கையெழுத்து ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கைரேகையைப் போலவே வேறுபட்டு காணப்படுவதோடு தனித்துவமானது. குறிப்பாக எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம், வார்த்தைகளுக்கிடையே இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றைக் “கிரிபாலாஜி“ எனப்படும் கையெழுத்து கலையின் மூலம் ஆராயும் போது அந்த எழுத்துக்களை எழுதியவர் எந்த குணாதிசயங்களைக் கொண்டிருப்பார் என அறியமுடியும் என்பது அறிந்ததே.
ஆனால் உங்களின் கையெழுத்து உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கிறது ஆய்வுகள். பொதுவாக உங்கள் மூளை உங்கள் கையெழுத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில் ஏற்கனவே மேற்கொண்டிருந்த பல ஆய்வுகள், ஒரு நபர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் கையெழுத்தில் மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்கிறது.
கையெழுத்தின் மூலம் தனிநபரின் ஆரோக்கியம்....
உங்களது ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் கையெழுத்து என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால் வரைபடவியல் வழியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் எழும் எழுத்துக்கள் நீண்ட வாக்கில் அதாவது standing linesல் இருந்தால் உங்களுக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதைக் குறிக்கிறது.
இதேப்போன்று நீங்கள் எழுதும் போது , அதிக அழுத்தம் கொடுப்பதோடு பேனாவின் கை கொட்டுவதோடு, பின்புறம் தெரிந்தால், எந்தவொரு விஷயத்திலும் எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவே இருக்கும் என்பதைக் கூறுகிறது. மேலும் இதை பாஸ்டோசிட்டி என்கிறோம். நேர்மறையான பாஸ்டோசிட்டி என்பது ஒரு நபரின் இசை, உணவு மற்றும் ஆடைகளின் மீதான விருப்பத்தை குறிக்கிறது. பாசிட்டிவ் பேஸ்டோசிட்டி உள்ளவர்கள் தடிமனான பேனாவைப் பயன்படுத்துவதோடு எழுத்திலும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இதோடு எதிர்மறையான பாஸ்டோசிட்டி உள்ளவர்கள் எதிலும் சரியான நம்பிக்கை இல்லாமல் ஒரு எழுத்தின் மேல் ஒவர் ரைடிங் எழுதும் பழக்கம் இருக்கும்.
Also Read : New Year Resolution 2023 | இந்த புத்தாண்டில் தனி சுகாதாரம் குறித்து நீங்கள் எடுக்க வேண்டிய சபதம் இதுதான்!
இதுமட்டுமில்லாமல், எழுத்தில் உள்ள மாறுபட்ட வேகம் ஒரு நபரின் மன சமநிலையைப் பற்றியும் பேசுகிறது. ஒரு நபர் மிக வேகமாக எழுதினால், அவர்கள் பெரும்பாலும் கிளப் ஸ்ட்ரோக் உருவாக்கம் அல்லது அவர்களின் வாக்கியத்தின் இறுதி வார்த்தைகளில் கூர்மையான மற்றும் சாய்வாக எழுதுவார்கள். இதை யாராவது அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அது தொண்டை, கால்கள் அல்லது நுரையீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்.
பொதுவாக நாம் தனிமையில் இருக்கும் போது அல்லது ஏதேனும் ஒரு சோகத்தில் இருந்தால், ஏதாவது எழுதும் பழக்கம் உள்ளது. அது நமக்கு ஒரு மன ஆறுதலைக் கொடுக்கும். அதே சமயம் நீங்கள் எழுதும் விதத்தில் வழக்கத்திற்கு மாறாக மாற்றம் ஏற்பட்டால்,ஒருவர் தங்கள் கையெழுத்தை சுயபரிசோதனைக்கொள்ள வேண்டும். பிரத்யேக வகுப்புடன் கையெழுத்துப் பயிற்சிகளைப் பெற்று உங்களின் நல்வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவும் எனவும் பரிந்துரைக்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Handwriting, Health issues