தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் வாயில் இருந்து கூட வரும் சாதாரண வார்த்தையாக இருக்கிறது ஸ்ட்ரெஸ். அன்றாட மாற்றங்கள் மற்றும் நம் வாழ்வில் எதிர் கொள்ளும் சவால்களை சமாளிக்கும் போது கூறப்படும் பொதுவான எதிர்வினை வார்த்தையாக இருக்கிறது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம்.
ரத்த அழுத்தம், தூக்க முறைகள், ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை பாதிக்கும் போக்கை கொண்ட மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் வெளியீட்டை ஏற்படுத்தும் உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக, மன ரீதியாக நம்மை பாதிக்க கூடிய நிகழ்வுகளும் உள்ளன. கடுமையான மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படக்கூடிய ஒரு இதய நிலை ப்ரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் (Broken heart syndrome).
ஸ்ட்ரெஸ் என்பது நபருக்கு நபர் வேறுபடுவதோடு அக்யூட், எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் மற்றும் க்ரோனிக் ஸ்ட்ரெஸ் போன்ற பல வகைகளை கொண்டுள்ளது. இந்த வகைகள் அவற்றின் பண்புகள், அறிகுறிகள், காலம் மற்றும் சிகிச்சை அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ஸ்ட்ரெஸ் என்பது எப்போதுமே ஒரு மோசமான விஷயமாக கருதப்படுவதில்லை.
இது நம்முடைய பொதுவான அன்றாட வேலைகளள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நம்முடைய பிரதிபலிப்பாகும். ஸ்ட்ரெஸ்ஸானது ஒருவர் விழிப்புடன் இருக்க மற்றும் சரியானவழியில் சிந்திக்க தூண்டும். ஆனால் அளவுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால் அது பதற்றம், கவலை உட்பட சில தீவிர நிலைகளை ஏற்படுத்தலாம்.
3 வகையான ஸ்ட்ரெஸ்கள் பற்றி இங்கே...
அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress):
இது மன அழுத்தத்தின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று. அக்யூட் ஸ்ட்ரெஸ் என்பது அடிக்கடி தோன்றும் மற்றும் குறுகிய காலத்திற்கு ஏற்படும். இந்த வகை ஸ்ட்ரெஸ் குறிப்பாக ஏதேனும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது திட்டங்கள், முயற்சிகள் பற்றி அதிகம் சிந்திப்பது மற்றும் அது சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் காரணமாக ஏற்படுகிறது. தற்காலிக உணர்ச்சி கோளாறு, தலைவலி, கழுத்து வலி போன்ற மூன்று வெவ்வேறு பிரச்சனைகளால் இவற்றை அடையாளம் காணலாம். எனினும் சில நேரங்களில் குடல் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், ஆசிட் ஸ்டொமக், வாய்வு கோளாறு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படலாம்.
ALSO READ : ஒரே நெஞ்சு எரிச்சலா இருக்கா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க உடனே ரிசல்ட் தெரியும்..!
எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் (Episodic Acute Stress):
இவ்வகை மன ஸ்ட்ரெஸ்ஸில், ஒரு நபர் அடிக்கடி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். அடிக்கடி இந்த எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழப்பம் மற்றும் நெருக்கடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் உணர்ச்சிகள் முற்றிலும் அழுத்தம் நிறைந்தவை மற்றும் ஒழுங்கற்றவையாக இருக்கும்.
இந்த வகையான ஸ்ட்ரெஸ் "Type A" பர்சனாலிட்டி மற்றும் "Worrier" போன்ற இரண்டு வெவ்வேறு பர்சனாலிட்டிகளில் காணப்படுகிறது. Type A பர்சனாலிட்டி கொண்டவரிடம் கடுமையான மன அழுத்தம் அடிக்கடி காணப்படுவம். ஆக்ரோஷம், பொறுமையின்மை மற்றும் அவசர உணர்வை கொண்டிருப்பார். இந்த அறிகுறிகள் coronary heart டிசீஸ் எனப்படும் இதய நிலைக்கும் வழிவகுக்கும்.
க்ரோனிக் ஸ்ட்ரெஸ் (Chronic stress):
க்ரோனிக் ஸ்ட்ரெஸ் எனப்படும் நாள்பட்ட மன அழுத்தம் கடுமையானது, நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும். குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட வெறுப்பு அனுபவங்கள் அல்லது வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவங்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
ப்ரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் அல்லது ஸ்ட்ரெஸ்ஸால் தூண்டப்படும் cardiomyopathy, இதயத்தின் முக்கிய அறையான இடது வென்ட்ரிக்கிளை பலவீனப்படுத்தும். இது பொதுவாக கடுமையான உணர்ச்சி அல்லது உடல் அழுத்தத்தால் ஏற்படுகிறது.
காரணங்கள்:
- நெருங்கியவரின் எதிர்பாராத இழப்பு
-திடீர் விபத்து
- ரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி
- கடும் பயம்
- கடுமையான வாக்குவாதம் காரணமாக ஏற்படும் ஸ்ட்ரெஸ்
ஸ்ட்ரெஸ் உடலில் குறிப்பாக இதயத்தின் மீது கடும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் இதயமும் நம்முடைய ஸ்ட்ரெஸ் லெவலும் எப்போதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு நபர் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் போது நடக்கும் ரியாக்ஷன் காரணமாக எலும்பு மஜ்ஜை அதிக வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்குகிறது. இது தமனிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. தவிர மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மார்பு வலியை ஏற்படுத்தும்.
ப்ரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் என்பது கடும் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்பட கூடிய இதய நோய்களாகும். எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் இதய நோய்களைத் தவிர்க்க, அன்றாட வாழ்வில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் கலையை அவ்வளவு சீக்கிரம் கற்று கொள்ள முடியாது தினசரி பயிற்சி அவசியம்.
- எப்போதும் சிரித்த முகத்துடன் பாசிட்டிவான எண்ணங்களுடன் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சிரிப்பு மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது, தமனிகளில் வீக்கத்தை குறைக்கிறது.
ALSO READ : எல்லோருக்கும் பிடித்தமான நபராக நீங்கள் இருக்க வேண்டுமா..? ஹார்வர்ட் ஆய்வறிக்கை சொல்வதை கேளுங்க..!
- நம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது எண்டோர்பின்ஸ் எனப்படும் மனநிலையை அதிகரிக்கும் கெமிக்கல்களை வெளியிடுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் நீங்கும். இதய தசைகள் வலுவடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது எடை அதிகரிக்க வழிவகுத்து கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. தினசரி யோகா மற்றும் தியானம் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பலரும் அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை கூடுவதோடு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரோக்கிய உணவுகளை கையில் எடுப்பதை மனஅழுத்தத்தின் போது உறுதி செய்ய வேண்டும்.
- நம் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி யோசிப்பது ஒரு விருப்பமாக இருக்க கூடாது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மன அழுத்தத்தை குறைப்பது அவசியம். மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் போது புகை, மது, அதிகம் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை கடைபிடிக்க கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anxiety, Depression, Mental Stress