முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுகர் பிரச்சனைக்கு கிராம்பை இப்படி சாப்பிட்டால் மிகவும் நல்லதா..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!

சுகர் பிரச்சனைக்கு கிராம்பை இப்படி சாப்பிட்டால் மிகவும் நல்லதா..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!

கிராம்பு நீரிழிவு நோய்க்கு நல்லது

கிராம்பு நீரிழிவு நோய்க்கு நல்லது

பொதுவாக கிராம்பில் கார்மினேடிவ் என்னும் பண்பு இருப்பதால் அது செரிமானம், வாயு பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோல் பல் வலி, பல் சொத்தை வாய் துர்நாற்றம் என வாய் சுகாதாரத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • Last Updated :

சமையலுக்கு மணம் , சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பதுதான் நம் இந்திய சமையலறை மசாலாக்கள். அந்த வகையில் கிராம்பின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. செரிமானமின்மை, பசியின்மை, சளி, இருமல், குமட்டல் போன்ற உபாதைகளுக்கு உரிய தீர்வு வேண்டுமெனில் அதை கிராம்பின் மூலமும் பெறலாம். இத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் கிராம்பு ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாக விளங்குகிறது.

பொதுவாக கிராம்பில் கார்மினேடிவ் என்னும் பண்பு இருப்பதால் அது செரிமானம், வாயு பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோல் பல் வலி, பல் சொத்தை வாய் துர்நாற்றம் என வாய் சுகாதாரத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல் தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி தட்டி போடுவது போல் கிராம்பையும் தட்டி போட்டு குடித்தால் நெஞ்சு எரிச்சல், செரிமானமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும். இப்படி பல வகைகளில் வீட்டு வைத்தியமாக இருக்கும் கிராம்பு நீரிழிவு நோய்க்கும் நல்லது என்று கூறப்படுகிறது எப்படி என்று பார்க்கலாம்.

கிராம்பினால் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..?

கிராம்பு இன்சுலின் உற்பத்திடை அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதை சமீபத்தில் வெளியான ஜர்னல் நேச்சுரல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் அதில் இரத்த சர்க்கரை அளவு குறைவதற்கான காரணங்களையும், இன்சுலின் செல்களின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தது. பின் மரபணு ரீதியாக நீரிழிவு இருக்கும் எலிகளுக்கு கிராம்பு கொடுத்து இந்த ஆய்வை கண்கானித்துள்ளது. அதன் மூலமே இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் 5 வழிமுறைகள்..!

மேலும் கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி , ஆண்டிசெப்டிக் பண்புகள், செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் ஆகியவையும் இருப்பதால் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

அதுமட்டுமன்றி கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. சரி கிராம்பை தினசரி உட்கொள்ள டீ போட்டு குடிப்பது சிறந்த வழியாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கிராம்பு தேநீர் :

கிராம்பை பொடியாகவும் அல்லது தட்டிப்போட்டும் பயன்படுத்தலாம். தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். கொதிநிலை வரும்போது கிராம்பை தட்டிப்போடுங்கள். பின் டீ தூளை சேர்த்து கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து அதன் வாசனை வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள்.

இப்போது அதை வடிகட்டி குடிக்கலாம். இதை தினம் காலை குடிக்க உங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய் அல்லாதவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் குடிக்கலாம்.

top videos

    கிராம்பு நோய்களுக்கான மருந்தாக மட்டுமன்றி முகப்பருக்கள், தழும்புகளை போக்கும் சருமப்பராமரிப்பு பொருளாகவும் இருக்கிறது. அதாவது கிராம்பு எண்ணெயுடன் சிறிது தேன் மற்றும் ஒரு துளி சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலந்து முகப்பருக்களில் தேய்த்துவிட்டு காய்ந்ததும் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்ய பருக்கள் போகும். முகமும் பிரகாசிக்கும்.

    First published:

    Tags: Cloves, Diabetes, Health tips