ஊரடங்கை சமாளிக்க பலரும் செல்ஃபோன், லேப்டாப், கேட்ஜெட்டுகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சிலர் வீட்டில் அலுவலகப் பணிக்காக லாப்டாப்பில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். இவற்றின் பயன்பாடு பொழுதைக் கழிக்க உதவினாலும் கண்கள் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன வழி என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மருத்துவர் ஷிவ் ஷங்கர் மிஸ்ரா என்பவரிடம் பேட்டி எடுத்துள்ளது. அதிலிருந்து சில குறிப்புகள் உங்களுக்காக...
கண்களுக்கு ஓய்வாகவும், வறண்டு போகாமல் இருக்கவும் சில வீட்டுக்குறிப்புகளை செய்யலாம்.
கண்களுக்கு ஓய்வு
அதில் வெள்ளரியை வட்டமாக நறுக்கி கண்களில் வைத்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்.
ரோஸ், சாமந்தி, லாவண்டர், தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை தடவி மசாஜ் செய்யலாம்.
ஐஸ் கட்டிகளை கண்களை மூடி இமைகளில் வைக்கலாம். 2-3 நிமிடங்கள் இப்படி செய்தால் ரிலாக்ஸாக இருக்கும்.
அடுத்ததாக 20-20-20 முறையை பின்பற்றலாம். அதாவது 20 நிமிடம் கேட்ஜெட் என்றால் 20 நொடி பிரேக் அடுத்து 20 அடி தூரம் கொண்ட பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்ய கண்களின் வறட்சியை தவிர்க்கலாம்.
முற்றிலும் எப்போது தவிர்க்க வேண்டும்..?
தலைவலி, கண் எரிச்சல், தூக்கம், கழுத்து, தோள்பட்டை வலி, மங்களான பார்வை, கண் வறட்சி, தண்ணீர் வடிவது போன்ற உபாதைகள் இருந்தால் உடனே திரை பயன்பாடுகளை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
பயன்படுத்தும் முறை
லேப்டாப், கணினியை 18-30 இஞ்ச் தூரத்தில் வைத்து பயன்படுத்துங்கள். செல்ஃபோன், லாப்டாப்பின் பிரைட்னஸை குறைத்து பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு முறையும் செல்ஃபோன், லாப்டாப்பின் திரை மீது இருக்கும் தூசிகளை துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள். இதனால் தெளிவான திரை மட்டுமல்லாது கூர்மையாக பார்த்து கண்களுக்கு வேலை கொடுப்பதும் குறையும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.