கோவிட் தடுப்பூசிக்கு பின் கொரோனா Vs பக்கவிளைவுகள் : கண்டுபிடிப்பது எப்படி?

தடுப்பூசி

தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் breakthrough infection என அழைக்கிறோம். அவை பெரும்பாலும் மிக சாதாரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு உருவாகும் சந்தேகங்களுககான பதிலை நிபுணர்கள் உலகம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தொற்று ஏற்படுவதற்கும், பக்கவிளைவுகளால் வரும் அறிகுறிகளையும் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என்பது மக்களிடையே இருக்கும் பரவலான கேள்வி. மேலும், தடுப்பூசியின் செயல்பாடு மற்றும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லஹாரியா (Chandrakant Lahariya) விளக்கம் கொடுத்துள்ளார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் டெல்டா பிளஸ் வேரியண்டால் பாதிக்கப்பட்டு இறப்பை தழுவியுள்ளனர். இதனால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு வரும் வேரியண்டுகளில் தடுப்பூசிகள் வீரியத்துடன் செயல்படுவதில்லையா?

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தற்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 100 % பாதுகாப்பு கொடுப்பவை அல்ல. இப்போது இருக்கும் தடுப்பூசிகள் தொற்றின் தீவிரம் மற்றும் பாதிப்பை குறைப்பவை மட்டுமே. மேலும், சில தடுப்பூசிகள் இன்னும் பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 60 முதல் 95% விழுகாடு தொற்றின் தீவிரத்துக்கு எதிராக போராடுபவையாக உள்ளன. இறப்பு விகிதத்தை குறைக்கின்றன. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு மிகக் கடுமையான தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களும் உண்டு என்பதால், யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தடுப்பூசி எடுத்துக்கொண்டிருந்தாலும், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.



தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும் நீண்ட நாள் கோவிட் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இருக்குமா?

தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் breakthrough infection என அழைக்கிறோம். அவை பெரும்பாலும் மிக சாதாரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், மற்ற நேரங்களில் இருப்பதுபோலவே பாதிப்புகளை கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. breakthrough infection -ஆல் பாதிக்கப்பட்டவர்களும் கோவிட் வைரஸூக்குப் பிந்தைய அறிகுறிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Explainer | சத்தமில்லாமல் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம்… அறிகுறிகள் என்னென்ன? ஓர் அலர்ட் பார்வை!

தடுப்பூசிக்குப் பிறகு தொற்று ஏற்படுவதையும், பக்கவிளைவுகளையும் அறிந்து கொள்வது எப்படி?

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த ரிசல்டுகளின் முடிவுகளை பாதிக்காது. கொரோனா தொற்று இருந்தால், பாசிடிவ் என்ற ரிசல்ட் வரும். அதன்பின்னர், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை முறைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசியால் வரும் பாதிப்புகள் அதிகபட்சம் 3 நாட்களுக்குள் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவீர்கள்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு வரும் பக்கவிளைவுகள் என்ன?

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தடுப்பூசி இல்லை. 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, அனைவருக்கும் இருக்கும் அறிகுறிகளே தென்படுகின்றன. காய்ச்சல், சளி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் மூலம் தொற்று உள்ளதை யூகித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு அதிகளவு பாதிப்பு பரவல் இருக்கும்போது மட்டுமே, அவர்களுக்கு ஏற்படும் பிரத்யேக அறிகுறிகளை அறிந்து கொள்ள முடியும்.



குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் இருப்பது என்ன?

12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு ZyCoV-D என்ற தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கோவாக்சின் பரிசோதனை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்டா வேரியண்ட் குழந்தைகளை பாதிக்கும்போது, வெளிப்படும் அறிகுறிகள் என்ன?

சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பாதிப்பின்போது ஏற்பட்ட அறிகுறிகள் மட்டுமே தென்படும். இதில் வித்தியாசமான அறிகுறிகள் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 
Published by:Sivaranjani E
First published: