Home /News /lifestyle /

தாய்ப்பால் கட்டிக்கொண்டு கடுமையான வலியால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு இந்த வைத்தியம் தான் பெஸ்ட்..!

தாய்ப்பால் கட்டிக்கொண்டு கடுமையான வலியால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு இந்த வைத்தியம் தான் பெஸ்ட்..!

குறைந்தது 6 மாதங்களாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. காரணம் அந்த தாய்ப்பாலில்தான் குழந்தையின் எதிர்காலத்திற்கான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அந்த ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அந்தப் பச்சிளம் குழைந்தைக்கு உணவு. இப்படியிருக்கும் சமயத்தில் தாய்க்கு பால் சுரக்காமல் போனால் அதைவிட வேதனை வேறெதுவும் இருக்க முடியாது. இப்படி தாய்ப்பால் சுரக்காமல் போவதற்கு பொதுவான சில காரணங்கள் என்னென்ன பார்க்கலாம்...

இறுக்கமான உடைகள் அணிதல், அதிகமான பால் சுரப்பு போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். வீட்டு வைத்தியங்களே இதன் பெரும்பான்மை சிரமத்தைக் குறைக்கும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் சில நேரங்களில் தாய்ப்பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். கனத்த மார்பகங்களுடன் இருக்கும் வலியை பல பெண்கள் ’குழந்தை பெற்ற போது கூட இவ்வளவு வலியைத் தாங்கவில்லை’ எனப் புலம்புவார்கள். அந்த அளவிற்கு அதன் வலி தாங்க முடியாததாக இருக்கும்.

    இதற்கு என்ன காரணம்?

    குழந்தை ஈன்ற முதல் மாதத்தில் அதிக பால் சுரக்கும். குழந்தைக்கு சிறு வயிறு என்பதால் கொஞ்சம் தான் குடிக்கும் அந்த சமயத்தில் பால் கட்டிக்கொள்ளலாம். குழந்தைக்கு சரியாகப் பால் கொடுக்கவில்லை, மார்பகங்களை அழுத்திப் படுத்தல், பாலை நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பால் கட்டிக்கொள்ளும்.

    இந்த பால் கட்டுதல் வலி மட்டுமல்லாது காய்ச்சலைக் கூட உண்டாக்கும். எனவே இதற்கு சில வீட்டு வைத்தியங்களே போதுமானது. அவை என்னென்ன பார்க்கலாம்.

    இறுக்கமான உடை : பால் கொடுக்கும் காலகட்டத்தில் இறுக்கமான உடைகளை தவிர்த்து லூஸான உடை அணியுங்கள். இதுவும் பால் கட்டிக்கொள்ள முக்கிய காரணம்.

    ஒத்தடம் : சுடு நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுங்கள். ஹீட்டிங் மசாஜ் பேட் இருந்தாலும் ஒத்தடம் கொடுக்கலாம்.

    சூடான குளியல் : சூடான குளியல் போட்டாலும் பால் வற்றிவிடும்.

    மசாஜ் : நீங்களே உங்கள் கைகளை வைத்து மசாஜ் செய்தால் பால் கரைந்து வரும். அப்படியே வெளியேற்றலாம்.

    பூண்டு : பூண்டை நசுக்கி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வலி குறையும். அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால் தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

    பத்து போடுங்கள் : பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் பொடியாக்கி அதை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து மார்பில் பத்து போட்டால் அது காயும்போது பாலும் முறிந்து வெளியேறிவிடும்.

    அரிசி பேக் : அரிசி அல்லது மண் எதுவாக இருந்தாலும் அதை கடாயில் சூடாக்கி வெது வெதுப்பான பதத்தில் துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் கரைந்துவிடும்.

    ஐஸ் கட்டி : ஐஸ் கட்டிகளை நொறுக்கி அதை துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தாலும் மார்பகங்கள் இளகி பால் வெளியேறும். இது குளிர்ச்சி என்பதால் காய்ச்சல் வரலாம்.

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat,

    பார்க்க:

    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி