அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். எனவே அதற்கு பெரிதாக மருத்துவமனைகளை நாடாமல் நாமே வீட்டில் முதலுதவி மேற்கொண்டு காயத்தை ஆற்றுவோம். அப்படி வீட்டிலேயே அந்த காயத்திற்கு மருந்து போட்டு பேண்டேஜ் ஒட்டும்போது அவை சில நேரங்களில் காயத்தில் தொற்று ஏற்படுத்தி புண்ணின் வீரியத்தை அதிகமாக்கும்.
இதற்கு காரணம் நாம் சரியான வழிமுறைகளை பின்பற்றாமல் செய்வதே... எனவே இதுபோன்ற மீண்டும் நிகழாமல் இருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றி பேண்டேஜ் ஒட்டுங்கள். பேண்டேஜ் மட்டுமல்ல கட்டு போடுவதாக இருந்தாலும் இதுதான் வழிமுறை.
தொற்று ஏற்படாமல் காயத்திற்கு பேண்டேஜ் ஒட்டுவது எப்படி..?
இரத்தப்போக்கு நிறுத்த : முதலில் காயம் ஆழமாக இருந்தால், இரத்தப்போக்கை நிறுத்துவது அவசியம். இதற்கு நீங்கள் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். அல்லது பஞ்சு கொண்டு அழுத்தலாம். இவ்வாறு செய்தவுடன் இரத்தம் நின்றுவிடும்.
காயத்தை சுத்தம் செய்யுங்கள் : பிறகு இரத்தப்போக்கு நின்றவுடன், முதலில் காயப்பட்ட பகுதியை நன்கு சுத்தம் செய்யுங்கள். இதற்கு, காயம்பட்ட பகுதியை குழாயை திறந்து ஓடும் தண்ணீரில் 1 நிமிடம் அப்படியே காட்டவும். பின் தொற்றுநோயைத் தவிர்க்க, கிருமி நாசினிகள் திரவத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி காயத்தை சுத்தம் செய்யுங்கள்.
கட்டுக்கான சரியான தேர்வு : காயத்திற்கு ஏற்ப கட்டுகளை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் காயம் லேசானதாக இருந்தால், ஒரு சுற்று பேண்டேஜ் போதுமானது. காயத்திற்கு ஏற்ப, பிரஷர் பேண்டேஜ், மோல்ஸ்கின், காஸ் பேண்டேஜ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இப்படி கட்டு போடுங்கள்: பேண்டேஜ் பட்டையை அகற்றி, தோலை இறுக்கும் போது காயத்தின் மீது தடவி விட வேண்டும். குறுகலான பகுதி தோலின் மீதும், மருந்து பகுதி நேரடியாக காயத்தின் மீதும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். சுற்றும்போது இறுக்கி ஒட்டக்கூடாது
பேண்டேஜ் வகைகள்: காயத்தின் அளவைப் பொறுத்து ரோலர் பேண்டேஜ்கள், டியூபர் பேண்டேஜ்கள், ட்ரை ஆங்கிள் பேண்டேஜ்கள், டேப் பேண்டேஜ்கள் போன்றவற்றைப் பயன்படுத்தவும். பேண்டேஜை டீ ஷேப், எக்ஸ் ஷேப் அல்லது க்ரிஸ்கிராஸ் வடிவத்தில் வெட்டியும் பயன்படுத்தலாம்.
முதலுதவி முக்கியமானது : தொற்று நோயைத் தவிர்க்க, நீங்கள் டெட்டனஸ் ஊசி போட வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு மருத்துவரை அணுகலாம்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.