Home /News /lifestyle /

கொரோனா வைரஸ் கர்ப்பிணிகளைத் தாக்குமா..? பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

கொரோனா வைரஸ் கர்ப்பிணிகளைத் தாக்குமா..? பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

திருமணமான பெண்களை பொறுத்தவரை கருத்தரிப்பது என்பது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். மருத்துவ வளர்ச்சி பெருகிவிட்ட இந்த காலகாட்டத்தில் ஒரு பெண் கருவுற்றிருப்பதை வீட்டில் இருந்தபடியே ப்ரெக்னன்சி கிட் (Pregnency Kit) மூலம் தானாகவே சோதித்து அறிந்து கொள்ள முடியும். இது போன்ற தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எளிதில் சோதனைகளை செய்துகொள்ளலாம்.

திருமணமான பெண்களை பொறுத்தவரை கருத்தரிப்பது என்பது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். மருத்துவ வளர்ச்சி பெருகிவிட்ட இந்த காலகாட்டத்தில் ஒரு பெண் கருவுற்றிருப்பதை வீட்டில் இருந்தபடியே ப்ரெக்னன்சி கிட் (Pregnency Kit) மூலம் தானாகவே சோதித்து அறிந்து கொள்ள முடியும். இது போன்ற தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எளிதில் சோதனைகளை செய்துகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சளி , மூக்கில் நீர் ஒழுகுதல் அறிகுறிதான் முதலில் இருந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து வரும் நிலையில் கர்ப்பிணிகளையும் தாக்குமா என்ற அச்சம் பெண்களிடையே நிலவி வருகிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழிகள் என்பதும் அவர்களை துளைத்தெடுக்கும் கேள்வியாக உள்ளது. இதற்கு என்னதான் பதில் ?

    கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் கர்ப்பிணிப் பெண்களைப் பரிசோதித்ததில் குறைவான அளவிலேயே அதன் எண்ணிக்கை இருந்துள்ளது. அவ்வாறு தாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் வைரஸின் தாக்கம் என்பது குறைவாக இருந்துள்ளது. அதேபோல் கருவில் உள்ள குழந்தைக்கும் அதன் தாக்கம் குறைவாகவே இருந்துள்ளது.

    இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் அவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சளி , மூக்கில் நீர் ஒழுகுதல் அறிகுறிதான் முதலில் இருந்துள்ளது.

    சீனாவில் வைரஸ் தாக்கப்பட்ட நான்கு கர்ப்பிணிகளுக்கு குழந்தைப் பிறந்துள்ளது. ஆனால் அந்த நான்குக் குழந்தைகளும் எந்தவித பாதிப்புமின்றி ஆரோக்கியமாகப் பிறந்துள்ளன.



    பாதுகாப்பு வழிகள் :

    கொரோனா வைரஸ் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களியே அதிகமாகத் தாக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும். சாப்பிடும் உணவுகள் மூலமே அதை ஈடு செய்வோம். எனவேதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    அடுத்ததாக கர்ப்பிணிகள் ஒவ்வொரு மாதம் செக் அப் - க்கு செல்வதைத் தவிர வேறெந்த விஷயத்திற்காகவும் பொது இடங்கள், வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    வெளிப்புற உணவுகளை தவிருங்கள். ஆசைப்படும் உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். மருத்துவர் அறிவுறுத்திய உணவுகளை சரியாகக் கடைபிடித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தண்ணீர் அதிகம் குடியுங்கள், நீர்ப் பழங்கள் நிறைய சாப்பிடுங்கள்.

    வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க கைக் கழுவுதல், சுத்தம், சுகாதாரத்தைக் கடைபிடியுங்கள். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் , மற்ற பிரசவகால பிரச்னைகள் இருந்தால் கூடுதல் கவனத்தொடும் , மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றுதல் அவசியம்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி