ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்கள் மது மருந்தினால் கருத்தரித்தலை எவ்வாறு பாதிக்கும்..? ஏன் அவசியம் தவிர்க்க வேண்டும்..?

பெண்கள் மது மருந்தினால் கருத்தரித்தலை எவ்வாறு பாதிக்கும்..? ஏன் அவசியம் தவிர்க்க வேண்டும்..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 56 : குழந்தை வேண்டுமென்று முயற்சிக்கும் பெண்கள் ஆல்கஹால் அருந்தும் பொழுது அது அவர்களுடைய ஹார்மோன் அளவுகளை தாறுமாறாக்குகிறது. இதனால் கருமுட்டை வெளியாதல், கருவுறுதல் மற்றும் கருப்பதிதல் போன்ற எல்லா படிகளிலும் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் அதனால் கர்ப்பம் அடைவது தாமதமாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீத்து மிகவும் சுறுசுறுப்பான பெண்மணி. வயது 30 . திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிவிட்டன. சென்னையில் அவருடைய குடும்ப தொழில்களை கவனித்து வருகிறார். உள்நாட்டில் நிறைய பயணங்களும் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்றுவர வேண்டிய அவசியமும் இருக்கும்.

அவருடைய கணவரும் அவருடைய தொழிலையே கவனித்துக் கொள்கிறார். அன்று காலையிலேயே மருத்துவமனையில் நீத்து காத்திருந்தார்.

அவரே ஆரம்பித்தார்." டாக்டர்! என்னுடைய பிசினஸ் சம்பந்தமாக நிறைய மீட்டிங்ஸ் இருக்கும். அதனால் மற்றவர்களோடு சேர்ந்து சிறிது மது அருந்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனக்கும் சில சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது . முடிந்த அளவு அதிக ஆல்கஹால் உள்ள வகைகளை நான் அருந்துவதில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் கூட ஒயின் மட்டுமே அருந்துவேன்.

இப்பொழுது குழந்தைக்காக திட்டமிடலாம் என்று இருக்கிறேன். டிரிங்க்ஸ் எடுத்தால் கருத்தரிப்பது தாமதமாகுமா? கர்ப்பமாக இருக்கும் போது நான் மது அருந்தினால் குழந்தையை பாதிக்குமா? எந்த அளவுக்கு மது அருந்தலாம்? ஏதாவது அளவு உள்ளதா? இது குறித்து உங்களுடைய ஆலோசனை தேவை. "என்றார்.

என் பதில்:

உலக அளவில் பல்வேறு நாடுகளில் நடந்துள்ள ஆய்வுகளில் மது அருந்தும் பெண்களுக்கு கருத்தரிப்பது, மற்ற பெண்களோடு ஒப்பிடும் பொழுது தாமதமாகும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் கட்டாயமாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

Also Read : என் கணவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்... இதனால் கரு தங்குவது தள்ளி போகுமா..?

குழந்தை வேண்டுமென்று முயற்சிக்கும் பெண்கள் ஆல்கஹால் அருந்தும் பொழுது அது அவர்களுடைய ஹார்மோன் அளவுகளை தாறுமாறாக்குகிறது. இதனால் கருமுட்டை வெளியாதல், கருவுறுதல் மற்றும் கருப்பதிதல் போன்ற எல்லா படிகளிலும் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் அதனால் கர்ப்பம் அடைவது தாமதமாகும்.

பெண்களுக்கு மாதவிடாயை கட்டுப்படுத்தக்கூடிய முக்கியமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். இந்த ஹார்மோனை ஆல்கஹால் பாதிப்பதால் கருமுட்டை உருவாகுதல் கர்ப்பப்பையில் உள்ள கருப்பதிவதற்கான ஜவ்வு வளர்ச்சி கருப்பதிதல் போன்றவை பாதிக்கப்படுகிறது. அதனால் சில மாதங்கள் கருமுட்டை வெளியாகலாம் அல்லது சில மாதங்களில் கருமுட்டை வெளியாகாமல் மாதவிடாய் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். ஓரளவு ஆல்கஹால் எடுத்துக் கொண்டாலே இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலத்தில் மது அருந்தும் பொழுது பல்வேறு விதமான கர்ப்ப கால சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக நேரடியாக ஆல்கஹால் குழந்தையை பாதித்து ஆல்கஹால் சின்றோம் என்ற நோய் குழந்தைக்கு உண்டாகலாம்.

இந்த நோயில் குழந்தைக்கு உடல் வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ,கற்றல் பிரச்சனைகள் பழகுவதில் பிரச்சனைகள் போன்ற பல்வேறு குறைபாடுகள் ஏற்படலாம். இவை யாவும் நிரந்தரமானவை . கர்ப்பிணித்தாய் ஓரளவு மது அருந்தினாலே இது போன்ற குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கர்ப்ப காலத்தில் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Also Read : கர்ப்பப்பை உன்னுடையது.. குழந்தை என்னுடையது... வாடகை தாய் முறை எல்லோருக்கும் சாத்தியமா..?

அத்துடன் குறைமாத பிரசவம், கருச்சிதைவு, கர்ப்பகால ரத்தப்போக்கு, குறைந்த எடையுள்ள குழந்தை போன்ற பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்போது நீத்து.

"இதுவரை மது அருந்தியதால் எனக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு இருக்குமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?" என்றார்

மது பெரும்பாலும் கல்லீரலை தான் பாதிக்கும். எனவே கல்லீரலுக்கான டெஸ்ட்கள் மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தாலே ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறினேன். LFT டெஸ்ட் எடுத்து பார்த்தோம் பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில் இரண்டுமே நார்மலாக இருந்தது.

குறிப்பிட்ட ஒரு காலம் இல்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் ஆல்கஹாலை முழுமையாக நிறுத்திவிட்டு போலிக் ஆசிட் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு கர்ப்பத்திற்காக முயற்சி செய்தால் ஆரோக்கியமான கரு உருவாவதற்கான வாய்ப்பு இருக்கும்.

இப்போது நீத்து"புரிந்தது டாக்டர்! நான் நிறுத்திவிடுகிறேன். போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுக்க துவங்குகிறேன்" என்றார்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol consumption, Pregnancy, பெண்குயின் கார்னர்