நேபாளத்தில் காலரா என்று செய்தி படித்த ஒரு வாரத்தில் காரைக்காலில் காலரா பரவல் காரணமாக அவசர நிலை பிரகடன படுத்தப்பட்டுள்ளது. காலரா நோய் உங்கள் பகுதியில் பரவக்கூடும் என்பதால் அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்
காலரா:
19 ஆம் நூற்றாண்டில் முதன் முதலில் காலரா நோய் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து தான் மாற்ற நாடுகளுக்குப் பரவி பெருந்தொற்றாக மாறியது. ‘விப்ரியோ காலரே’ என்ற பாக்டீரியா தான் இந்நோய்க்கு காரணம். சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் காலரா பரவும்.
முதலில் வெளிப்படும் அறிகுறி என்றால் அது வயிற்றுப்போக்கு, வாந்தி தான்.
அதோடு ரத்த அழுத்தக் குறைவு, மயக்கம், காய்ச்சல், தாகம், கால் தசைப் பிடிப்புகள், அதிக வயிற்றுப்போக்கு , அதுவும் நீர் தன்மையோடு வெளியேறுதல் மற்றும் அமைதியின்மை ஆகியவை காலராவின் அறிகுறிகள்.
அதிகப்படியான நீர் உடலில் இருந்து வெளியேறும். இந்த நீரிழப்பால் உடல் வறண்டு காணப்படும்.
உதடுகள் , கை , கால் தோல்கள் வறண்டு சுருக்கத்தோடு காணப்படும்.
சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 12 மணி முதல் ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் உருவாகின்றன.
பரவல்:
அசுத்தமான தண்ணீர், மற்றும் உணவால் இது பரவுகிறது. மழைக்காலங்களில் இது வேகமாகப் பரவும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கார்ப்பரேஷன், கிராப்புற குழாய்களில் இருந்து தண்ணீர் பிடித்தாலும் சரி, கேன்களில் தண்ணீர் வாங்கினாலும் அதை நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும்.
முடிந்தால் கொஞ்சம் வெது வெதுப்பாக இருக்கும்போது பருகவும்.
வெளியில் பயணிக்கும் போதும் கையில் வெந்நீர் எடுத்துச்செல்வது நன்று.
தவிர்க்க முடியாத சூழலில் தண்ணீர் பாட்டில் வாங்கும் போது சீல் உடைக்கப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
வெளியில் சாப்பிடுவதை முடிந்தவரைக் குறைத்துக் கொள்ளவும்.
காய்கறி, பழங்களை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தவும்.
முடிந்தால் அதன் தோல்களை சீவிவிட்டு பயன்படுத்தலாம்.
வெளியில் சென்று வரும்போது நன்றாக கை, கால்களை கழுவி விட்டு உள்ளே வருவது அவசியம்.
அதே போல் மலம் கழிக்க பொதுக் கழிவறைகளையோ வீட்டுக் கழிவறைகளையோ மட்டும் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்கவும்.
பற்களை நன்றாக துலக்க வேண்டும்.
சாப்பிடும் முன், தட்டுகளை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தவும் .
இறைச்சியை பாதி வேக்காடு போல் இல்லாமல் நன்றாக சமைத்து உண்ணவும்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
அதோடு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
Published by:Ilakkiya GP
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.