ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்காலத்தில் உருவாகும் சேற்றுப்புண்னை தவிர்க்க செய்ய வேண்டியவை... வீட்டிலேயே சரி செய்ய உதவும் டிப்ஸ்..!

மழைக்காலத்தில் உருவாகும் சேற்றுப்புண்னை தவிர்க்க செய்ய வேண்டியவை... வீட்டிலேயே சரி செய்ய உதவும் டிப்ஸ்..!

சேற்றுப்புண் வராமல் தவிர்க்க தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதை தவிருங்கள். அப்படி செய்தால் வேலை முடிந்ததும் பருத்தித் துணியை கொண்டு பாதங்கள், விரல் இடுக்குகளை சுத்தமாக துடைத்துவிடுங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சேற்றுப்புண் மழைக்காலங்களிலோ அல்லது அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்தாலோ உருவாகும். இதை நீர்ச்சிரங்கு என்றும் அழைக்கின்றனர். சேற்றுப்புண் என்பது கால் விரல்களில் இடையிலான சவ்வுப்பகுதியில் பூஞ்சைகளின் தொற்றால் உருவாகக்கூடியது. இந்த பூஞ்சை ட்ரைக்கோபைத்தான் ரூபிரம் என்ற பூஞ்சை வைரஸ் உண்டாக்கும் தொற்றே இந்த புண்ணிற்குக் காரணம். இது விரைவில் பரவக்கூடிய வைரஸும் கூட...

  சேற்றுப்புண் கால்களில் வந்துவிட்டால் எரிச்சலாய் எரியும். நடக்க முடியாது. இரு விரல்கள் உரசினாலே எரிச்சல் உண்டாகும். காலணி கூட அணிய முடியாதபடி சிரமத்தை உண்டாக்கும். இந்த தொற்று அதிக பாதிப்பை உண்டாக்காது என்றாலும் விரைவில் அதை குணப்படுத்திவிட வேண்டும். இந்த வைரஸும் எளிதில் அழிந்து அந்த இடத்தில் புண்ணை குணமாக்கிவிடும்.

  இதற்கு சில வீட்டுக்குறிப்புகளையும் பின்பற்றலாம். அப்படி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் குழைத்து வெதுவெதுப்பான பதத்திலேயே அந்த புண் மீது தடவுங்கள். காய்ந்ததும் அதுவே உதிர்ந்துவிடும். இரவு தூங்கும் முன் தடவிவிட்டு படுங்கள்.

  சேற்றுப்புண் வராமல் தவிர்க்க தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதை தவிருங்கள். அப்படி செய்தால் வேலை முடிந்ததும் பருத்தித் துணியை கொண்டு பாதங்கள், விரல் இடுக்குகளை சுத்தமாக துடைத்துவிடுங்கள். மழைக்காலங்களில் தரை எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். எனவே காலணி அணிந்து நடக்கலாம்.

  வெளியே சென்று வந்ததும் மஞ்சள் கலந்த தண்ணீரால் கால்களை கழுவிவிட கிருமிகள் இருக்காது. கிருமி கால் விரல்களில் இடையில் ஒட்டிக்கொள்ளும் என்பதால் விரல் இடுக்குகளை விரித்து கழுவுங்கள்.

  பாதங்கள் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.

  வேப்பிலையை அரைத்து அதில் மஞ்சள் கொஞ்சம் சேர்த்து கலந்து தடவலாம்.

  தேங்காய் எண்ணெய் தடவி விடலாம் அல்லது அதே தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் குழைத்தும் தடவலாம்.

  மருதாணி இலையும் இதற்கு கேட்கும். எனவே மருதாணி இலையை அரைத்து புண் மேல் தடவி காய்ந்ததும் கழுவலாம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Home remedies, Monsoon Diseases