கோடைகாலம் துவங்கி இருப்பதால் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலகத்திற்கு சென்றாலும் அல்லது வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் கூட அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.
வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வியர்வை, எண்ணெய் சருமம், அரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டு பலர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பலரும் வெயிலுக்கு வெளிப்படும் உடலின் பாகங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் வெப்பத்தின் தாக்கத்தால் பெரும்பாலும் வயிற்றுக்கும் தொடைக்கும் இடையில் உள்ள நம் இடுப்பு பகுதி மற்றும் அக்குள், கழுத்தின் பின்பகுதி உள்ளிட்ட பல மறைவான பாகங்களும் வெயிலால் பாதிக்கப்படுகின்றன. ஸ்கின் ரேஷஸ், உடல் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உடலின் சென்சிட்டிவான பாகங்களில் ஏற்படும். கோடை வெப்பத்திற்கிடையே ஒருவர் தனது அந்தரங்க பகுதிகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..
கோடையில் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான விஷயம் அதிக வியர்வை. அதிகமாக வியர்ப்பதால் இது அலர்ஜி, ரேஷஸ் மற்றும் நமைச்சல் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அக்குள் அல்லது இடுப்பு போன்ற சென்சிட்டிவான பகுதிகளை பராமரிக்க எளிய வழி அந்த பகுதிகளை சுத்தமாக, உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.
உங்களது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்.!
உதாரணமாக நீங்கள் குளித்தவுடன் உங்கள் அக்குள்களை துண்டால் துடைப்பத்தை தவிர்த்து நல்ல பிராண்ட் டால்கம் பவுடரை மதமாக பயன்படுத்துவது அப்பகுதியை நீண்ட நேரம் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
கோடையில் வியர்வை சுரப்பிகள் உங்கள் உடலின் வெப்பநிலையைக் குறைக்க அதிக நேரம் வேலை செய்கிறது. இதனால் உடலின் சென்சிட்டிவான பகுதிகளில் துர்நாற்றம் வீசும். எனவே நீடித்த புத்துணர்ச்சியை தரும் நறுமணம் கொண்ட க்ளென்சர்களை பயன்படுத்துவது உதவியாக இருக்கும். கோடை காலத்திற்கு அக்வா, சிட்ரஸ் மற்றும் மின்ட் நறுமணங்கள் நல்ல தேர்வாகும்.
இடுப்பு, தொடைகளின் உட்புறம் போன்ற நமது உடலின் மிகவும் சென்சிட்டிவான சில பகுதிகள், அவற்றின் pH-ல் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தடிப்புகள் மற்றும் தொற்றுகளுக்கு ஆளாகின்றன. கோடையில் இன்னும் இதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், உங்கள் சருமத்தின் pH-ஐ சமநிலைப்படுத்தும் மென்மையான சுத்திகரிப்புக்காக நல்ல தரமான இன்டிமேட் வாஷ்களை பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு ஒரு முறியவாதி இன்டிமேட் வாஷை பயன்படுத்துவது நல்லது. அதே போல நல்ல தளர்வான ஆடைகளை அணிவதன் மூலம் உங்கள் சருமத்தையும் சுவாசிக்க அனுமதிக்கவும். இது போன்ற சில அடிப்படை குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றினால் வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்த்து நலமாக இருக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Intimate Hygiene, Summer