• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight Loss | ஆயுர்வேத முறைப்படி வெய்ட் லாஸ்..! இதோ நச்சுனு சில டிப்ஸ்!!

Weight Loss | ஆயுர்வேத முறைப்படி வெய்ட் லாஸ்..! இதோ நச்சுனு சில டிப்ஸ்!!

உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த, நாளொன்றுக்கு நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளை ஆறு முதல் எட்டு சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவ்வபோது உண்ண வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு.

  • Share this:
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதை உட்கொள்ளுங்கள், இந்த உபகரணத்தை வாங்கி பயிற்சி செய்யுங்கள், இந்த டயட்டை பின்பற்றுங்கள் என்று கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் உடல் எடையை எப்படியாவது குறைக்க முயற்சி செய்பவர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளன. அதிலும், ஊரடங்கு காலத்தில், பலரும் கணிசமாக எடை கூடியுள்ளனர். அதேநேரத்தில் உடல் நலம் முக்கியம் என்பதையும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும் பலரும் கொரோனா தொற்று காலத்தில் உணர்ந்துள்ளனர். ஆனால் உடல் எடையை எப்படி குறைப்பது என்பது பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. அடிப்படை உடற்பயிற்சிகளும், உணவுக் கட்டுப்படும் எடை குறைப்புக்கு முக்கியமானவை என்று கருத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலகமே வீட்டில் முடங்கி இருந்ததால், உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய் விட்டது. அதே போல, உணவுக்கட்டுபாடா அப்படி என்றால் என்ன என்ற கேள்வியே மிஞ்சி உள்ளது. கிராஷ் டயட்டுகள் எனப்படும் தீவிரமான உணவுக்கட்டுபாட்டை பின்பற்றினால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். எடை குறைப்பது மிகவும் கடினமாக உணர்ந்தால், கவலை வேண்டாம். நம் நாட்டின் மிகப்பழமையான பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம், எடைகுறைப்பதற்கு எளிமையான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.

ஆயுர்வேத முறைப்படி எடைக்குறைப்பதற்கான வழிமுறைகள் இங்கே:

வெந்நீர் குடிப்பது:

ஆயுர்வேத மருத்துவத்தில் நீர் என்பது அமுதமாகக் கருதப்படுகிறது. உடலின் பல்வேறு உறுப்புகள் சரியாக செயல்பட, போதிய தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில், ஆயுர்வேதம் குளிர்ந்த நீர் குடிக்கக்கூடாது என்று கூறுகிறது.

எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது சூடான நீர் குடிப்பது நல்லது என்பது ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. வெதுவெதுப்பான நீர் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி (அமா), உறுப்புகளின் சிறப்பான இயக்கத்துக்கு துணை நிற்கிறது. தினமும் வெந்நீர் அருந்துவதால், உடலில் உள்ள அதிகமான கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

போதிய அளவு தூங்க வேண்டும்:

ஒரு மனிதனுக்கு அடிப்படைகளான உணவு, உடல் தவிர்த்து போதிய தூக்கமும் மிகவும் அவசியம். நிம்மதியான மற்றும் போதிய நேரம் தூக்கம் இல்லாமல் இருப்பது, பல நோய்கள் உருவாகக் காரணமாக இருக்கும். உடல் எடையை குறைக்க இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

இரவு நேரத்தில் அளவாக சாப்பிடுங்கள்:

இரவு நேரத்தில் குறைவான அளவில் உண்ண வேண்டும். இரவில் அதிக அளவு சாப்பிட்டால், உங்கள் செரிமான உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் உணவு எளிதில் செரிமானம் ஆகாமல், உடலில் நச்சுக்களாக தேங்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிப்பு பிரச்னையும் ஏற்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவை உண்ண வேண்டும். அது மட்டுமின்றி, இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது, செரிமானத்துக்கு போதிய நேரம் அளிக்கும் என்பதையும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

மூன்று வேளை உணவு உண்ணுதல்:

எத்தனை வேளை சாப்பிடுவது பற்றி பலருக்கும் பல வித கருத்துக்கள் இருக்கலாம். உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த, நாளொன்றுக்கு நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளை ஆறு முதல் எட்டு சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவ்வபோது உண்ண வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், ஆயுர்வேதத்தில், நீங்கள் நாளொன்றுக்கு மூன்று முறை மட்டுமே உண்ண வேண்டும் என்று கூறப்படுகிறது.

நாள் முழுவதும் ஏதேனும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். எனவே, மூன்று வேலை மட்டுமே உணவை உட்கொள்ள வேண்டும்.

Must Read | முடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகளின் லிஸ்ட்! இதுதான் பெஸ்ட்!

சாப்பிட்ட பிறகு நடப்பது:

உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உணவு மற்றும் ஓய்வில் மட்டும் கிடைக்காது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதும், உடலுக்கு வேலை கொடுப்பதும் முக்கியம். உங்களால் முறையான உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், சாப்பிட்ட பிறகு 10 முதல் 20 நிமிடங்கள் வரை நடப்பது செரிமானத்துக்கும் உதவும், மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

பருவ கால உணவுகள் (SEASONAL FOODS):

எந்த நாட்டு உணவையும், பழங்களையும், காய்கறிகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வரும் அளவுக்கு உலகம் சுருங்கி விட்டது. இதனால், நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவுகளை உண்பதை கிட்டத்தட்ட மறந்து விட்டோம். இயற்கை நம்முடைய பருவ காலத்துக்கு ஏற்றவாறு உணவுகளைத் தருகிறது. உதாரணம், கோடை காலத்தில் தான் தர்பூசணி அதிகமாக விளையும். வேர் காய்கறிகள் குளிர் காலத்தில் தான் அதிகமாக விளையும்.

எனவே, உங்கள் ஊரில், அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். இது உடலின் சமநிலையை தக்கவைத்துக் கொள்ள உதவும். இவை மட்டுமின்றி, உணவில் ஒரு குறிப்பிட்ட சுவையை மட்டும் சேர்க்காமல், ஆறு சுவைகளையும் உண்ண வேண்டும். ஒவ்வொரு சுவைக்கும், ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால், உடல் எடை நிச்சயம் கட்டுக்குள் வருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: