முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கிரெடிட் கார்டு எடையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் மனிதர்கள்... அதிர்ச்சி தரும் ஆய்வு...!

கிரெடிட் கார்டு எடையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் மனிதர்கள்... அதிர்ச்சி தரும் ஆய்வு...!

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

”பிளாஸ்டிக் மனித சூழலியல் அமைப்பை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது”

  • Last Updated :

மனிதர்கள் தங்களுக்கேத் தெரியாமல் ஒரு வாரத்திற்கு கிரெட் கார்டு எடைக்கு இணையான பிளாஸ்டிக் உண்பதாக பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு உறுதி செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாஸ்டல் பல்கலைக் கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் மிகச் சிறிய அளவிலான 2000 பிளாஸ்டிக் துகள்களை ஒவ்வொரு வாரமும் உட்கொள்கிறோம் என்கிறது. அது கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு 21 கிராம் எடையைக் கொண்டது. அதே ஒரு வருடத்திற்குக் கணக்கிட்டால் 250 கிராம் எடை கொண்ட பிளாஸ்டிக்கை நாம் உட்கொள்கிறோம்.

இந்த ஆய்வை உலக வனவிலங்கு நிதி அமைப்பு ( World Wildlife Fund ) 50 வகையான ஆராய்ச்சித் தகவல்களை வைத்து ஆய்வு செய்துள்ளது. ஆய்வின் இறுதியில் ”பிளாஸ்டிக் மனித சூழலியல் அமைப்பை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. இந்த பிரச்னைக் குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

"இந்த ஆய்வு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை ஒலி. இது வெறும் பிளாஸ்டிக் மாசுபாடு என்று கருதிவிட முடியாது. கடல் , கடல் சார் உயிரினங்கள் , தற்போது மனிதர்களையும் தாக்கத் தொடங்கிவிட்டது. இதிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்று தோன்றுகிறது" என உலக வனவிலங்கு நிதி அமைப்பின் இயக்குநர் மார்கோ லம்பெர்டினி கூறியுள்ளார்.

மேலும் அவர் “இது மனித உடலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியது. இது உலக அளவிலான பிரச்னை. எனவே மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்யக் கூடிய பிளாஸ்டிக்கை தவிர்த்து இயற்கை வழியில் செல்வது நல்லது” எனக் கூறியுள்ளார்.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

top videos


    First published:

    Tags: Plastic Ban