ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோடையில் சானிட்டரி பேடுகளால் ஏற்படும் சொறி பிரச்சனையில் இருந்து தப்புவது எப்படி?

கோடையில் சானிட்டரி பேடுகளால் ஏற்படும் சொறி பிரச்சனையில் இருந்து தப்புவது எப்படி?

மாதவிடாய் சிக்கல்கள்

மாதவிடாய் சிக்கல்கள்

சானிட்டரி பேட் அணிவதால், அடிக்கடி அரிப்பு, வீக்கம், சிவத்தல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு கூட வழிவகுக்கும். உராய்வு, ஈரப்பதம், வெப்பம் மற்றும் எரிச்சல் ஆகியவை பாக்டீரியாக்கள் உருவாக காரணமாக அமைகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பெண்களுக்கு சாதாரண மாதவிடாய் நாட்களில் ஏற்படுவதை விடவும், கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். கோடைகாலத்தில் சானிட்டரி பேடுகள் சொறி மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகளை அதிகமாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, கோடையில், வியர்வை அதிகமாக இருக்கும், அது பிறப்புறுப்பு பகுதிக்கும் பொருந்தும். அது அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கிறது. எரிச்சலூட்டும் தோலுக்கு மாதவிடாய் சொறி ஏற்பட அதிக நேரம் எடுக்காது. ஆனால் நீங்கள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கான சில வழிகளை கீழே காணலாம்...

மாதவிடாய் சொறி எதனால் ஏற்படுகிறது?

மருத்துவர்களின் கூற்றுபடி, சானிட்டரி பேட்கள் பெரும்பாலும் பாலியோலிஃபின்கள் (துணிகள், வைக்கோல் மற்றும் கயிறுகள் தயாரிக்கப் பயன்படும்) கலவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை உறிஞ்சக்கூடிய ஜெல்கள், மர செல்லுலோஸ் மற்றும் உறிஞ்சக்கூடிய நுரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் சருமத்தை எரிச்சலூட்டும் திறன் கொண்டவை. உறிஞ்சும் திறனை அதிகரிக்க பட்டைகள் ப்ளீச் கொண்டு வெளுக்கப்படுகின்றன, அதில் டையாக்ஸின் உள்ளது. இவை மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்துடன் இணையும் போது அவை டையாக்ஸின் மற்றும் மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன, இதனால் பெண்கள் சொறி மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

சானிட்டரி பேட் அணிவதால், அடிக்கடி அரிப்பு, வீக்கம், சிவத்தல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு கூட வழிவகுக்கும். உராய்வு, ஈரப்பதம், வெப்பம் மற்றும் எரிச்சல் ஆகியவை பாக்டீரியாக்கள் உருவாக காரணமாக அமைகிறது.

மாதவிடாய் சொறிகளை சமாளிக்க 5 வழிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:

1. பருத்தி உள்ளாடைகள் மற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள்:

பருத்தி உள்ளாடைகளை அணிவது சரியான காற்றோட்டத்தை வழங்குகிறது, இது உங்கள் சருமத்தை சுவாசிக்க உதவுகிறது மற்றும் வியர்வையைத் தடுக்கிறது. மேலும் இது சொறி ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும், நீங்கள் இருக்கமான ஜீன்ஸ் மற்றும் ஜெகிங்ஸை அணியத் தேர்வுசெய்தால், மாதவிடாய் காலத்தில் இது சிறந்த தேர்வாக இருக்காது. சரியான காற்றோட்டத்தை உறுதிப்படுத்த, தளர்வான மற்றும் வசதியான பேண்ட் அல்லது பாவாடைகளை அணிவது நல்லது.

2.சரியான பேடுகளை தேர்வு செய்யுங்கள்:

மாதவிடாயின் போது பேடுகளை பயன்படுத்துவதால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தடிப்புகள் ஏற்படுவது பெரும்பாலானோருக்கு பொதுவானது. ஆனால் உங்கள் சருமத்தின் வகை மற்றும் மாதவிடாய் கால ரத்தப்போக்கிற்கு ஏற்றார் போல் சரியான பேடைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மென்மையான வெளிப்புற அடுக்குடன் விரைவாக உறிஞ்சக்கூடியது பேடுகள் சிறந்தது. உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், ஒவ்வொரு முறையும் மாதவிடாய் ஏற்படும் போது தீவிர சொறி ஏற்பட்டால், பருத்தி/ஆர்கானிக் பேடுகளுக்கு மாறுவது நல்லது.

3. மென்சுரல் கப்களை பயன்படுத்துங்கள்:

சானிட்டரி பேடுகள் மற்றும் டம்பான்களை விட மென்சுரல் கப்கள் அதிக ரத்தப்போக்கை தக்கவைத்துக் கொள்ளக்கூடியவை. மென்சுரல் கப்கள் நுண்ணுயிரிகளை அழிக்க கூடியவை, மலிவானவை மற்றும் அப்புறப்படுத்த எளிதானவை. மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய சொறி மற்றும் புண் பிரச்சனைகளை தடுக்க கூடியவை.

4. தடிப்புகளுக்கு உதவ, கிரீம்களைப் பயன்படுத்துங்கள்:

தடிப்புகளைத் தணிக்க கேலமைன் போன்ற இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும். கலமைன் வலி, அரிப்பு மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. எந்த கிரீமை பயன்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பெண்குயின் கார்னர் : ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

5. அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்திருங்கள்:

மாதவிடாய் காலத்தில் உங்களுடைய பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். அப்பகுதியின் பி.எச்.அளவு பொதுவாக 3 முதல் 4.5 வரை இருப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். ஒரு சாதாரண pH அளவு பாக்டீரியா வளர்ச்சிக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. பிறப்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க நல்ல pH சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

மாதவிடாய் கால சுகாதார குறிப்புகள் சில இதோ....

* சொறி மற்றும் தொற்றுநோயைத் தவிர்க்க உங்கள் சானிட்டரி பேடுகளை அடிக்கடி மாற்றவும்

* உங்கள் பிறப்புறுப்புப் பகுதியை வெதுவெதுப்பான நீரில் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை கழுவவும்

* தடிப்புகளைப் போக்க பேபி பவுடர் போன்ற டால்கம் பவுடரையும் பயன்படுத்தலாம்

* ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்

* பிறப்புறுப்பை வைப்ஸ் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்தவும்.

* பிறப்புறுப்பை சோப்பு கொண்டு சுத்தப்படுத்துவதை தவிர்க்கவும்.

First published:

Tags: Periods pain, Sanitary Napkin, Summer tips, Women Health