முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடையில் உடலில் நீர்வற்றிப் போகாமல் இருக்க சில எளிய குறிப்புகள்!

கோடையில் உடலில் நீர்வற்றிப் போகாமல் இருக்க சில எளிய குறிப்புகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதேபோல் ஒவ்வொருவரின் வேலை, வயது, உடல் நிலை, டயட்டைப் பொருத்து உடல் நீரின் தேவை மாறுபடும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு சாராசரி மனிதனின் உடலில் 50 முதல் 65 சதவீதம் நீர் தான். உடல் இயங்குவதற்கு நீர் அடிப்படை ஒன்று. தண்ணீர் குடிக்காமல் ஒரு மனிதனால், வயது, உடல்நலத்துக்கு ஏற்ப 8 முதல் 21 நாட்கள் வரையே உயிர்வாழ முடியும். உடலின் ஒவ்வொறு செல்களும், திசுக்களும், உறுப்புகளும் உடல் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நீரின் மூலமே இயங்குகிறது.

நீர்... உடல் சூட்டை சரியான அளவில் தக்கவைத்து தேவையற்ற கொழுப்புகள், அமிலங்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். கோடைக்காலத்தில் உடல் நீர் எளிதில் உறிஞ்சப்பட்டுவிடும். கோடையில் உடல் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் உணவு முறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம்.

உடலின் நீரின் அளவைத் தக்கவைத்துக்கொள்ள குறைந்தது ஒரு நாளைக்கு 2 லிட்டர் நீர் அருந்த வேண்டியது அவசியம்.  ஒருவரின் வேலை, வயது, உடல் நிலை, டயட்டைப் பொருத்து உடல் நீரின் தேவை மாறுபடும். அதற்காக நீங்கள் 2 லிட்டர் நீர் அருந்திவிட்டீர்கள் என்பதற்காக அதன்பிறகு நீர் அருந்தாமல் இருக்காதீர்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் தட்டிக் கழிக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உங்கள் உடலில் நீர் குறைந்து கொண்டே வருகிறது என்பதை அறிந்துகொள்ள, சிறுநீர்தான் முக்கிய அறிகுறியாகும். நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் வெள்ளையாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலுக்குத் தேவையான நீர் இருக்கிறது என அர்த்தம். அதுவே கருஞ்சிவப்பு, அடர் மஞ்சள் போன்ற நிறங்களில் இருந்தால் உடலுக்கு போதுமான நீர் இல்லை என்று அர்த்தம்.

உடலில் நீரைத் தக்கவைக்க நீர் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. உணவுகள் மூலமாகவும் உடலில் நீரின் அளவை அதிகரிக்கலாம். குறிப்பாக வெயில் நாட்களில் நீர் அதிகம் கொண்ட உணவு முறையைத்தான் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, தக்காளி, வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரக்காய், சௌவ் சௌவ், கோஸ் என நீர் நிறைந்த காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் தகவலுக்கு :  வெயிலை எதிர்கொள்ள இந்த உணவுகளை உண்ணுங்கள்

காய்கறிகள் மட்டுமின்றி, பழங்கள் மூலமாகவும் நீரேற்றத்தை அதிகரிக்க முடியும். அதுமட்டுமின்றி பழங்களால் உடல் நீரைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு தர்பூசணி, கிர்ணிபழம், வெள்ளரிப்பழம் என நீர் நிறைந்த பழங்களை உண்ணலாம்.

கோடைகாலம் வந்துவிட்டாலே கலைகட்டத் தொடங்கிவிடும் இளநீர் மற்றும் நுங்கு வியாபாரம். இவை இரண்டும் உடலுக்கு தேவையான நீரை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேபோல் அதிகநேரம் நீரேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். உடல் நீரேற்றத்தைத் தக்க வைக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்குகளையும் அருந்தலாம்.

மேலே குறிப்பிட்ட எந்த வழிமுறைகளையும் உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் கவலையில்லை, குறைந்தது நீரை மட்டும் அருந்துங்கள். வாட்டர் பாட்டிலில் நீர் நிரப்பி எப்போதும் உடன் வைத்துக்கொண்டு தேவை படும்போதெல்லாம் அருந்துங்கள். முடிந்தால் அதில் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து அருந்துங்கள். டெஸ்கில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் அருகிலேயே பாட்டிலில் நீர் நிரப்பி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது அருந்துங்கள்.

உங்களுக்குக் கொஞ்சம் பசிப்பதுபோல் உணர்ந்தால் தண்ணீர் அருந்துங்கள். அதில் பசி அடங்கிவிட்டதெனில் அது உணவுத் தேவைக்கான பசியில்லை. நீர் தேவைக்கான பசி. உணவுத் தேவைக்கான பசி எவ்வளவு நீர் அருந்தினாலும் கட்டுப்படுத்த முடியாது.

First published:

Tags: Dehydration, Summer