சர்க்கரை நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..?

மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை நேரத்திற்கு தவறாமல் உட்கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..?
சர்க்கரை நோயாளிகள்
  • Share this:
வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் என நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே அதிகமாகத் தாக்குகிறது கொரோனா. எனவேதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடச் சொல்கின்றனர். அந்தவகையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எப்படியெல்லாம் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் முதலில் சர்க்கரையின் அளவை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சர்க்கரையின் அளவை கண்காணித்து குறித்துக்கொள்வது அவசியம்.

அடிக்கடி சோப்பால் கைக் கழுவ வேண்டும், தூய உடை அணிதல், சுற்றுச்சூழல் சுத்தம் என சுகாதாரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உங்களுக்குள் தீர்மானமாக முடிவெடுங்கள்.


வெளியே செல்வதை தவிர்த்தல் அவசியம். அப்படி கட்டாயம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தால் தடிமனான துணியால் முகமூடி அணிந்து செல்ல வேண்டும்.

உடலில் ஏதேனும் மாற்றங்கள், முச்சு வாங்குதல் என எந்த உடல்நிலைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகுதல் அவசியம். இந்த நேரத்தில் தண்ணீர் அதிகம் குடியுங்கள். நீர்ப்பழங்கள் அதிகம் உட்கொள்ளுங்கள்.

மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை நேரத்திற்கு தவறாமல் உட்கொள்ளுங்கள்.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். மருத்துவர் சாப்பிடக் கூடாது என கூறிய உணவுகளை கடைபிடியுங்கள்.

உடம்பில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேலை ஏற்பட்டாலும் சீக்கிரம் குணமாவதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கும் உங்கள் மருத்துவரை அணுகுகள்.

இந்த நேரத்தில் எந்த உடல் பிரச்னைகள் வந்தாலும் தானாக மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.

செய்திகளை அதிகம் பார்ப்பதை தவிறுங்கள். இது உங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை உண்டாக்கும். பதட்டம், பயத்தை உண்டாக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்.

முடிந்த அளவு எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நன்கு தூங்கி எழுவது அவசியம்.

பார்க்க :
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading