மலச்சிக்கலால் அவதியா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருங்கள்..!

உடல் உழைப்பு இல்லாமை,, முறையான தூக்கமில்லாமை போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

மலச்சிக்கலால் அவதியா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருங்கள்..!
மாதிரிப்படம்
  • Share this:
மலச்சிக்கல் என்பது உடல் சூட்டினால் மட்டுமல்ல உடல் உழைப்பு இல்லாமை, முறையான தூக்கமில்லாமை, உணவில் ஆரோக்கியம் இல்லை, தூக்க நேரத்தில் மாற்றம், நிறைய நொறுக்குத் தீனி, ஹோட்டல் உணவு போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் உண்டாகும். இதை சரிசெய்ய என்ன செய்யலாம்..?

உடற்பயிற்சி : இதற்கு உடயிற்சி மிக அவசியம். உடற்பயிற்சி இல்லை என்றாலும் பிடித்த பாடலுக்கு நடனம் ஆடலாம். மருத்துவர்கள் வாரத்திற்கு 100 - 300 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

உணவில் கவனம் : நார்ச்சத்துதான் ஜீரண சக்தியை அதிகரிக்கும், மலம் கழிப்பதை எளிமையாக்கும். எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்த்துக்கொள்ளுங்கள்.


கீரை, தானிய வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள். காரமான உணவு, ஸ்னாக்ஸ், மைதா போன்ற உணவுகளை தவிர்த்தல் நல்லது.தண்ணீர் : தண்ணீர் அதிகம் குடிப்பது அவசியம்.துக்கம் : தூக்கம் சீராக இருக்க வேண்டும். கண்ட நேரத்தில் தூங்குவதை தவிருங்கள். இரவு 8 மணி நேர தூக்கத்தை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.


பார்க்க :

 

 

 
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading