முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் 9 வகை உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும்..! அரிதான உணவு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்..

வெறும் 9 வகை உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும்..! அரிதான உணவு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்..

ஜெனா ஜென்டென்டர் என்ற 20 வயது பெண்

ஜெனா ஜென்டென்டர் என்ற 20 வயது பெண்

சிறு வயது முதலே உணவு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஜெனாவுக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், MCAS என்ற குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உணவு, சுற்றுசூழல், ஒரு சில நறுமணம் என்று அலர்ஜி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஒவ்வாமை ஏற்பட்டால், உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, இந்தியாவில் கொடி வகை உணவுகளை சாப்பிட்டால் அலர்ஜி அதிகரிக்கும் என்று அதனை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அலர்ஜியால் மொத்தமே 9 வகை உணவுகளை மட்டும் தான் சாப்பிட முடியுமாம். அப்படி என்ன அலர்ஜி, அதை எப்படி எதிர்கொள்கிறார் என்று இங்கே பார்க்கலாம்.

9 வகை உணவுகளை மட்டுமே சாப்பிடும் ஜெனா

ஜெனா ஜென்டென்டர் என்ற 20 வயது பெண்ணுக்கு குழந்தை பருவத்தில் இருந்து பெரும்பாலான உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக வெவ்வேறு உணவுகளை சாப்பிட்டுப் பார்த்து எந்த உணவெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லையோ, ஒவ்வொன்றாக தவிர்த்து வந்திருக்கிறார். தற்போது ஜெனாவால் ஒன்பது உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்திருந்தார.

20 வயதான ஜென்னா டர்க்கி, மகி மகி, வெள்ளரி, பீன்ஸ், ஜூக்கினி, ஆலிவ் எண்ணெய் உப்பு, லைம் மற்றும் குளுக்கோஸ் சப்ளிமெண்ட்ஸ் ஆகிய உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். இதை தவிர்த்து எந்த உணவுகளை சாப்பிட்டாலும் இவருக்கு தீவிரமான ஒவ்வாமை ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். மளிகை ஷாப்பிங் செல்வது என்றால் இந்த ஒன்பது வகை உணவுகளை மட்டுமே வாங்க முடியும் என்று இவர் வெளியிட்ட வீடியோவில் பதிவு செய்திருந்தார்.

Read More : கேக்கை ஆடையாக அணிந்த மணப்பெண்..! வெட்டி சாப்பிட்ட விருந்தினர்கள்..! வைரல் வீடியோ..

மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்ற அரிதான ஒவ்வாமை

சிறு வயது முதலே உணவு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஜெனாவுக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம், MCAS என்ற குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் மாஸ்ட் செல்கள், நாம் சாப்பிடும் உணவுகள் மீது ரியாக்ட் செய்வதால், இந்த குறைபாடு ஏற்படுகிறது.

அமெரிக்க மரபணு மற்றும் அரிதான நோய்கள் தகவல் மையத்தின் கூற்று படி, MCAS பாதிப்பு இருந்தால், மாஸ்ட் செல்கள் சாதாரண உணவை தவறாக எண்ணிக் கொண்டு, பல்வேறு ரசாயன கூறுகளை வெளியிடத் தொடங்கும். இதனால் சருமத்தில் மட்டுமல்லாமல், வயிற்றுப்பகுதி, உணவுக் குழாய், நுரையீரல், இதயம் மற்றும் நரம்பு மண்டலம் என்று தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தும்.




 




View this post on Instagram





 

A post shared by Jenna Gestetner :) (@jennaxhealth)



உடல் முழுவதும் மாஸ்ட் செல்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான அலர்ஜி ரியாக்ஷனுக்கும் வெவ்வேறு ரசாயனங்களை வெளிப்படுத்துகின்றன. சில ரசாயனங்கள் நரம்பு குழாய்களை பாதித்து, மூச்சுத் திணறலை உண்டாக்குகின்றன.

MCAS பாதிப்பு இருப்பவர்கள், அனாஃப்லக்சிஸ் என்ற தீவிரமான ஒவ்வாமையால் உயிரிழக்க நேரிடும்.இந்த நோயில் அறிகுறிகள், சாப்பிட்ட தொடங்கிய உடனேயே வயிற்று வலி, உப்புசம், குமட்டல் உணர்வு ஆகியவை ஏற்படும். மேலும், சாப்பிட்ட பின்பு, தீவிரமான வயிறு வலி, வியர்வை, பேதி, வீசிங், தலை சுற்றல், ரத்த அழுத்தம் குறைவு போன்றவை அடங்கும்.

ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையில் இந்த அறிகுறி இருப்பதைக் கண்டறியலாம்.குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடிவதால், ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க, ஜெனா ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 6 முறை சாப்பிடுகிறார்.

First published:

Tags: Food allergy, Health