நகம் கடிக்கும் பழக்கம் கொண்ட பலருக்கும் அதை ஏன் செய்கிறோம் என்கிற தெளிவும், அதை ஏன் செய்ய கூடாது, எப்படி நிறுத்துவது என்கிற புரிதலும் - பெரும்பாலும் - இருப்பதில்லை. எப்போதாவது - நான் ஏன் நகங்களை கடிக்கிறோம்? என்னென்ன காரணங்களின் கீழ், எந்தெந்த சூனில்நிலைகளில் நாம் நகங்களை கடிக்கிறோம்? இதிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? இதை நிறுத்துவது எப்படி? என்று யோசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் - யோசிக்க (இந்த கட்டுரையை வாசிக்க) தொடங்கவும்.
நாம் ஏன் நகங்களைக் கடிக்கிறோம்?
நகம் கடித்தல் என்பது குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கமாகும். ஆனால் நம்மில் பலர் வளர்ந்த பிறகும் கூட இந்த பழக்கத்தை கைவிடுவதில்லை!
பழக்கமில்லாத சூழ்நிலையை சந்திக்கும் போது அல்லது மன அழுத்தம் மற்றும் பதட்டமான சூழ்நிலைகளில் நகங்களைக் கடிப்பது மனிதனின் ஒரு இயல்பான போக்காகி விட்டது. இந்த இடத்தில், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகிய இரண்டுமே பொதுவான மனநலப் பிரச்சனைகளாகும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
நகம் கடிப்பதை ஏன் நிறுத்த வேண்டும்?
நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து ஏன் விலகி இருக்க வேண்டும் என்பதற்கு பல உடலியல் காரணங்கள் இருந்தாலும் கூட, இந்த பழக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தையும் உடலையும் பாதிக்கும் சில காரணங்களையும் கொண்டுள்ளது.
அலுவலகத்தில் வேலை செய்யும் எப்போதும் நீங்கள் உங்கள் நகத்தை கடித்துக்கொண்டேஇருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அது ஒரு தொழில்சார்ந்த அணுகுமுறையை அளிக்காது. மேலும் நகம் கடிப்பதென்பது "சுய சந்தேகம்" தொடர்புடைய சிக்கல்களையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நீங்கள் டாய்லெட் சீட் பயன்படுத்தும்போது முறையாக அமர்கிறீர்களா..? இல்லையெனில் சிறுநீரகத்தில் இந்த பிரச்சனை வரலாம்..!
நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான முதல் படி - நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் நகம் கடிக்கிறீர்கள் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
அதன் பிறகு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நகம் கடிக்க கூடாது என்கிற சுயக்கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் சிலர் தங்களை அறியாமலேயே நகம் கடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர்.
நகங்களைக் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, சுய முயற்சிகள் மிகவும் அவசியம். பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் போது அதை நினைத்து-நினைத்து நகம் கடிப்பதை விட, அந்த சூழ்நிலையை கடப்பது எப்படி என்கிற வழிகளில் செயல்பட பழக வேண்டும். ஒருகட்டத்தில் நகம் கடிப்பதை நீங்கள் முற்றிலும் நிறுத்தலாம்; மறந்து போகலாம்.
நடைப்பயிற்சி தொப்பையை குறைக்க உதவுமா..? இப்படி நடந்தால் மட்டுமே சாத்தியம்..!
ஒருவேளை மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, கட்டுப்படுத்தவே முடியாத படி நகம் கடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருப்பின் உளவியலாளரை சந்தித்து அவரின் உதவியை பெறுவது சிறந்தது. பொதுவாக இந்த விஷயத்தில் ஒரு உளவியலாளர் ஓரிரு "நடத்தை சார்ந்த சிகிக்சைகளை" (behavioral therapy) செய்வார். பின் உங்களின் நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிட செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.