ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற டீடாக்ஸ் டிப்ஸ்..!

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற டீடாக்ஸ் டிப்ஸ்..!

நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் ட்ரிங்ஸ்

நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் ட்ரிங்ஸ்

என்னதான் டயட் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் இது போன்ற பண்டிகை காலங்களில் லட்டுக்களும், ஜிலேபிகளும், பால்கோவாக்களும் யாரையுமே மயக்கிவிடும். உறவினர்கள் சூழ்ந்திருக்க எத்தனை பலகாரங்கள் உண்கிறோம் என்ற கணக்கு கூட இல்லாமல் பிடித்ததை எல்லாம் ஒரு கட்டு கட்டி இருப்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைவருக்கும் பண்டிகை காலம் என்றாலே குஷி ஆகிவிடும். அதிலும் முக்கியமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயுத பூஜை தீபாவளி என இரண்டு முக்கிய பண்டிகைகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. பண்டிகை காலங்களில் பல்வேறு விதமான பலகாரங்களும் உணவு வகைகளும் நமது வயிற்றிற்குள் சென்றிருக்கும்.

என்னதான் டயட் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் இது போன்ற பண்டிகை காலங்களில் லட்டுக்களும், ஜிலேபிகளும், பால்கோவாக்களும் யாரையுமே மயக்கிவிடும். உறவினர்கள் சூழ்ந்திருக்க எத்தனை பலகாரங்கள் உண்கிறோம் என்ற கணக்கு கூட இல்லாமல் பிடித்ததை எல்லாம் ஒரு கட்டு கட்டி இருப்போம். அந்த நேரத்தில் இவை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், உடலை பொறுத்த அளவில் இவை தேவையற்ற மற்றும் அதிக கொழுப்புகள் உடலில் சேர்வதற்கும் உடலில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும் காரணமாக இருக்கக்கூடும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சில குறிப்பிட்ட வழிமுறைகளை பயன்படுத்தி உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றலாம்.

எலுமிச்சை சாறு குடிநீர்:

காலையில் எழுந்ததும் மிதமாக சூடுபடுத்தப்பட்ட குடிநீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் அதனை குடித்து இரண்டு மணி நேரம் கழித்து அதே போல் எலுமிச்சை சாறு கலந்து இந்த முறை சிறிதளவு உப்பு கலந்து மீண்டும் குடிக்க வேண்டும். அதன் 2 மணி நேரம் கழித்து தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை பருக வேண்டும். இவ்வாறு செய்து வர உடலில் சேர்ந்துள்ள நச்சு விரைவில் வெளியேறிவிடும்.

Also Read : என்ன சட்டுனு தீபாவளி முடிஞ்சிருச்சுனு ஒரே ஃபீலிங்கா... கொண்டாட்ட மனநிலையிலிருந்து மீண்டு வர டிப்ஸ்..!

காய்கறிகளை உண்ண வேண்டும்:

ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு மசாலா கலந்து உருவாக்கப்பட்ட சாலட் வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வேர்க்கடலைகள், பீன்ஸ், பச்சை காய்கறிகள், கேரட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுகின்றன.

நொறுக்கு தீனிகள்:

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பேக்கரி ப்ராடக்ட் களையும், எண்ணெய்யில் பொரித்த சிப்ஸ்களையும் உண்பதற்கு பதிலாக உலர்ந்த பழங்களையும், ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளையும் உண்ணலாம். மேலும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எதற்காக பண்டிகை காலம் முடிந்த பின் இதனை செய்ய வேண்டும்?

அதிகமான மக்கள் பண்டிகை காலங்களின் போது பலவிதமான உணவு வகைகளையும், தின்பண்டங்களையும் வரைமுறையின்றி உட்கொள்கின்றனர். இதனை தவறு என்றும் கூறமுடியாது. கொண்டாட்ட மனநிலையில் இதைப்பற்றிய அளவெடுகள் எல்லாம் மனதில் ஓடாது. எனவே அவற்றை உண்ட பிறகு அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளை சரி செய்யும் விதமாக உடலில் உள்ள நச்சுக்களை முழுவதுமாக வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். அதில் முதல் படியாக உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கலோரிகளை குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். இதனால் உடல் எடை சரியான அளவில் வைத்திருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது.

Also Read : தலைவலி இருக்கும்போது இந்த டீயை போட்டு குடிச்சு பாருங்க.. இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..!

சர்க்கரை சேர்ந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்:

உடலில் அதிக அளவு சர்க்கரை சேர்ந்தால் உடல் எடை கூடுவதற்கும் உடல் சோர்வு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றிற்கும் வழி வகுக்கும். எனவே சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள் மற்றும் கேக்குகள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும்.

நச்சுகள் வெளியேற்றுவதால் என்ன பயன்?

உடல் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படுவதற்கும் உடலில் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும் உடலானது தன்னைத்தானே சுத்தப்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அதிக எடை சேராமலும் பார்த்துக் கொள்கிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Deepavali, Detox