• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியா? எப்படி சரிபார்ப்பது!

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் உண்மையானதா அல்லது போலியா? எப்படி சரிபார்ப்பது!

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்

போலி சான்றிழ்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் உயிரோடு சேர்த்து மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.

  • Share this:
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் அலையில் இருந்து மக்களை காப்பாற்ற மிக பெரிய தடுப்பூசி இயக்கம் நாட்டில் நடந்து வருகிறது. இரண்டாம் அலைக்கு முன்பே துவக்கப்பட்ட இந்த பேரியக்கம் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சற்று மந்தமாக நடைபெற்று வந்தது. தொற்றுக்கு எதிரான கேடயமாக கோவிட் தடுப்பூசி இருந்து வரும் நிலையில் நாட்டு மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இதுவரை சுமார் 23 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு முழுமையாக (2 டோஸ் ) தடுப்பூசியும் செலுத்தபட்டு இருக்கிறது. அதிக அளவிலான மக்கள் கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்புவதால், கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் அனைத்து வகையான அணுகலுக்கான முக்கிய நுழைவு சீட்டாக மாறி வருகின்றன. எனவே 1 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் என இரு வகையினருக்குமே அரசு சார்பில் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இவை பணியிடங்களுக்கு திரும்பவும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள், மால் & ஹோட்டல்ஸ் போன்ற பொது இடங்களுக்குள் நுழைவதற்கும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. இதனிடையே போலி தடுப்பூசி சான்றிழ்களை முறைகேடாக தயாரித்து விற்கும் சம்பவங்களும் நிகழ துவங்கி உள்ளன.

போலி சான்றிழ்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் உயிரோடு சேர்த்து மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க குடிமக்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தடுப்பூசி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இப்போது CoWIN போர்ட்டலில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. யூஸர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழின் வேலிடிட்டியை ஸ்மார்ட் போன்கள் மூலம் சரி பார்த்து கொள்ளலாம்.



* முதலில் கோவின்-இன் அதிகாரபூர்வ வெப்சைட்டான cowin.gov.in -க்கு சென்று மேல் வலதுபுறத்தில் VACCINATION SERVICES என்ற ஆப்ஷனுக்கு அடுத்தபடியாக உள்ள PLATFORMS என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் "Verify certificates"என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அல்லது நேரடியாக https://verify.cowin.gov.in/ என்ற லிங்கிற்கு விசிட் செய்யலாம்.

* நீங்கள் வெரிஃபிகேஷன் பிரிவுக்கு வந்தவுடன், ‘Scan QR’ என்று காட்டும் பச்சை பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த நடைமுறை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் கேமராவை எனேபிள் செய்வதற்காக அனுமதி கேட்கும். அடுத்த கட்டத்திற்கு செல்ல Allow-வை க்ளிக் செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் கட்டாயம் போட வேண்டும்..? யாரெல்லாம் போட வேண்டாம்..? தெரிந்துகொள்ளுங்கள்...

* இதன் பின்னர் உங்கள் மொபைல் கேமரா ஆக்டிவேட் ஆகும். தொடர்ந்து தடுப்பூசி சான்றிதழின் கீழே வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.



* QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் சான்றிதழ் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் ‘சான்றிதழ் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது’ (Certificate Successfully Verified) என்று ஸ்கிரீனில் வரும். அதே போல பெயர், வயது, பாலினம், சான்றிதழ் ஐடி, போட்டு கொண்ட தடுப்பூசியின் பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களும் தோன்றும்.

* ஒருவேளை சான்றிதழ் போலி என்றால் "சான்றிதழ் செல்லாதது" (Certificate Invalid) என்று எழுதப்பட்ட மெசேஜ் பாக்ஸ் ஒன்று ஸ்கிரீனில் தோன்றும். தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்கும் இந்த நடைமுறை கூடிய விரைவில் ஆக்டிவேட் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: