ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Hand Sanitizer : ஹேண்ட் சானிடைசரை பயன்படுத்தும்போது செய்ய வேண்டியவை..செய்யக் கூடாதவை..!

Hand Sanitizer : ஹேண்ட் சானிடைசரை பயன்படுத்தும்போது செய்ய வேண்டியவை..செய்யக் கூடாதவை..!

கிருமிநாசினி

கிருமிநாசினி

தொற்றிலிருந்து தப்பிக்க கை சுகாதாரத்தை பேணுவது முக்கியமே. இருப்பினும் ஹேண்ட் சானிடைசர்கள் என்று வரும் போது, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

நம் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உளள்து. கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுக்க குறைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் ஒரு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி தவிர அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்வதும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஹேண்ட் சானிடைசர்கள் கொண்டு பலரும் தங்களது கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்வது இப்போது பொதுவான ஒன்றாக மாறி விட்டது. பொது இடங்களுக்கு செல்லும் போதே கூடவே ஹேண்ட் சானிடைசர் கொண்டு செல்லும் பலர், வெளியில் ஏதேனும் பொருட்களை தொட நேரிட்டால் அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்ந்த பிறகு சானிடைசர் கொண்டு இரு கைகளையும் நன்றாக சுத்தம் செய்து கொள்கின்றனர். தொற்றிலிருந்து தப்பிக்க கை சுகாதாரத்தை பேணுவது முக்கியமே. இருப்பினும் ஹேண்ட் சானிடைசர்கள் என்று வரும் போது, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

கோவிட் சுவாச நோய் என்றாலும் காற்று வழியே அதிகம் பரவ கூடிய வாய்ப்பு இருப்பதால் பலரால் அடிக்கடி தொடப்படும் மேற்பரப்புகளும் கூட கொடிய வைரஸை கொண்டிருக்கலாம். எனவே தான் இந்த பேரிடருக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கை சுத்திகரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் COVID-19 அபாயத்தைக் குறைக்கலாம் என்றாலும் இதை அதிகமாக பயன்படுத்துவது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே ஹேண்ட் சானிடைசர்களை பயன்படுத்தும் போது நீங்கள் எளிய வழிகாட்டுதல்களைப் பெறுவது முக்கியம்.

ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை:

* பலர் அடிக்கடி தொட்ட மற்றும் அசுத்தமான மேற்பரப்புகளை நாம் கைகளால் தொட நேரிடும் போது கட்டாயம் சானிடைசர் பயன்படுத்துங்கள். ஏனென்றால் சில மேற்பரப்புகள் மீது தொற்றும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீண்ட காலத்திற்கு நீடிக்கும். எனவே அசுத்தமான மேற்பரப்புகளை நீங்கள் தொட்டு விட்டு அதே கைகளுடன் உங்கள் கண்கள், வாய் போன்ற உறுப்புகளை டச் செய்யும் போது தொற்று பரவும் அபாயம் உருவாகலாம். மேலும் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் தோற்று எளிதில் பரவலாம். இத்தகைய சூழலை தவிர்க்க ஹேண்ட் சானிடைசர் பயன்படும்.

* கட்டாயம் நீங்கள் 60 முதல் 95 சதவீதம் ஆல்கஹால் இருக்க கூடிய ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பயன்படுத்த வேண்டும். ஆல்கஹாலற்ற அல்லது குறைந்த அளவிலான ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள் கிருமிகளுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் அளிக்காது மாறாக அவை உங்கள் மீது இன்னும் பெருகும்.

* போதுமான அளவு சானிடைசர் எடுத்து கொண்டு சுமார் 20 விநாடிகள் அதை உங்கள் கைகளில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

* காலாவதியான சானிடைசர் குறைந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்பதால் உங்கள் ஹேண்ட் சானிடைசர் காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* உங்கள் கைகள் அழுக்காகவோ அல்லது க்ரீஸாகவோ இருந்தால், ஹேண்ட் சானிடைசர் சரியாக வேலை செய்யாமல் போகலாம். முடிந்தால், சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கைகழுவிவிட்டு பின்னர் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்து மறுமுறை கைகளை நன்கு சுத்தப்படுத்தி கொள்ளலாம்.

கைகளில் தடவும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி...?

* உங்கள் கை மற்றும் விரல்களின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக்க ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்தும் போது உங்கள் கைகள் வறண்டு (dry) போகும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். அதாவது கைகளில் இருந்து சானிடைசர் திரவம் ஈரப்பதமின்றி நன்றாக மறைய வேண்டும். உங்கள் கைகளில் இருந்து சானிடைசர் திரவம் வறண்டு போவதற்கு முன் கைகளை துண்டு அல்லது டவல் கொண்டு துடைத்து விட்டால் ஹேண்ட் சானிடைசர்கள் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது.

செய்யக்கூடாதவை:

* தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மிக அவசியம் என்றாலும் கூட அவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது. ஏனென்றால் இது ஆரோக்கியமான நுண்ணுயிரிகளையும் சேர்த்து கொன்று விடும். மேலும் தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். தவிர ஹேண்ட் சானிடைசர்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு உங்கள் சருமத்தை வறண்டு போக செய்து விடும்.

Hand Sanitiser : சானிடைசர் பயன்படுத்தும் அளவு முறை என்ன..? எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்..? WHO பகிர்ந்துள்ள செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை

* வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் அளவிற்கு ஹேண்ட் சானிடைசர்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், உணவு பொருட்களை சாப்பிடுவதற்கு முன் ஹேண்ட் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம். சில ஹேண்ட் சானிடைசர்களில் 1-புரோபனோல் (1-propanol) என்ற பொருள் இருக்கும். இந்த வேதியியல் உள்ளடக்கம் (chemical content) மத்திய நரம்பு மண்டல மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இதனால் சுவாச பிரச்சினைகள், குழப்பம், மெதுவான இதய துடிப்பு உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சானிடைஸர் (கோப்புப்படம்)

* குழந்தைகளை பொறுத்த வரை ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துமாறு அவர்களை ஊக்குவிபாபத்தை விட, அடிக்கடி சாதாரண சோப்பு போட்டு கைகளை கழுவ சொல்லலாம். ஏனென்றால் சானிடைசரின் பக்கவிளைவுகளை குழந்தைகளுக்கு புரிய வைப்பது எல்லோராலும் முடியாது. பெரியவர்கள் எல்லோரும் பயன்படுத்துவதால் ஹேண்ட் சானிடைசர் ஆபத்தற்றது என்று குழந்தைகள் நினைக்க கூடும். மேலும் சிறுகுழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு ஹேண்ட் சானிடைசர்களை வைப்பது மிக பெரிய ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றும். முதல் அலை துவக்கத்தில் அமெரிக்க விஷக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு ஏராளமான அழைப்புகள் குழந்தைகள் சானிடைசரை விழுங்கி விட்டது தொடர்பாக வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* பலர் கிருமிகள் நிறைந்த தங்கள் கைகளையே சுத்தம் செய்வதால் சானிடைசர்கள் கிருமி நீக்கம் செய்து பாதுகாப்பை தருகிறது என்றெண்ணி பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்ய நினைக்கின்றனர். ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானது. உங்கள் எந்த ஒரு உணவையும் சுத்தம் செய்ய சானிடைசர்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Covid-19, Hand Sanitizer