நம் காலம் தொடர்ந்து நவீனமடைய நாமும் அதற்கு ஏற்ப இயற்கை வாழ்வை கைவிட்டுவிட்டு மெஷின் வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டோம். மொபைல், லேப்டாப் போன்ற கேட்ஜெட்ஸ்களால் நம் வாழ்க்கை முறை மாறிவிட்டன. ஆனால், அது முறையான வாழ்க்கை முறை அல்ல. நம்மில் பலர் காலை எழுந்தவுடன் படுக்கையில் இருந்தபடியே மொபைல் போனில் தான் அந்த நாளை தொடங்குகிறோம். அது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? சரி, முறையான வாழ்க்கை முறை எது? எப்படி செய்தால் அந்த நாளை நாம் திருப்தியாக, சிறப்பாக வாழ முடியும்?
காலை எழுந்தவுடன் மொபைலை எடுக்காதீர்கள்!
தினமும் காலை எழுந்தவுடன் மூளை சிறப்பாக செயல்பட தொடங்கும். அப்போது உங்கள் மொபைலை எடுத்து பார்ப்பது அதன் செயல்பாட்டை குறைத்து சுறுசுறுப்பாக இயங்குவதை தடுக்கும். மேலும், படுக்கையில் எழுந்து அமர்ந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஒருமுறை மூச்சை இழுத்து விடுவது மனதை இலகுவாக்கும். எனவே, அதன்மூலம் மூளை சிறப்பாக செயல்பட தொடங்கும்.
இதையும் படிங்க | நீண்ட ஆயுளுக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்… அறிவியல் ரீதியாக நிரூபணம்..!
காலை எழுந்தவுடன் ஒரு கப் கிரீன் டீ…
உங்கள் நாளை சிறப்பாக தொடங்க தினமும் காலை எழுந்த ஃப்ரெஷானவுடன் காபி, டீ குடிப்பதை தவிக்கவும். மாறாக, கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்குங்கள். கிரீன் டீயில் உள்ள பலன்கள் ஏராளம். அதில் உள்ள ஊட்டச்சத்துகள் உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும், கேன்சரை தடுக்கும், இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதனை கட்டுப்படுத்த உதவும், உடல் எடையை கட்டுப்படுத்த கிரீன் டீ சிறந்த வழி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உங்கள் சருமத்திற்கும், முடிக்கும் நல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
15 நிமிடங்களுக்கு யோகா அல்லது தியானம்:
24 மணி நேரத்தில் நாம் சுமார் 16 முதல் 17 மணி நேரமாவது ஓடிக்கொண்டு இருக்கப்போகிறோம். அந்த ஓட்டத்திற்கு ஈடுசெய்ய மன வலிமையும் உடல் வலிமையும் அவசியம். அதற்காக தினமும் வெறும் 15 நிமிடங்கள் செலவிடுவதில் தவறில்லை. தினமும் 15 நிமிடங்களாவது யோகா அல்லது தியானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!
காலை உணவை குடும்பத்துடன் சாப்பிடுங்கள்:
தினமும் காலை அவசர அவசரமாகதான் பெரும்பாலும் மக்கள் அலுவலகத்திற்கு புறப்படுவார்கள். அப்படி செய்வதை தவிருங்கள். தினமும் சிறிது நேரம் செலவிட்டு உங்கள் குடும்பத்துடன் நிதானமாக காலை உணவை உட்கொள்ளுங்கள். அது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
செய்து வேண்டியவற்றை பட்டியலிடுங்கள் (To-Do list):
இன்றைய நாளில் நான் செய்ய வேண்டியவை இவை என அவற்றை பட்டியலிடுவது உங்களை குழப்பமின்றி வேகமாக செயல்பட உதவும். அது நல்ல பழக்கங்களில் ஒன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Life, Healthy Lifestyle