ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மூக்கிலிருந்து இரத்தம் கசிய வைத்து மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான வைரஸ் : சமாளிக்க இந்தியா தயாரா..? ICMR பதில்!

மூக்கிலிருந்து இரத்தம் கசிய வைத்து மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான வைரஸ் : சமாளிக்க இந்தியா தயாரா..? ICMR பதில்!

CCHF வைரஸ்

CCHF வைரஸ்

இந்த தொற்று நாசியிலிருந்து உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் அசாதாரண ரத்த போக்குக்கு வழிவகுக்கும். WHO-ன் கூற்றுப்படி, கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) 19 உயிர்களை இதுவரை கொன்றுள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

கோவிட்-19 முதல் குரங்கு அம்மை வரை உலகம் பல வைரஸ் வெடிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், கவலைக்குரிய மற்றொரு வைரஸ் ஈராக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்ட குரங்கு அம்மை இப்போது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

இந்நிலையில் உடலில் இருக்கும் ரத்தம் மூக்கின் வழியே கசிந்து ஒரு கட்டத்தில் மரணத்தை ஏற்படுத்த கூடிய புது வித வைரஸான ரத்தம் கசியும் காய்ச்சல் வைரஸ் (nose-bleed fever virus) ஈராக்கில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை ஈராக்கில் சுமார் 120 பேருக்கு nose-bleed fever என்றும் அழைக்கப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் ( Crimean-Congo hemorrhagic fever - CCHF) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்று நாசியிலிருந்து உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் அசாதாரண ரத்த போக்குக்கு வழிவகுக்கும். WHO-ன் கூற்றுப்படி, கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) 19 உயிர்களை இதுவரை கொன்றுள்ளது. மூக்கில் ரத்த கசிவை உண்டாக்கும் காய்ச்சலின் சமீபத்திய பரவல் நம்மை ஏன் கவலையடைய செய்ய வேண்டும் என்றால் இது கடந்த காலத்தில் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது பொதுவாக உண்ணி மூலம் பரவுகிறது.

முதன்முதலில் CCHF 1944-ல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மேற்கு கிரிமியன் பகுதியில் அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட உண்ணி கடித்தால் அல்லது பாதிக்கப்பட்ட ரத்தம் அல்லது விலங்குகளின் சடலங்களுடன் தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. CCHF-ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தம், வாந்தி, மலம், சிறுநீர் உள்ளிட்டவை காரணமாக மனிதர்களில் இரண்டாம் நிலை தொற்று ஏற்படுகிறது. தலைவலி, அதிக காய்ச்சல், முதுகு வலி, மூட்டு வலி, அடிவயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிவந்த கண்கள், சிவந்த முகம் உள்ளிட்டவை அறிகுறிகளாக வகைப்படுத்தப்படுகிறது.

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா பேசுகையில், பல வளர்ந்து வரும் தொற்றுகளுக்கான ஹாட்ஸ்பாட்டாக இந்தியா கருதப்பட்டாலும், அனைத்தையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார். CCHF-வின் தீவிரம் மற்றும் பரவும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் - தேசிய வைராலஜி நிறுவனமும மனிதர்கள், விலங்குகள் மற்றும் உண்ணிகளில் விரிவான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ஈராக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இறந்தவர்களில் ஐந்தில் இருவர் மத்தியில், உள் மற்றும் வெளிப்புறமாக, குறிப்பாக மூக்கிலிருந்து கடும் ரத்த போக்கு காணப்பட்டுள்ளது. இவை CCHF-ன் பொதுவான அறிகுறிகளாகும் என்றார் டாக்டர் பாண்டா.

மோலார் பிரக்னன்ஸி என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் ஆபத்துகள்..!

மூத்த ICMR விஞ்ஞானிகள் கூறுகையில், காய்ச்சல் ஒரு ஜூனோடிக் வைரஸால் ஏற்படுகிறது.இது அதன் அதிக பரவல் மற்றும் தொற்று காரணமாக இறப்பு விகிதங்கள் அதிகரிக்க வழிவகுக்கும். இதனிடையே ஆராய்ச்சிகளின் விளைவாக கண்டறியப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்கள் சந்தேகத்திற்குரிய CCHF பாதிப்புகளை சரியான நேரத்தில் கண்டறிய உதவியது என்றனர். CCHF பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. எனவே சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்டில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது, கண்காணிப்பு மற்றும் பிளேட்லெட்டுகள், புதிய உறைந்த பிளாஸ்மா மற்றும் எரித்ரோசைட் தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில்...

2011-ல் குஜராத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மொத்தம் 128 பாதிப்புகள் மற்றும் 54 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2011-2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குஜராத்தில் இந்த வைரஸ் அதிகமாக பரவியதன் விளைவாக 34 CCHF பாதிப்புகள் மற்றும் 16 இறப்புகள் ஏற்பட்டன. கடந்த 2014-ல் ராஜஸ்தானில் ரத்தக்கசிவு காய்ச்சல் (VHF) என சந்தேகிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் CCHF இந்தியாவில் பரவுவதை உறுதிப்படுத்தியது.

இந்த 3 இடங்களில் வலி இருக்கிறதா..? கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்!

2019-ஆம் ஆண்டில், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அதிகபட்சமாக CCHF பாதிப்புகள் 50 சதவீத இறப்பு விகிதத்துடன் கண்டறியப்பட்டன. இதனிடையே கடந்த 2016-ல் மஸ்கட்டில் இருந்து குஜராத்தின் கட்ச் நகருக்குத் திரும்பிய ஒரு இந்திய தொழிலாளி, வெளிநாட்டிலிருந்து நோயை சுமந்து வந்த முதல் CCHF நோயாளி ஆனார்.

தற்போதைய நிலவரப்படி நாட்டின் விஞ்ஞானிகளுக்கு வைரஸின் நடத்தை மற்றும் அதை சமாளிக்கும் விதம் குறித்து தெளிவான யோசனை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது ICMR.

First published:

Tags: Health