பல காலங்களாக சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைகளில் மிகவும் முக்கியமான ஒன்று, பெண்களின் ஹைமன், அதாவது கன்னித்திரை சார்ந்தது! திருமணமாகும் வரை பெண் விர்ஜினாக இருக்க வேண்டும். பாலியல் உறவில் முதல் முறையாக ஒரு ஈடுபடும் போது அவரின் கன்னித்திரை கிழியும் அல்லது உடையும், சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம்.
இதன் மூலம் ஒரு பெண் விர்ஜினாக இருக்கிறார் என்பதை உறுதி செய்யலாம் என்று கன்னித்திரை சார்ந்த பல்வேறு தவறான நம்பிக்கைகள், பெண்களை இழுவுபடுத்துவதாக உள்ளது. பாலியல் உறவு இல்லாமலே, பல்வேறு சூழல்களில் பெண்களின் ஹைமன் உடையும் வாய்ப்புள்ளது. பல காலமாக சொல்லப்பட்டு வரும் தவறான கருத்து மற்றும் நம்பிக்கைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
தவறான கருத்து: ஹைமன் என்பது ஒரு திரை, அது உடையும்
மருத்துவ ரீதியாக ஹைமன் என்பது, வஜைனாவை சுற்றியிருக்கும் மெம்ப்ரேன் நிறைந்த திசுக்கள் ஆகும். அது ஒரு தடையாக செயல்படாது. பின்னல் அல்லது போனிடெயிலைப் போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரப்பர் பேன்ட் போலத் தான் ஹைமன். எனவே, அதில் ஒரு திறப்பு இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து தான் வஜைனால் டிஸ்சார்ஜ் அல்லது ரத்தக்கசிவு ஏற்படுகிறது. எனவே, ஹைமன் என்பது உடையாது அல்லது கிழியாது. அது ஸ்ட்ரெட்ச் ஆகும்.
டாம்பான் பயன்படுத்தினால் வர்ஜினிட்டி இழக்க நேரிடும்
திருமணத்துக்கு முன் வர்ஜினிட்டி போய்விடும் - டாம்பான் பயன்படுத்துவது பலரும் பற்றி மிகவும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது தான்! டாம்பான் பயன்படுத்தினால் கன்னித்திரை கிழிந்துவிடும், இதனால் வர்ஜினிட்டி இழக்க நேரிடும் என்று மிகப்பெரிய தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. வஜைனாவுக்குள் டாம்பானை இன்சர்ட் செய்வதால் கன்னித்திரை கிழியாது.
முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்ளும் போது கிழியும்
முதல் முறை ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, (penetrative sex), கன்னித்திரை கிழியும் என்பது காலம்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மேலே கூறியது போல, கன்னித்திரை கிழியாது, அதன் நெகிழ்வுத் தன்மையால் ஸ்ட்ரெட்ச் ஆகும். சிலருக்கு இதனால் ரத்தக்கசிவு ஏற்படும். பல பெண்களுக்கு முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, ஹைமன் ஸ்ட்ரெட்ச் ஆகும் போது ரத்தக் கசிவு ஏற்படாது.
புரோபயோடிக் உணவுகள் பெண்ணுறுப்பு தொற்று அபாயங்களை தடுக்கிறது - ஆய்வு
மேலும், தீவிரமாக விளையாடினாலும், உடற்பயிற்சி செய்தாலும் சைக்கில் ஓட்டினாலும், ஸ்கிப்பிங் செய்தாலுமே கன்னித்திரை கிழிவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே கன்னித்திரை கிழிவதற்கும் டாம்பான் பயன்பாட்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
கன்னித்திரை ஆய்வு செய்து ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்று கூற முடியும்
ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும்போது, அவரின் ஹைமன் பாதிக்கிறதா என்பதைக் கூற முடியாது. எனவே, அதன் மூலம் ஒரு பெண் வன்புணர்வுக்கு உள்ளாகி இருக்கிறாரா என்பது தெரியாது. மேலும், ஹைமனில் இருக்கும் காயங்கள் அல்லது பாதிப்புகள் வன்புணர்வால் ஏற்பட்டது என்று உறுதி செய்ய முடியாது. எனவே, ஹைமன் பரிசோதனை செய்து கைனகாலஜிஸ்ட் கூட பாலியல் வன்புணர்வு என்பதைக் கூற குடியாது.
உடைந்த கன்னித்திரை, மீண்டும் வளரும்
ஹைபன் என்பது ஒரு டிஷ்யூ, எனவே அது மீண்டும் வளராது. ஒரு சில பெண்களுக்கு கன்னித்திரை ஸ்ட்ரெட்ச் ஆகும் போது, எந்த மாற்றமும் ஏற்படாது. அது உடைகிறது, ரத்தக்கசிவு ஏற்படுகிறது, என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vagina Health, Women Health