Home /News /lifestyle /

எடை குறைக்க ஜிம்முக்கு போறதெல்லாம் இருக்கட்டும்... அதுக்கு முன்னாடி இதை உங்கள் மனசுக்கு சொல்லுங்க..

எடை குறைக்க ஜிம்முக்கு போறதெல்லாம் இருக்கட்டும்... அதுக்கு முன்னாடி இதை உங்கள் மனசுக்கு சொல்லுங்க..

உடல் எடை குறைக்க டிப்ஸ்

உடல் எடை குறைக்க டிப்ஸ்

அதாவது கொஞ்ச நாட்கள் முயற்சி செய்து விட்டு நமக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானவரின் எண்ணம். ஆனால் வெறுமனே உடற்பயிற்சிக்கூடம் சம்பந்தப்பட்டது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மனதோடு தொடர்புடையது. நீங்கள் உங்கள் மனதளவில் திடமாக இருந்தால் உடல் எடை குறைப்பது என்பது ஒரு விஷயமே இல்லை.

இது ஏன் மனதோடு தொடர்புடையது என்றால், நீங்கள் எடையை குறைப்பதற்காக டயட்டை கடைபிடித்தால் அதிகபட்சம் உங்களால் ஒரு மூன்று நாட்கள் வரை கடைபிடிக்க முடியும். அதற்குப் பிறகு நீங்கள் உங்களுக்குப் பிடித்த சாக்லேட்டையோ அல்லது பீட்சாவையோ எங்கேனும் பார்த்தால் ஆர்வம் மிகுதியால் அதை உண்பீர்கள்.

எனவேதான் இங்கு உடல் எடையை குறைப்பதில் உடலை வருத்துவதை விட, மனம் முக்கிய பங்காற்றுகிறது.

சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி டிராக் செய்யுங்கள்

இப்படி உடல் எடையை குறைப்பதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் சமூக வலைத்தளங்களில் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துவது. இது உங்களுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். காரணம் சமூக வலைத்தளத்தில் நம்மை பல பேர் கண்காணிப்பார்கள் என்பதால் நிச்சயமாக நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அது ஏற்படுத்தும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை கைவிடுங்கள்

அதே நேரம் முன்பே சொன்னது போல் நீங்கள் மூன்று நாட்கள் டயட்டில் இருந்து விட்டு, நான்காவது நாளில் சாக்லேட் சாப்பிட்டால், அதற்காக குற்ற உணர்ச்சி கொள்ள தேவையில்லை. உங்கள் தவறை ஒப்புக்கொள்ளுங்கள். இனிமேல் சாக்லேட் சாப்பிட மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் உங்கள் டயட்டை தொடருங்கள். இதன் மூலமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை எட்டிப் பிடிக்க முடியும்.

உண்மையில் நம் அனைவருக்குமே சலித்துப் போன விஷயத்தை தொடர்வதில் விருப்பமில்லைதான். ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்று சற்று கவனித்துப் பாருங்கள். வேலையை முடித்தவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். வார இறுதி நாள் ஆன வெள்ளிக்கிழமை வந்து விட்டால் பீட்சா ஆர்டர் செய்கிறோம். ஆனால் இதை நாம் சலிப்பான ஒன்றாக நினைப்பதில்லை.

சிவப்பு அரிசியில் இத்தனை நன்மைகள் இருக்கா..? உடல் எடையை குறைக்க கண்டிப்பா டிரை பண்ணுங்க..!

உங்களை நீங்களே பாராட்டுங்கள், பிடித்த விஷயம் செய்யுங்கள்

எடையை குறைக்கும் பயணத்தில் நமக்கே நாம் சில பரிசுகளை கொடுத்துக் கொள்ள வேண்டி வேண்டி இருக்கிறது. இது ஆரம்பிக்க கடினமானது தான். ஆனால் நம்மை இதற்கு மேல் நகர்த்துவதற்கு இது உறுதுணையாக இருக்கும். யோசித்துப் பாருங்கள் நான் என் உடல் எடையை இந்த அளவிற்கு குறைத்து விட்டால், நான் பெரிதும் விரும்பும் ப்ரைட் ரைஸ் அல்லது சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் என்று நினைத்துக் கொண்டால், உங்களுக்குள் நிச்சயமாக ஒரு உத்வேகம் பிறக்கும் தானே.இதன் மூலமாக பொறுமையாக மற்றும் நிதானமாக உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை நீங்கள் செய்யலாம். உதாரணமாக கொஞ்ச தூரம் நடை பயிற்சி மேற்கொள்வது, உங்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டை உங்கள் உற்ற நண்பரோடு விளையாடுவது, இது போன்றவை உங்களுடைய உடல் எடையை குறைப்பதோடு உங்களை மகிழ்ச்சிகரமாக உணர வைக்கும்.

எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று நினைத்து பாருங்கள்

பெரும்பாலான மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளைக் கூட அப்போதைய தேவைக்கேற்றபடியே எடுக்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் எப்படி உணர்வோம் என்பதற்கு நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகளே காரணம் என்பதை பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். இது சாப்பாடு விஷயத்தில் முற்றிலுமாக பொருந்தக்கூடியது இது ஒரு யுக்தி. நினைத்த நேரத்தில் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டால் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன ஆகும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்படி யோசிப்பது நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.முயற்சியை கைவிடக்கூடாது

தொடர்ச்சியான இந்த உணர்வுகள் நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்பதற்கும், நேர்மறையான எண்ணங்களை சிந்திப்பதற்கும், வழி வகுக்கும். பெரும்பாலும் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் பலர் செய்யும் தவறு இதுதான். அதாவது கொஞ்ச நாட்கள் முயற்சி செய்து விட்டு நமக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அப்படி நினைக்காமல் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், என்று தங்கள் பயணத்தை நீட்டித்துக் கொண்டு, நீண்ட காலமாக உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடிப்பவர்கள் மட்டும் தான் இந்த போட்டியில் வெற்றி பெறுகிறார்கள்.

மெனோபாஸ் காலத்தில் பெண்களின் மூளை செயல்திறனில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் - ஆய்வில் தகவல்

உடற்பயிற்சியும் அவசியம்

இந்த பயணத்தில் உடல் எடையை குறைப்பதோடு நீங்கள் தினசரி சில உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதற்காக நீங்கள் ஜிம்முக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற தேவையில்லை. அதிகபட்சம் காலை ஒரு ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. இது போன்ற ஆரோக்கியமான தேர்வுகள் உங்கள் வாழ்க்கையை மேலும் அழகாக்கும். குறிப்பாக உங்களது எடை குறைப்பு பயணம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால் இது எல்லாமே திடீரென்று ஒரே நாளில் ஒரு மேஜிக் போன்று ஏற்படக்கூடியதல்ல. இதற்கு பொறுமை மிகவும் அவசியம். உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். அதேநேரம் உங்கள் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. காரணம் எடை அளவுகோள்களில் வரும் எண்களை விட உங்கள் உடல் தான் என்றும் உங்களோடு இருக்கக்கூடியது. எனவே அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Weight loss

அடுத்த செய்தி