கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்..?

இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது கால்களில் நீர் கோர்த்து வீக்கமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்..?
கர்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்..?
  • Share this:
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் என்பது பொதுவாக நிகழக்கூடிய ஒன்று. 6 அல்லது 7 வது மாதத்தில் நிகழும் இந்த கால் வீக்கம் சில நேரங்களில் உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் உண்டாகும். அப்படி கால் வீக்கமானால் இந்த விஷயங்களை முறையாக செய்வது அவசியம். அப்படியும் வீக்கம் அதிகரிக்கிறது. குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது. 

கால் வீக்கம் ஏன் ?

மாதம் கூடக் கூட கர்ப்பப்பை விரியும். அப்போது அருகில் இருக்கும் இரத்தக் குழாய்களுக்கும் அழுத்தம் கிடைக்கும். இதனால் காலிலிருந்து செல்லக் கூடிய இரத்தம் செல்ல முடியாமல் தடைபடும். இப்படி இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது கால்களில் நீர் கோர்த்துக்கொண்டு வீக்கமாக இருக்கும். சில நேரங்களில் இரத்தத்தில் உப்பு அல்லது சர்க்கரை அளவு அதிகரித்தாலும் கால் வீக்கம் அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களால் கால் வீங்கினால் இந்த வழிகளை பின்பற்றுங்கள்.


வீக்கம் குறைய வழிகள் என்ன?

ஓய்வும் தூக்கமும் அவசியம்.

கால்களுக்கு சரியான காலணிகள் அணிய வேண்டும்.நடைபயிற்சி , யோகா , உடற்பயிற்சி அவசியம்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

உணவு விஷயத்தில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றங்களைச் செய்வது கூடுதல் அக்கறை அவசியம்.இவற்றோடு இந்த வீட்டு வைத்தியமும் அவசியம் :

வெந்நீரில் கல் உப்பு கலந்து கால் பாதங்கள் மூழ்கும் வரைக் கால்களை அரைமணி நேரம் ஊற வையுங்கள். கால் வீக்கம் குறையும்.

நன்கு இரவு தூங்கி எழுந்தாலோ, கால்களை மடக்காமல் நீட்டி உட்கார்ந்து ஓய்வு எடுத்தாலோ இந்த வீக்கம் குறையும்.

பார்க்க : 

 

 
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading