வேலை, வீடு, குடும்பம் என வேகமாக நகரும் இந்த உலகில் எலும்புகளின் ஆரோக்கியம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியம் என்பது நடைப்பயிற்சி அல்லது விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளுடன் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் தொடர்புடையது. இந்த இடத்தில், எலும்புகளுக்கான ஆரோக்கியமான உணவு தேவைகள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதினர் சந்திக்கும் தற்போதைய பிரச்சனைகள் - சூரிய ஒளியின் பற்றாக்குறை, வைட்டமின்-டி குறைபாடு காரணமாக மோசமான கால்சியம் அப்சார்ப்ஷன்; நடுத்தர வயது மற்றும் உழைக்கும் இளைஞர்களுக்கு - மீண்டும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவைகளால் எலும்புகள் பலவீனம் அடைகிறது. வயதானவர்களை பொறுத்தவரை, இது ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும், அதாவது ரேப்பிட் போன் டையிங் (rapid bone dying) ஆகும்.
மேற்கண்ட நிலைமைகளில், எலும்புகளின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களை நாம் எவ்வாறு கையாள்வது?
முதலாவதாக, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பற்றிய ஞானம் மற்றும் விழிப்புணர்வு நமக்கு தேவை: கால்சியம் ஆனது பால், தயிர், கீரை, பாதாம், மீன் (மத்தி மற்றும் சால்மன்) ஆரஞ்சு, ப்ரோக்கோலி, காளான்கள் போன்றவைகளில் அதிகமாக உளள்து. வைட்டமின் டி ஆனது மீன் (மத்தி, சால்மன், சூரை போன்றவை), மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரிய ஒளியில் அதிகமாக உள்ளது.
also read : பார்பெல் டெட்லிஃப்ட் முதல் கிக் பாக்ஸிங் வரை.! ராஷ்மிகாவின் வேற லெவல் ஃபிட்னஸ் பயிற்சிகள்..
இரண்டாவதாக போன் கால்சியம் மினரலைசேஷன் மற்றும் டிமினரலைசேஷன் (Bone calcium mineralization and demineralization) பயிற்சிகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் மேற்கூறிய செயல்முறை எலும்புகளை வலுப்படுத்துகிறது. பொதுவாகவே 'போன் லாஸ்' மற்றும் அதை தொடர்ந்து 'நியூ போன் ஃபார்மேஷன்' என நமது உடலின் எலும்புகளின் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இது தரமான மற்றும் நல்ல எலும்பின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு நிலையான செயல்முறையாகும். இதற்கு உடற்பயிற்சிகளும் அவசியம். அதாவது நடைபயிற்சி, ரன்னிங், ஜிம் அல்லது நடனம் போன்ற வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, முதியோர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுவதால், அவர்கள் முற்றிலும் வேறுபட்ட சிக்கலை எதிர்கொள்கின்றனர். ஆஸ்டியோபோரோசிஸை முற்றிலுமாகத் தடுக்க முடியாது, ஆனால் அது சார்ந்த அறிவு, போதுமான மருத்துவ பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சையின் மூலம் இந்த நிலையை கணிசமாகக் குறைக்க முடியும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது, பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மாதவிடாய் காரணமாக பெண்களுக்கும், முதியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதை மிக விரைவில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
மாதவிடாய் காலத்தில் பிஸ் பாஸ்போனேட் போன்ற மருந்துகளுடன் ஹார்மோன் சிகிச்சை பெறுவதன் மூலம் இதை தடுக்கலாம். உடன் தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சில நிலைமைகளை கண்டறிந்தும் கூட எலும்புகள் பலவீனமாவதை தடுக்கலாம்.
மேற்கண்ட தகவல்களை வழங்கியது பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை துறை நிபுணரான டாக்டர் சாய் கிருஷ்ண பி நாயுடு ஆவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bone health