நட்ஸ் மற்றும் விதைகள் ஆரோக்கியமான உடல் எடைக்கு சிறந்த உணவுகளாகும். அவை போதுமான அளவு புரதம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் கொள்ளு சாப்பிட்டாலும் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்கின்றனர். எனவே அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் கொள்ளுவில் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து, புரதச்சத்து , விட்டமின்கள், மினரல்கள் நிறைவாக இருக்கிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தலாம் என்கின்றனர். ஆயுர்வேதத்தில் இது சிறந்த மூலிகை உணவாகவும் உள்ளது. கொள்ளு பொடியாகவும், ஆயில் , கேப்ஸ்யூல் , ஃபிளேவர் என பல வகைகளில் சந்தையில் கிடைக்கிறது.
ஆய்வுப்படி 2.5 கிராம் கொள்ளு உங்கள் பசியைக் குறைத்து அதிகம் சாப்பிடாமல் அதேசமயம் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். அதோடு இரத்த சர்க்கரை அளவு, குறைந்த ரத்த அழுத்தம் அனைத்தையும் சரி செய்யும்.