இந்த கொரோனா நெருக்கடியில் நாம் வீட்டிலேயே தங்கியிருப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சரிசெய்வது ஆகியவை வைரஸ் பாதிக்காமல் இருக்க நமது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும். எனவே ஒருவர் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க நன்மைகளைத் தரும் மசாலா தேநீர், கஷாயங்கள் என அனைத்தையும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் முயற்சிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான பொருளை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நட்மெக் (nutmeg) என்று பொதுவாக அழைக்கப்படும் ஜாதிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழமையான தீர்வாகும். இது ஒரு சூடான மசாலா பொருள் ஆகும். முக்கியமாக இனிப்பு பண்டங்களில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது. ஜாதிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிக நேரத்திற்கு உங்கள் வயிற்றை முழுமையானதாக உணர வைக்கிறது. இதனால் கூடுதல் எடை உள்ளவர்கள் தங்களது எடையை குறைக்க தேநீரில் சிறிது ஜாதிக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம்.
ஜாதிக்காய் இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்ட மசாலா பொருள். இது மைரிஸ்டிகா ஃப்ராக்ரான்ஸ் என்று அழைக்கப்படும் பசுமையான மரத்தின் விதை ஆகும். இந்த மரம் இப்போது தென்னிந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜாதிக்காயை எவ்வாறு உட்கொள்வது?
ஒரு கப் சூடான பாலில் அரை டீஸ்பூன் தேன், பொடித்த ஏலக்காய் சிறிதளவு மற்றும் 2 சிட்டிகை ஜாதிக்காய் தூள் ஆகியவற்றை கலந்து குடிக்க வேண்டும். இந்த கலவையானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரவு நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.
ஜாதிக்காயின் பிற ஆரோக்கிய நன்மைகள்
* ஜாதிக்காய் பொடியை நீண்ட காலத்திற்கு தவறாமல் உட்கொள்ளும்போது அதன் அமைதிப்படுத்தும் பண்புகள் மூலம் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். எனவே நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஜாதிக்காய் தூளை ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து பருகி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க ஜாதிக்காய் மிகவும் சிறந்தது. ஜாதிக்காயில் மூட்டு வலிக்கு அதிசயங்களைச் செய்யும் மைரிஸ்டிசின், எலிமிசின், யூஜெனோல் மற்றும் சஃப்ரோல் போன்ற பல அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன.
* இது செரிமான நொதிகளின் சுரப்பை மேம்படுத்துகிறது மற்றும் அதில் உள்ள நார் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றில் இருந்து வாயுவை அகற்றவும் உதவுகிறது.
* ஜாதிக்காய் ஒரு செக்ஸ் இயக்கி மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்தக்கூடும். இது லிபிடோ மற்றும் ஆற்றல் இரண்டையும் அதிகரிக்க உதவுகிறது. இவை இரண்டும் நரம்பு தூண்டுதலுக்கு காரணமாக இருக்கின்றன.
* ஜாதிக்காய் என்பது பல் வலியை போக்க உதவும் என்று கூறப்படுகிறது.
Read More: ஹைட்ரஜன் எரிபொருளில் 900 கி.மீ தூரம் பயணம் செய்து உலக சாதனை படைத்த ஹூண்டாய் கார்!
* சூடான காபியில் ஜாதிக்காய் தூள், சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் குமட்டல், இரைப்பை அழற்சி மற்றும் அஜீரண கோளாறுகளை குறைக்க முடியும்.
* எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அதிக அளவு ஜாதிக்காய் சாறு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து கணைய செயல்பாட்டை மேம்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Health Benefits, Health tips, Healthy Life