Water Breaking : பிரசவ நேரத்தில் பனிக்குடம் உடையும் அறிகுறிகள் மற்றும் உடனே நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்...
Water Breaking : பிரசவ நேரத்தில் பனிக்குடம் உடையும் அறிகுறிகள் மற்றும் உடனே நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்...
பனிக்குடம் உடையும் அறிகுறிகள்
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர வளர அழுத்தத்தை உண்டாக்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இதே போல தான் பனிக்குடம் உடைய துவங்கி திரவம் வெளியேறுவதும் காணப்படும்.
பிரசவ நேரம் நெருங்கும் போது, குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று பனிக்குடம் உடைவது தான். அம்னியோட்டிக் சாக் எனப்படும் திரவம் நிறைந்த ஒரு பையில் குழந்தை வளரும். குழந்தை கருவில் உருவாவது முதல் பிறக்கும் வரை அந்த பைக்குள் தான் இருக்கும். பனிக்குடத்தில் உள்ள திரவம் குழந்தையை சௌகரியமாக வைத்திருக்கும். கர்ப்பமடைந்து 36 வாரங்களில் அந்த பனிக்குடத்தில் உள்ள திரவம் குழந்தையின் வளர்ச்சியோடு சேர்ந்து முதிர்ச்சியடையும்.
அதனால் தான் 35 அல்லது 36 வாரத்திலிருந்து 40 வாரம் வரை எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது. பிரசவ வலி ஏற்பட போகிறது என்பதற்கான முதல் அறிகுறியே பனிக்குடம் உடைந்து அதிலிருந்து திரவம் வெளியேற துவங்குவது தான். இது தான் ஆங்கிலத்தில் water breaking என்று கூறப்படுகிறது.
திரவம் வெளியேறுவது நிற்காது:
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர வளர அழுத்தத்தை உண்டாக்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இதே போல தான் பனிக்குடம் உடைய துவங்கி திரவம் வெளியேறுவதும் காணப்படும். தண்ணீர் சொட்டுவது போல பனிக்குடம் உடைந்து அதில் இருக்கும் திரவம் வெளியேற தொடங்கும். பனிக்குடம் லேசாக கிழிந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக திரவம் லீக் ஆகும். ஆனால் அது எந்த அளவுக்கு உடைந்திருக்கிறது என்பதை பொறுத்து பனிக்குடத்தில் இருக்கும் தண்ணீர் வேகமாக வெளியேறும் வாய்ப்பும் இருக்கிறது.
அழுத்தத்தை உணரலாம்:
பனிக்குடம் உடைய போகிறது என்ற அழுத்தத்தை பெண்களால் மிகவும் தெளிவாக உணரமுடியும். அது இருந்தாலும் அல்லது உடைந்து போனாலோ லீக்கேஜ் தொடங்குவதற்கு முன்னரே அந்த அழுத்தம் ஏற்படும். அதைத் தொடர்ந்துதான் திரவம் வெளியேறும். அதுமட்டும் இல்லாமல் பனிக்குடத்தில் இருக்கும் திரவம் என்பது கெட்டியான திரவமாகவோ அல்லது வெள்ளை நிறத்திலோ இருக்காது. அது தண்ணீர் போன்று தான் காணப்படும்.
சிறுநீர் கழிக்கும் போது அதில் இருக்கும் வாடையில் அம்மோனியாவின் வாடை தெரியும். ஆனால், பனிக்குடத்தின் திரவத்தில் எந்த விதமான வாடையும் இருக்காது.
பனிக்குடத்தின் தண்ணீர் உடையும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்
பனிக்குடம் உடைவது என்பது பிரசவத்திற்கான முதல் அறிகுறியாக இருப்பதால் பனிக்குடம் உடைந்துவிட்டது என்பதை உறுதி செய்து அல்லது சந்தேகம் இருந்தாலுமே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பனிக்குடம் 37 வாரங்களுக்குள் உடைந்தால் அது PROM என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை கருவில் முழுவதுமாக வளர்வதற்கு, மருத்துவர் உடனடியாக குழந்தையை டெலிவரி செய்யாமல் சில நாட்கள் காத்திருப்பார்கள்.
பனிக்குடத்தில் இருக்கும் திரவம் தண்ணீர் போல எந்த வாடையும் இல்லாமல் இருக்கும் என்று மேலே ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் வெளியேறும் திரவத்தில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தாலோ அல்லது பிரவுன் நிறத்தில் பச்சை நிறத்தில் அல்லது ரத்த திட்டுக்கள் காணப்பட்டாலோ, கருவிலிருக்கும் குழந்தை தனது உடலில் இருந்து கழிவை வெளியேற்றி இருக்கிறது என்பதற்கான அறிகுறி. இதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவித்தவுடன் மருத்துவர் குழந்தையை டெலிவரி செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பார்.
பெரும்பாலும் பனிக்குடம் உடைந்த கொஞ்ச நேரத்திலேயே பிரசவ வலி எடுக்கத் துவங்கிவிடும். ஆனால் பனிக்குடம் உடைந்து திரவம் வெளியாக தொடங்கி 24 மணி நேரம் வரை பிரசவவலி இல்லாமல் போனால், அது குழந்தைக்கு ஏதோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். எனவே தொற்றை தடுப்பதற்கு மருத்துவர் மருந்து கொடுக்கலாம் அல்லது குழந்தையை டெலிவரி செய்யலாம்.
எனவே பனிக்குடம் உடைந்தவுடன் அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.