ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் பாடிஷேமிங்... இதற்கு என்னதான் தீர்வு..? பகிர்ந்துகொண்ட பெண்கள்

பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் பாடிஷேமிங்... இதற்கு என்னதான் தீர்வு..? பகிர்ந்துகொண்ட பெண்கள்

பிரசவத்திற்கு பின்னர் பாடி ஷேமிங்கிற்கு தள்ளப்படும் தாய்மார்கள்.!

பிரசவத்திற்கு பின்னர் பாடி ஷேமிங்கிற்கு தள்ளப்படும் தாய்மார்கள்.!

ஒரு பெண் எவ்வாறு தோற்றம் அளிக்கிறார் என்பது மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு சில விதிமுறைகளின் படி, எப்போதும் நேர்த்தியாக, பார்ப்பதற்கு அழகாக, கட்டுகோப்பான உடலமைப்புடேன் இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாத பெண்கள் கேலி கிண்டல் செய்யப்படுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

பெண்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பும், தோற்றமும் வெவ்வேறு விதமாக மாறும். குறிப்பாக, குழந்தை பிறந்த பின்பு பெரும்பாலான பெண்கள் உடல் எடை கூடு, தோற்றமே மாறிவிடும். கர்ப்ப கால ஹார்மோன்கள், பிரசவம், குழந்தை வளர்ப்பு என்று பல மாதங்கள் குழந்தைக்காக செலவழிக்கும் பெண்கள் தங்களை மறந்து விடுவது இயல்பு தான். ஆனால், இதையே ஒரு பெரிய குறையாக பார்க்கும் சமூகத்தில் இருக்கிறோம்.

ஒரு பெண் எவ்வாறு தோற்றம் அளிக்கிறார் என்பது மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு சில விதிமுறைகளின் படி, எப்போதும் நேர்த்தியாக, பார்ப்பதற்கு அழகாக, கட்டுகோப்பான உடலமைப்புடேன் இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாத பெண்கள் கேலி கிண்டல் செய்யப்படுகின்றனர். அதிலும், குழந்தை பிறந்த பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனுக்கு ஆளாகும் பல பெண்கள், பாடி ஷேமிங் செய்யப்படுகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத அளவுக்கு அழகுக்கான அளவுகோல்களை வைத்திருக்கும் சமூகத்தில் பாராட்டும் படியான ஒப்பீடுகள் கூட தவறானது தான். அதில் சில உதாரணங்கள்.

 • உன்னுடைய அம்மாவைப் பார்த்தால், உனக்கு அக்கா போல இருக்கிறார்! நீ ஏன் ஜிம்மில் சேரக்கூடாது?
 • ஆண்களுக்கு ஒல்லி பெல்லி தான் பிடிக்கும். உன்னை மாதிரி குண்டான பெண்களைப் பார்த்தாலே பிடிக்காது.
 • இதைப் போன்ற பலவிதமான தோற்ற ஒப்பீடுகள் பல பெண்களை பாதித்து வருகிறது. ஆனால், குழந்தை பிறந்த பிறகும் இவ்வாறு தொடர்வது பெண்களுக்கு தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான பெண்களுக்கு நடக்கும் இத்தகைய அனுபவத்தை பகிர்ந்த ஒரு பெண்ணின் அனுபவம் இங்கே.

பல பெண்களைப் போலவே, அவருக்கு கர்ப்பகாலம் அவ்வளவு எளிதானதாக இல்லை. கர்ப்பகாலத்தில் முழுவதுமாக மசக்கை, வாந்தி, அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள், வலி, பசியின்மை என்று தான் இருந்தது. ஆனால், அவை எல்லாமே அழகான ஒரு உயிர் பிறக்கப்போகிறது என்று புன்னகைத்துக் கொண்டே ஏற்றுக்கொண்டார்.

குழந்தை பிறந்த பிறகு, தாயையும் குழந்தையையும் அவரின் குடும்பத்தார் அன்பையும் பாசத்தையும் பொழிந்து பார்த்துக் கொண்டார்கள். முதல் சில நாட்கள் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டார். ஆனால், அதை எல்லாவற்றையும், அன்பான குடும்பத்தாரின் உதவியுடன் எளிதாகக் கடந்து வந்தார். வீட்டில் இருந்தவரை அன்பும் பாசமும் மட்டுமே பார்த்த அப்பெண், வெளியே நடமாடத் தொடங்கிய போது தீவிரமான பாடி ஷேமிங்கிற்கு ஆளானார்.

ஒரு சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு வயிறு உடனடியாகக் குறையாது. சிலருக்கு மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் உடற்பயிற்சி செய்தால் தான் குறைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், பாப்பேன் வெளியில் சென்று வந்த போது, அவரது தோற்றம், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ், கூடிய உடல் எடை, பருமனான தோற்றம், ஆகியவை தாழ்வுமனப்பான்மையை உருவாக்கியுள்ளது. ஒரு சிலர், மனிதாபிமானம் இல்லாமல், ‘மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாயா?’ என்று கேட்டுள்ளனர்.

Also Read : நார்மல் டெலிவரியா அல்லது சிசேரியன் டெலிவரி... இரண்டில் எதைத் தேர்வு செய்வது நல்லது..?

 குழந்தை பிறந்த பிறகு, பெண்கள் எதிர்கொள்ளும் கேள்விகளில் சில இங்கே.

 • எடை குறைக்க வேண்டும் என்று உனக்கு தோன்றவே தோன்றாதா?
 • நீ இதற்கு முன்பு எவ்வளவு ஸ்லிம்மா இருந்த
 • குழந்தை பொறந்தாலே வெயிட் போடும் தான்
 • குழந்தை பிறந்து எவ்வளவு மாசமாச்சு, இன்னுமா இப்படி இருக்க

இந்தக்கேள்வியால் காயப்பட்ட அவர், எமோஷனல் ஈட்டிங் என்று கூறப்படும் வரம்பில்லாத உணவுகள், அழுகை, துக்கம், என்று அவதிப்பட்டுள்ளார்.

இதற்கான தீர்வு என்ன?

தனக்கான நேரம் ஒதுக்கத் தொடங்க வேண்டும். ஆனால், அம்மாக்களுக்கு எங்கே நேரம் கிடைக்கப் போகிறது? மூளைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

தேவையில்லாத, நெகட்டிவ்வான சிந்தனைகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு கொஞ்சம் விடுமுறை அளிக்கவேண்டும். தேவையில்லாத சிந்தனைகள் தான் மனநலத்தை தீவிரமாக பாதிக்கிறது. பிடித்த படங்கள், நாடகங்கள் பார்த்து நேரம் செலவழிக்கலாம். இதனால் நிச்சயமாக மனம் லேசாகும், தேவையில்லாத எண்ணங்களைத் தவிர்க்கலாம். ஆனால், இது தூக்கத்தை கெடுக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடை எவ்வளவு என்று சோதிக்க வேண்டாம். திடீரென்று அதிக எடையால், உணவுக்கட்டுப்பாடு, குறைவான கலோரி கொண்ட டயட் என்று எதையாவது பின்பற்றி, அது விபரீதமாக முடியும். எனவே, எடை மெஷினில் ஏறி நின்றால் அது உங்கள் நிலையை மோசமாக்குமே தவிர, எந்த வகையிலும் உதவாது.

Also Read : பிரசவத்திற்கு பின் உள்ள காலங்களில் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.!

 குழந்தையை வைத்துக் கொண்டே, நீங்கள் விரும்பும் நபர்கள், குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், சுற்றுப்புறத்தினருடன் நேரம் செலவழியுங்கள். குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது என்று ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றாக சமைத்து சாப்பிடலாம். உங்களை விரும்பும் நபர்களுடன் நெருங்கி இருப்பது மகிழ்ச்சியாக உணர வைக்கும்.

அம்மாவாக இருப்பது என்பது வாழ்க்கையை தலைகீழாக ஆனால் மிக அழகாக புரட்டிப்போடும் அனுபவம். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைக்காமல், முழுவாக ரசித்து வாழுங்கள்!

Published by:Josephine Aarthy
First published:

Tags: Pregnancy changes, Pregnancy stretches