கம்ப்யூட்டர் முன்னாடி வேலை செய்றீங்களா? அப்ப இதை கட்டாயம் படிங்க..

காட்சி படம்

நீண்ட நேரம் லேப் டாப் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால், கட்டாயம் உங்கள் கண்கள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 • Share this:
  பொதுவாக நாம் 1 நிமிடத்துக்கு சராசரியாக 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப்பிற்கு முன்பு நாம் அமர்ந்திருக்கையில் இது 5 - 6 முறையாக குறைகிறது. இதனால் நாளடைவில் கண்கள் தொடர்பான நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்கிறது. சரி இந்தப் பிரச்னையை வரும் முன் கண்களைக் காப்பதைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறோம்.

  நீண்ட நேரம் கண்களை சிமிட்டாமல், கம்ப்யூட்டர் திரையை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் கண்கள் உலர்ந்து விடும். கண்களில் ஸ்ட்ரெஸ்ஸை தவிர்ப்பதற்கு, 1 மணி நேரத்துக்கு 5-10 நிமிடம் இடைவேளை எடுத்துக் கொண்டு, அப்போது கண்களுக்கு குளிர்ச்சியான விஷயங்களைப் பாருங்கள். முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை விலக்கி தூரத்தில் இருக்கும் ஏதாவது பொருளை பாருங்கள்.

  உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, கண்களில் 60 நொடிகள் ஒற்றி எடுங்கள். இது களைப்படைந்த கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் கண்களுக்கு அமைதி கிடைக்கும் வரை, இதனை இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

  அடர்வு நிறைந்த நிற எழுத்துக்களையும், லைட்டான வண்ண பின்புலங்களையும் தேர்வு செய்து வேலையை தொடங்கலாம்.

  Also Read : நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்கும் வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? திறந்து வைத்த நீரை குடிக்கலாமா..?

  உங்கள் கண்களில் ஸ்ட்ரெயினை தவிர்க்க விரும்பினால், நீங்கள் வேலை செய்யும் அறையின் ஜன்னல்கள் மற்றும் சீலிங்கில் இருந்து கண்களை கூசும் ஒளியானது, கம்ப்யூட்டர் மீது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வண்ணம் பச்சை. அதனால் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, ஜன்னல் வழியே வெளியுலகை கொஞ்சம் பார்த்து ரசியுங்கள். ஒருவேளை 4 சுவர்களுக்குள் வேலை செய்பவரானால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வால் பேப்பரை பச்சை நிறத்தில் மாற்றுங்கள்.   

  கம்ப்யூட்டர் கண்ணாடிகள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் கண்களில் ஏற்படும் சோர்வை குறைப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் சோர்வை சரிசெய்து கண்களை ரிலாக்ஸ் ஆக்குகிறது. மேற்கூறிய விஷயங்களை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் பின்பற்றுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: