ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை கருத்தரித்தல் என்பது திட்டமிட்ட ஒன்றாக இருக்க வேண்டும். தற்செயலாக இருக்கக்கூடாது. அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தம்பதிகள் முடிவு செய்த பிறகு அவர்கள் உடலையும் மனதையும் அதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த திட்டமும் இல்லாமல் திடீரென்று கருத்தரித்தால், உடல் ஆரோக்கியத்தை சரியாக பார்த்துக் கொள்ள முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். எனவே, எப்படி கருத்தரிக்க திட்டமிட வேண்டும் என்பது பற்றி ஆயுர்வேதம் வழங்கும் பரிந்துரைகள் இங்கே.
ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை – உடலும் மனமும் சமநிலையில் இருப்பது :
ஆயுர்வேத மருத்துவம் என்றாலே உடல் மற்றும் மனம் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதைத்தான் குறிப்பிடும். எனவே தோஷங்கள் என்று கூறப்படும் உடலின் தன்மை சமநிலையில் இருக்கும் பொழுது எளிதாக கருத்தரிக்க முடியும். மேலும், கர்ப்ப காலம் முழுவதுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில், வேலை பார்க்கும் சூழல், வேலை, நேரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவற்றால் பல தம்பதிகள் இயற்கையாக கருத்தரிப்பதில் பலவிதமான சிக்கல்களையும் தாமதங்களையும் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க முயற்சி செய்து, அதில் தோல்வி அடையும் போது அல்லது தாமதமாகும் போது பதற்றத்தையும், படபடப்பையும் அதிகரித்து பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்குகிறது.
இதனால் தான், ஆயுர்வேதம் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு தம்பதிகள் முடிவு செய்தால் உடனடியாக உடல் மற்றும் மனதை அதற்காக தயார் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தினசரி செய்யும் வேளைகளில் மாற்றங்கள், உணவுப் பழக்கம் மற்றும் மன நிலை ஆரோக்கியமாக இருப்பது சார்ந்து மேற்கொள்ளக்கூடிய மாற்றங்கள் ஆகியவை இயற்கையாகவே கருத்தரிக்க உதவும். ஆயுர்வேத முறைப்படி குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதற்கான விவரம் இங்கே.
அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்
பொதுவாகவே, நேர்மறையான சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதுமட்டுமல்லாமல் மனம் அமைதியாக இருப்பதும் முக்கியம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் தம்பதிகளுக்குள் இணக்கம், நல்லுறவு, மற்றும் மன அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை கருத்தரிப்பதற்கு மிக மிக அவசியம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது தம்பதிகள் ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, எதிர்மறையான சிந்தனைகள் இல்லாமல் மனமொத்து மகிழ்ச்சியாக இருப்பது குழந்தை கருத்தரிப்பதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சி, யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி
உடல் பருமன், உடல் உழைப்பே இல்லாத அளவுக்கு வாழ்க்கை முறை உள்ளிட்டவை கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. எனவே உடல் ஆக்டிவாக சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருப்பது கருத்தரிப்பதற்கு மிகவும் அவசியம். ஆயுர்வேத மருத்துவத்தில் யோகா ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பெல்விக் என்று கூறப்படும் இடுப்பு பகுதிகள் வலுப்படுவதற்கும் அதை சுற்றி இருக்கும் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் ஓட்டம் ஆகியவை தடையில்லாமல் செல்வதற்கும் இடுப்பு தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரவில் சீக்கிரம் தூங்கி, சூரிய உதயத்துக்கு முன்பு எழ வேண்டும்
இரவெல்லாம் கண்விழித்து பகலெல்லாம் உறங்கும் பழக்கம் இப்பொழுது பலருடைய வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. சூரிய உதயம் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிறது என்று பலரும் தங்களைப் பார்த்து கேள்வி கேட்டுகொள்ளலாம்! ஆயுர்வேத மருத்துவத்தில் இரவு நேரத்தில் சீக்கிரமாக உறங்க செல்ல வேண்டும் என்றும், சூரிய உதயத்திற்கு முன்பே கண் விழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை மேற்கொள்ளும்போது நம் உடலிலிருக்கும் பஞ்ச பூத ஆற்றல் மற்றும் ஹார்மோன்கள் அனைத்துமே சமநிலையில் இருக்கும்.
எந்த நேரத்தில் தூங்கச் செல்கிறீர்கள் மற்றும் எந்த நேரத்தில் விழித்துக் கொள்கிறீர்கள் என்பது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தை சரியான அளவில் வைத்திருக்கும். எனவே இரவில் 10 மணிக்கு முன்பே தூங்கி விட வேண்டும் மற்றும் காலையில் 6 மணிக்கு முன்பு எழுந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
Also Read : கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் இன்றிலிருந்து இந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிடுங்க..!
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.