மெனோபாஸை எதிர்கொள்ள இருக்கும் பெண்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது..?

”எப்படிபட்ட உடல்நலப் பிரச்னைகள் வந்தாலும் மனதை திடமாக வைத்துக்கொள்வதும், பயமின்றி தைரியமாக ஒரு கை பார்த்துவிடலாம் என்ற எண்ணமும்தான் உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை”

மெனோபாஸை எதிர்கொள்ள இருக்கும் பெண்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது..?
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் பொதுவான ஒன்று இந்த வயிற்று வலி. இது சிலருக்கு தொடந்து அந்த மூன்று நாட்களுக்கு இருக்கும். சிலருக்கு திடீரென வலி உண்டாகும். இப்படி எப்போது வலி இருக்கும் என்பதே சொல்ல முடியாது. அது எப்பேர்பட்ட வலியாக இருந்தாலும் இந்த உணவுகளை மாதவிடாய் சுழற்சி தொடங்கும் நாட்களிலிருந்தே சாப்பிட்டு வந்தால் குறைக்கலாம்.
  • Share this:
மாதவிடாய் நிற்றல் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் சந்திருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கே புதிதாக இருக்கலாம். இதனால்தான் இது நடக்கிறது என்பதே தெரியாமல் அதை கையாளத் தெரியாமல் சிரமப்படுவார்கள்.

அப்படி சீரற்ற மாதவிடாய், நிதானமற்ற மனநிலை, அதிக உதிரப்போக்கு, எரிச்சல், தொந்தரவான மனநிலை, மன அழுத்தம், உடல் பருமன் இப்படி பல பிரச்னைகளை ஹார்மோன் மாற்றங்களால் எதிர்கொள்கின்றனர்.

எனவே 40 வயதைக் கடந்த, மெனோபாஸை எதிர்கொள்ள காத்துக்கொண்டிருக்கும் பெண்கள் அதற்கு தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது என்று பார்க்கலாம்.


இந்த சமயத்தில் பெண்கள் வைட்டமின் டி சத்துக் குறைபாடு, அனீமீயா, ஹைப்பர் டென்ஷன் போன்றவற்றை அதிகம் எதிர்கொள்வார்கள். எனவே தங்களின் உடல்நலனை கவனித்துக்கொள்வது அவசியம். இத்தனை வருடங்களாக மற்றவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்திய நீங்கள் தற்போது உங்களின் உடல்நிலையிலும் கவனம் கொள்வது அவசியம்.

படிக்க: மாதவிடாய் நாட்களில் இவற்றை செய்யலாமா.?

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருதல் அவசியம். குறிப்பாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். யோகா பயிற்சி செய்யலாம். ஜாகிங், நடைபயிற்சி கூட மேற்கொள்ளலாம்.

ஊட்டச்சத்து குறைபாடின்றி உங்களின் உணவுப் பழக்கம் சத்து நிறைந்த வீட்டு உணவுகளாக இருக்க வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள், இறைச்சி போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.

எலும்புகளை வலுவாக்க கால்சியம் சத்தும் வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியம். அதேபோல் மகளிர் மருத்துவ நிபுணர், சிறுநீரக மருத்துவர், மனநல மருத்துவர், எலும்பியல் நிபுணர், கண் மருத்துவர் என மருத்துவர்களை அணுகி அதற்குறிய சிகிச்சைகளைப் பெற்று வருதல் நோயற்ற நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். இதனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெறலாம்.

படிக்க: பெண்களே உடலுறவுக்குப் பின் இந்த விஷயங்களை செய்யத் தவறாதீர்கள்..!

எனவே எப்படிபட்ட உடல்நலப் பிரச்னைகள் வந்தாலும் மனதை திடமாக வைத்துக்கொள்வதும், பயமின்றி தைரியமாக ஒரு கை பார்த்துவிடலாம் என்ற எண்ணமும்தான் உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading