிப்புகள்:
  Published by:Selvi M
  First published:

  Tags: Diabetics, Eye care, Health, Netra Suraksha

  அடுத்த செய்தி