பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் பல முறை அனுபவிக்கும் ஒரு பொதுவான நிலை தலைவலி. ஒரு சிலருக்கு எப்போதாவது ஏற்படும் தலைவலியால் அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல என்பது அர்த்த இல்லை. ஆனால் சிலருக்கு நாள்பட்ட தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி துரதிர்ஷ்டவசமாக வாழ்நாள் முழுவதும் தொடரும் தீவிர நிலையாக இருக்கிறது. தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி எப்போது வேண்டுமானாலும் ஏற்பட கூடியவையாக இருக்கின்றன. சிலர் தலைவலி ஏற்பட்டால் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஒரு சில நேரங்களில் இவை தலைவலிக்கு நிவாரணம் அளித்தாலும், சில நேரங்களில் தீவிர தலைவலியை போக்க இவை போதுமானதாக இருப்பதில்லை. தலைவலியின் முக்கிய அறிகுறி உங்கள் தலை அல்லது நெற்றி பகுதி அல்லது முகத்தில் ஏற்படும் வலி. தலைவலிக்கு மருந்துகள், மன அழுத்த மேலாண்மை மற்றும் பயோ ஃபீட்பேக் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
தலைவலி எவ்வளவு பொதுவானது?
தலைவலி உலகில் மிகவும் பொதுவான வலி நிலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் உலகளவில் அடல்ட்களில் சுமார் 75% பேர் தலைவலியால் சாரிசாரியாக பாதிக்கப்படுகின்றனர். கலவி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லாமல் பலர் விடுமுறை எடுக்க தலைவலி மிக பொதுவான காரணமாக இருந்து வருகிறது. இவர்களில் சிலர் தலைவலியுடன் தொடர்ந்து போராடுவதால் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தலைவலியின் வகைகள்..
தலைவலியின் வகைகள் எவ்வளவு தெரியுமா..? சுமார் 150-க்கும் மேற்பட்ட தலைவலி வகைகள் உள்ளன. எனினும் இந்த வகை தலைவலிகள் அனைத்துமே 2 முக்கிய வகைகளின் கீழ் அடக்கப்பட்டுள்ளன. ப்ரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு கேட்டக்ரிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
ப்ரைமரி தலைவலி (Primary headaches):
தலைவலியே மட்டுமே முக்கிய பிரச்சனையாக இருக்கும் போது அது ப்ரைமரி தலைவலியின் கீழ் வரும். இது ஒரு அடிப்படை நோய் அல்லது நிலையின் அறிகுறி அல்ல. இந்த வகை தலைவலியை பொதுவாக ஆபத்தானது அல்ல. இதில் க்ளஸ்ட்டர் தலைவலி, மைக்ரேன், நியூ டெய்லி பெர்சிஸ்டெண்ட் தலைவலி (NDPH), டென்ஷன் தலைவலி உள்ளிட்டவை அடக்கம்.
செகண்டரி தலைவலி (Secondary headaches):
இந்த நிலை தலைவலி மற்றொரு மருத்துவ நிலையுடன் தொடர்புடையது. மேலும் செகண்டரி நிலை தலைவலி என்பது கழுத்து காயம் அல்லது சைனஸ் தொற்று போன்ற அடிப்படை மருத்துவ நிலை காரணமாக ஏற்படும் தலைவலி. தவிர இது ஒரு தீவிர அடிப்படை மருத்துவ நிலையின் அறிகுறியாக கூட இருக்கலாம். மூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு, தலையில் காயம், உயர் ரத்த அழுத்தம், தொற்று, அதிகப்படியான மருந்து பயன்பாடு, மூளையழற்சி, மூளை கட்டி உள்ளிட்ட பல தீவிர நிலைமைகள் காரணமாக கூட செகண்டரி தலைவலிகள் ஏற்படும்.
தலைவலியின் போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிப்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்றாலும் இது பொதுவானது. நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர் என்றால் உங்கள் தலைவலியை போக்க மிகவும் இயற்கையான நிவாரணத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அக்குபிரஷர் மற்றும் பிரஷர் பாயிண்ட்ஸ்களை பற்றி யோசிக்கலாம். ஏனென்றால் பிரஷர் பாயிண்ட்ஸ்கள் (Pressure points) என்பது உடலின் எக்ஸ்ட்ரா சென்சிட்டிவ் (extra sensitive) கொண்டதாக நம்பப்படுகிறது. மேலும் சிக்கலுக்கு நிவாரணம் அளிக்க இந்த பாயிண்ட்ஸ்கள் உடலை தூண்டும்.
சைனஸ் தலைவலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்...
மேலும் இது ஒப்பீட்டளவில் ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான வலி நிவாரண முறையாக கூறப்படுகிறது. சீன மருத்துவத்தின் ஒரு துறையான ரிஃப்ளெக்சாலஜி பயிற்சியாளர்கள் (Practitioners of reflexology) ஒரு குறிப்பிட்ட வழியில் பிரஷர் பாயிண்ட்ஸ்களைத் தொடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்த, வலியை குறைக்க மற்றும் உடலில் சமநிலையை மீட்டெடுக்க உதவுவதாக கூறுகிறார்கள்.
reflexology என்பது மனித உடலின் ஒரு பகுதி மற்றொன்றுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி ஆய்வு செய்வது ஆகும். உடலின் வேறு பகுதியில் ஏற்படும் சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உங்கள் உடலின் வேறு பகுதியில் மசாஜ் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை சாராம்சமாக கொண்டது. உதரணமாக உங்கள் தலைவலியை வலியை குறைக்க உடலின் வேறு பகுதியில் இருக்கும் சரியான பிரஷர் பாயிண்ட்ஸ்களில் தேவையான அழுத்தம் கொடுக்கலாம். சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கிறது என்பது உணர்ந்தவர்களின் வார்த்தைகள்..
தலைவலியை போக்க பிரஷர் பாயிண்ட்ஸ்களை எவ்வாறு பயன்படுத்துவது.?
தலைவலியை போக்க கூடிய சில நன்கு அறியப்பட்ட பிரஷர் பாயிண்ட்ஸ்கள் உடலில் உள்ளன. அவை எங்கு உள்ளன, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்..
சைனஸ் தலைவலிக்கான சரியான சிகிச்சைகள் என்ன..? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?
யூனியன் வேலி (Union valley):
இந்த பிரஷர் பாயிண்ட்ஸ் நம் கட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் அடிப்பகுதிக்கு இடையில் அமைந்து உள்ளன. உங்களுக்கு தலைவலி ஏற்படும் போது இந்த பாயிண்ட்டை பயன்படுத்த உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலால், உங்கள் மற்றொரு கையின் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் அடிப்பகுதிக்கு இடையே உள்ள இந்த பாயிண்ட்டில் உறுதியாக அதே சமயம் வலி ஏற்படாதவாறு மிதமான அழுத்தத்தை பயன்படுத்துங்கள். பிரஷர் பாயிண்ட்டை நான்கு முதல் ஐந்து வினாடிகள் மசாஜ் செய்து, மெதுவாக, ஆழமாக சுவாசிக்கவும். மற்றொரு கையிலும் இதே போல சில வினாடிகள் அழுத்தி மற்றும் மசாஜ் செய்து கொள்ளவும். இந்த பிரஷர் பாயிண்ட்டை பயன்படுத்துவது தலை மற்றும் கழுத்து நரம்புகளில் உள்ள டென்ஷனை போக்குகிறது.
தேர்ட் ஐ (Third eye):
உங்கள் புருவங்களுக்கு இடையில் தேர்ட் ஐ பிரஷர் பாயிண்ட் அமைந்துள்ளது. இந்த பாயிண்ட்டில் நிலையான அழுத்தத்தை பயன்படுத்துவதன் மூலம் அல்லது வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் இந்த புள்ளியை தூண்டி தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ட்ரிலிங் பாம்பூ (Drilling bamboo):
இது ஒரு ஜோடி பிரஷர் பாயிண்ட்ஸ்கள் ஆகும். உங்கள் ஒவ்வொரு புருவத்தின் உட்புறத்திலும் மூக்கு பாலம் மாற்றும் புருவ எலும்பு சந்திக்கும் இடத்தில உள்ளது. தலைவலிக்கும் நேரத்தில் உங்கள் 2 ஆள்காட்டி விரல்களையும் கொண்டு, இருபுறமும் சமமான அழுத்தத்தை பயன்படுத்துங்கள். 10 வினாடிகள் தொடர்ந்து அழுத்தம் சிறிது நேரம் விட்டு மீண்டும் 10 வினாடிகள் அழுத்தவும். இந்த பிரஷர் பாயிண்ட்ஸ்கள் கண் சோர்வு மற்றும் சைனஸ் வலி அல்லது அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியிலிருந்து நிவாரணம் தரும்.
கேட்ஸ் ஆஃப் கான்ஷியஸ்னஸ் (gates of consciousness):
இந்த பிரஷர் பாயிண்ட்ஸ்கள் முதுகெலும்பின் இருபுறமும் உள்ள ஹாலோ ஸ்பேஸில், மண்டை ஓட்டின் அடிப்பகுதிக்குக் கீழே அமைந்திருக்கிறது. இரு கைகளின் ஆள்காட்டி மற்றும் நடுத்தர விரல்களால் உறுதியான அழுத்தத்தை இந்த பாயிண்ட்ஸ்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்த புள்ளிகளை ஆக்ட்டிவேட் செய்யலாம். இதன் மூலம் கழுத்தில் உருவாகும் டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலியை போக்க உதவும்.
சைனஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா..? தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள்
ஷோல்டர் வெல் (Shoulder well):
இந்த பிரஷர் பாயிண்ட்ஸ்கள் தோள்பட்டை மூட்டுக்கும் கழுத்தின் அடிப்பகுதிக்கும் இடையில் பாதியிலேயே அமைந்திருக்கிறது. இந்த பாயிண்ட்ஸ்களை தூண்ட உங்கள் ஒரு கையின் கட்டை விரலைப் பயன்படுத்தி 1 நிமிடத்திற்கு உறுதியான, சர்க்கிள் பிரஷரை பயன்படுத்தவும். பின் மற்றொரு பக்க பாயிண்ட்டிலும் இதே பொன்றுலேசான மசாஜ் மற்றும் பிரஷரை கொடுக்கவும். இது தோள்பட்டை மற்றும் கழுத்து தசைகளில் உள்ள விறைப்பு அல்லது டென்ஷனைபோக்கி தலைவலியை குறைக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache