Home /News /lifestyle /

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்களுக்கு ஏற்படவிருக்கும் பார்வை இழப்பை எவ்வாறு தடுப்பது?

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்களுக்கு ஏற்படவிருக்கும் பார்வை இழப்பை எவ்வாறு தடுப்பது?

NetraSuraksha

NetraSuraksha

Diabetic Retinopathy | நீரிழிவு ரெட்டினோபதியானது வகை I, வகை II அல்லது கர்ப்பகால நீரிழிவு என அனைத்து வகையான நீரிழிவு நோயாளிகளையும் பாதிக்கலாம். வகை II நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மற்றும் வகை I நீரிழிவு நோயாளிகளில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீரிழிவு ரெட்டினோபதியால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா உருவாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி வயது வந்தோரில் சுமார் 74 மில்லியன் நீரிழிவு நோயாளிகாக உள்ளனர் மற்றும் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் வல்லுநர்கள் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 93 மில்லியனாகவும், 2045 ஆம் ஆண்டில் 124 மில்லியனாகவும் உயரும் என்று கணித்துள்ளனர்1.

    நீரிழிவு நோயானது சோர்வு மற்றும் எரிச்சலை மட்டும் ஏற்படுத்துவதில்லை. இது உங்கள் உடலுக்கு மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து உலகளவில் 80% சிறுநீரக நோயின் இறுதி கட்டத்திற்கு வழிவகுக்கின்றன2. நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் இரண்டும் இருதய நோய்களுடன் வலுவாக தொடர்புடையவை. உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 40 முதல் 60 மில்லியன் மக்களை பாதிக்கும், கால் மற்றும் கீழ் மூட்டு  நீரிழிவுச் சிக்கல்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு நோய்ப்பாதிப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன2. நாள்பட்ட புண்கள் மற்றும் உறுப்பு நீக்கங்கள் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க இழப்பையும் ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன2.

    நீரிழிவு நோயில் கண்டறியப்பட்ட மற்றொரு சிக்கல் நீரிழிவு ரெட்டினோபதி நோயாகும்- இது நீரிழிவு நோயாளிகளின் பார்வை இழப்பிற்கு மிகவும் பொதுவான காரணமாக உள்ளது. 1980 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், நீரிழிவு நோயாளிகளில் விழித்திரை படங்களைப் பயன்படுத்தி நீரிழிவு ரெட்டினோபதியின் ஒட்டுமொத்த பரவலானது 35% என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் பார்வைக்கு அச்சுறுத்தலான நீரிழிவு ரெட்டினோபதி 12%2 உள்ளது. இந்தியாவில், விழிப்புணர்வு இல்லாததாலும், கண்டறியப்படாத நீரிழிவு நோயின் அதிக பாதிப்புகளாலும் இந்த பிரச்சனை சிக்கலாக உள்ளது. 43.9 மில்லியன் இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கண்டறியப்படவில்லை2.

    நீரிழிவு ரெட்டினோபதி கண் பார்வையை எவ்வாறு பாதிக்கிறது? உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளை சரிபார்க்காமல் விட்டுவிட்டால், அது உங்கள் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறிய இரத்த நாளங்களில் தடுப்புகளை உருவாக்கும். விழித்திரை என்பது கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒரு உட்பூச்சு ஆகும், இது ஒளியைப் படங்களாக செயலாக்குகிறது. இரத்த நாளங்களில் வீக்கம், திரவக் கசிவு அல்லது இரத்தப்போக்கு ஏற்படலாம், இது பெரும்பாலும் பார்வை மாற்றங்கள் அல்லது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை பொதுவாக இரு கண்களையும் பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீரிழிவு ரெட்டினோபதி உங்கள் விழித்திரையில் வடு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வை இழப்பை ஏற்படுத்தும்4.

    நீரிழிவு ரெட்டினோபதியானது வகை I, வகை II அல்லது கர்ப்பகால நீரிழிவு என அனைத்து வகையான நீரிழிவு நோயாளிகளையும் பாதிக்கலாம். வகை II நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மற்றும் வகை I நீரிழிவு நோயாளிகளில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீரிழிவு ரெட்டினோபதியால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது3

    நீரிழிவு ரெட்டினோபதி நோய் முற்றும்வரை உங்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அதனால்தான் வழக்கமான பரிசோதனை அவசியம் - இந்த நிலையில் நோயை தடுக்க முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. நீரிழிவு ரெட்டினோபதி அறிகுறிகளில் மங்கலான பார்வை, நிறங்களைப் பார்க்க இயலாமை, உங்கள் பார்வையில் துளைகள் அல்லது மிதவைகள் அல்லது கருப்பு புள்ளிகள் தென்படுதல் ஆகியவை அடங்கும். ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, வாசிப்பதில் அல்லது வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படுவது4. எனவே நீங்கள் இதைக் கவனிக்கத் தொடங்கினால், உங்கள் இரத்த அறிக்கைகளில் உங்களுக்கு நீரிழிவு அல்லது முன் நீரிழிவு அறிகுறி தென்பட்டால், பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.

    நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, Novartis உடன் இணைந்து Network 18 நிறுவனமானது 'Netra Suraksha' - நீரிழிவு நோய்க்கு எதிரான இந்தியா எனப்படும் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. கண்பார்வையை சத்தமின்றிப் பறிக்கும் டயபடிக் ரெட்டினோபதி போன்ற நீரிழிவு நோய் மற்றும் கண் தொடர்பான சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மருத்துவ சமூகம், சிந்தனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் உதவியுடன் இந்த விழிப்புணர்வை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். வட்டமேசை விவாதங்கள் மற்றும் வழக்கமான விழிப்புணர்வு இயக்கங்களைத் தவிர, இந்த முயற்சியானது நீரிழிவு ரெட்டினோபதிக்கான சுய பரிசோதனையையும் உருவாக்கியுள்ளது, மற்றும் இது நீரிழிவு நோயாளிகள் (மற்றும் ப்ரீ-டயபடிக் நோய் உள்ளவர்கள்) அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை, குறிப்பாக அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தைச் சிறப்பாக நிர்வகிக்க உதவும் பல கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை வெளியிடும். 

    நீங்கள் செய்ய வேண்டியது: நீங்களும், உங்கள் அன்புக்குரியவர்களும் இன்றே நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். நீரிழிவு ரெட்டினோபதி நோய்க்கான சுய பரிசோதனையைத் தொடங்கவும், நீங்கள் அதைச் செய்துகொண்டிருக்கும்போதே, உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவையும் இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்துக் கொள்ளவும். உங்கள் இரத்த குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் சரியாக இருந்தாலும், முழுமையான கண் பரிசோதனைக்காக வருடத்திற்கு ஒரு முறையாவது கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும். 

    இது ஒரு ஊடுருவக்கூடிய வலியற்ற பரிசோதனையாகும், நீரிழிவு ரெட்டினோபதியின் முன்னேற்றத்தைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான முதல் படியாக மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் கண்களின் இரத்த நாளங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா அல்லது புதிதாக ஏதேனும் வளர்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்க உங்கள் மருத்துவர் உங்கள் கண்பாவையை விரிவுபடுத்துவார். உங்கள் விழித்திரை வீங்கியிருக்கிறதா அல்லது தனித்து விடப்பட்டிருக்கிறதா என்பதையும் அவர்கள் பரிசோதிப்பார்கள். இவை அனைத்து செயல்முறைகளையும் நிறைவுசெய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

    ஒருவேளை உங்களுக்கு டயபடிக் ரெட்டினோபதி இருப்பதாக நோயறிதலில் கண்டறியப்பட்டாலும், இதைச் சரிசெய்யவே முடியாது என்று அர்த்தமில்லை. டயபடிக் ரெட்டினோபதி என்பது சமாளிக்கக்கூடிய ஒரு நோய் நிலையாகும், மேலும் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இது மேலும் முன்னேறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால், டைப் II நீரிழிவு நோயானது இப்போது ஒரு மீளக்கூடிய நோயாகக் கருதப்படுகிறது, குறிப்பாக அதன் ஆரம்பக் கட்டங்களில். முன்கூட்டியே கண்டறிவதன் மூலம்5. இந்த நோயை முறியடிப்பதற்கான உங்கள் சிறந்த பங்களிப்பை வழங்குங்கள்!

    வாழ்க்கை முறைகளும் உணவு பழக்கவழக்கங்களும் மாறுவதால், இந்தியாவில் கண் ஆரோக்கியத்திற்கு நீரிழிவு ரெட்டினோபதி தீவிர அச்சுறுத்தலாக மாறி வருகிறது. Netra Suraksha முன்முயற்சியைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு News18.com நிறுவனத்தைப் பின்தொடருங்கள், மேலும் நீரிழிவு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதியிலிருந்து உங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் ஈடுபடுங்கள்.

    1. IDF Atlas, International Diabetes Federation, 10th edition, 2021

    2. IDF Atlas, International Diabetes Federation, 9th edition, 2019

    3. Gadkari SS, Maskati QB, Nayak BK. Prevalence of diabetic retinopathy in India: The all India ophthalmological society diabetic retinopathy eye screening study 2014. Indian journal of ophthalmology. 2016 Jan;64(1):38. 

    4. https://www.nei.nih.gov/learn-about-eye-health/eye-conditions-and-diseases/diabetic-retinopathy 10 Dec, 2021

    5. https://www.healthline.com/health/type-2-diabetes-reversible#type-1-vs-type-2 10 Dec, 2021

    Published by:Selvi M
    First published:

    Tags: Diabetics, Health, Lifestyle

    அடுத்த செய்தி