நகங்களின் சுகாதாரம் முழு உடலுக்கும் ஒரு முக்கிய குறியீடாகும். ஆனால் பலரும் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்கிறது ஆய்வு. இதனால் மக்கள் பல நோய் அறிகுறிகளை அனுபவிப்பதாக கூறுகிறது.
நமது நகங்களைப் பற்றிய அறியாமை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கிருமிகள் நம் கைகள் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. காரணம் இந்தியர்களுக்கு பொதுவாகவே கைகளில் சாப்பிடும் பழக்கம்தான் இருப்பதால் கை நகங்களின் சுத்தம் அவசியம் என்று கூறப்படுகிறது. எனவே, நக சுகாதாரம் இல்லாமல் கை சுகாதாரம் முழுமையடையாது.
நகங்களின் சுகாதாரம் என்பது உணவுத் துகள்கள், அழுக்கு மற்றும் தூசிகள் நகங்களில் ஒட்டாமல் இருப்பதையும், நகங்களில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் இருப்பதையும் உறுதி செய்வதாகும். இதை முறையாக செய்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும். நகங்களின் சுகாதாரத்தை தவிர்ப்பது வைரஸ் தொற்றுக்கும் ஆளாக நேரிடும். நகங்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டுவதால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் போன்ற பல கடுமையான பிரச்சினைகள் எழுகின்றன. பெரும்பாலும் இவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
விரல் நகங்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்காமல் உலர்ந்தவாறு வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நகங்களுக்கு அடியில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை வளர்ப்பதற்கு ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாத்திரங்களை கழுவும் போது, சுத்தம் செய்யும் போது அல்லது கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்தும் போது பருத்தியால் ஆன ரப்பர் கையுறைகளை அணிவது நல்லது.
நக சுகாதாரத்தை கடைபிடிக்க, நீங்கள் பயன்படுத்தும் நக பராமரிப்பு தயாரிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கூர்மையான துருப்பிடிக்காத-எஃகு நக வெட்டிகளை பயன்படுத்தி அழுக்கு நீக்க வேண்டும். அது நகங்களுக்கு கீழே மறைந்திருக்கும் கிருமிகள் மற்றும் அழுக்குகளை அகற்றும். நகங்களை நேராக ட்ரிம் செய்து, பின் சொரசொரப்பு கம்பி கொண்டு மென்மையான வளைவில் வட்டமாக தேய்க்கவும். நகங்களை வெட்டிய பிறகு எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளையும் நகங்களையும் சுத்தமாக கழுவவும்.
உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
வெட்டுக்காயங்கள் அதிகமாக வளராமல் இருக்க கைகள் மற்றும் நகங்களை ஆற்றுவதில் கவனம் செலுத்துங்கள். நெயில் பெயிண்ட் ரிமூவர், ஹேண்ட் சானிடைசர்கள் மற்றும் சோப்புகளை அடிக்கடி பயன்படுத்துவதால், நகங்களுடன் க்யூட்டிகல்ஸ் வறட்சி ஏற்படும். நகங்களை எப்போதும் வெட்டி குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைத் தொடர்ந்து ஒழுங்கமைத்து, குறைந்தது 20 வினாடிகளுக்குக் கைகளைக் கழுவி, பிறகு மாய்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் நோய்களின் வாய்ப்பைக் குறைக்கும் மற்றும் எந்த வகையான வைரஸ்களையும் தடுக்கும்.
நகங்கள் சேதமடையாமல் பாதுகாக்க இன்னும் சில வழிகள் :
விரல் நகங்களை கடிப்பதை தவிருங்கள் : இது நகப் படுக்கையை சேதப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் ஒரு சிறிய வெட்டு தொற்றுநோயை ஏற்படுத்தும். மேலும்,நகங்களைக் கடிக்கும்போது, கிருமிகள் நேரடியாக நம் வாயில் நுழைகின்றன.
தொங்கு நகங்களை அகற்ற வேண்டாம்: சிலருக்கு நகங்களின் இடையில் மெல்லிய நகம் வளரும். அதை தொங்கு நகம் என்பார்கள். அது சிலருக்கு தொந்தரவாக இருக்கும். எனவே அதை வலித்தாலும் பரவாயில்லை என அகற்றிவிடுவார்கள். அப்படி தொங்கு நகங்களை ஒருபோதும் அகற்ற வேண்டாம். அப்படி அகற்றுவதாக இருந்தால் கவனமாக அகற்றவும். நகங்களில் கடுமையான பொருட்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். எப்போதும் அசிட்டோன் இல்லாத தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.
வழக்கமான ஆணி பரிசோதனைகளை தவிர்க்காதீர்கள் : உங்களுக்கு தொடர்ந்து நக பிரச்சனைகள் இருந்தால், வழக்கமான சிகிச்சையை பின்பற்றுவது அவசியம்.
பகிர வேண்டாம்: உங்கள் நெயில் கிளிப்பரைப் பகிர வேண்டாம், ஏனெனில் அவற்றில் கிருமிகள் உள்ளன. நெயில் கிளிப்பரை வெதுவெதுப்பான நீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nail care