ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வேலைக்கு செல்லும் பெண்கள் IVF சிகிச்சை எடுத்துக்கொண்டால் எப்படி இரண்டையும் சமாளிக்கலாம்..?

வேலைக்கு செல்லும் பெண்கள் IVF சிகிச்சை எடுத்துக்கொண்டால் எப்படி இரண்டையும் சமாளிக்கலாம்..?

 IVF சிகிச்சை

IVF சிகிச்சை

VF சிசிக்சைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதில் மருந்துகள், ரத்த சோதனை, ரெகுலர் செக்கப் மற்றும் ஸ்கேன் ஆகியவை அடங்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஒரு சில காரணங்களால் பெண்களுக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாமல் போகும் போது IVF சிகிச்சை கைகொடுக்கிறது. ஐவிஎஃப் சிகிச்சை மூலம் ஒரு பெண் குழந்தை பெறுதல் என்பதற்கு நிறைய மெனக்கெடல்கள் தேவை. இதில் முக்கியமானது சிகிச்சை காலம் முழுவதுமே, அதாவது சிகிச்சை காலம் தொடங்கிய நாள் முதல் குழந்தை பெறுவது வரை, அந்தப் பெண்ணின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே வேலைக்கு செல்லும் பெண்கள் IVF மூலம் குழந்தை பெற திட்டமிட்டிருக்கும் போது, அவர்கள் வேலையை தொடர்கிறார்கள் இல்லையா என்பது ஒரு முக்கியமான முடிவெடுக்கும் கட்டத்தை நோக்கி செல்லும்.

அதிகபட்ச ஓய்வு தேவைப்படும் நிலையில் பணியை தொடரம் முடியுமா என்பது பல பெண்களின் கேள்வியாக இருக்கும். பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் பெண்களுக்கு வேலையையும் விடமுடியாத சூழல் மற்றும் அறுவை சிகிச்சையும் பெற வேண்டிய தேவை ஏற்படும். இந்த நிலையில் IVF சிகிச்சையும் பெற்று, நல்ல விதமாக பிரசவம் வரை, வொர்க்-லைஃப் பேலன்ஸ் எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

IVF சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதில் ஆணின் விந்தணுக்கள் செலுத்தப்பட்டு லெபாரட்ரியில், கர்ப்பபை போன்ற சூழலில் கரு உருவாக்கப்படும். குறிப்பிட்ட நாட்கள் வரை கரு வளர்ந்த பிறகு அந்த சிசு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும். பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை இயல்பாக வளரத் துவங்கும். குழந்தை வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் ஹார்மோன்ங்கள் ஆகியவை பெண்ணின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவரால், பிரசவம் வரை பரிந்துரைக்கப்படும்.

IVF சிசிக்சைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதில் மருந்துகள், ரத்த சோதனை, ரெகுலர் செக்கப் மற்றும் ஸ்கேன் ஆகியவை அடங்கும். அதுமட்டும் இல்லாமல் ஐவிஎப் சிகிச்சை காலத்தின் பொழுது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு படப்படப்பாகவும், பயமாகவும் இருக்கும், கூடுதல் அழுத்தத்தையும் உணர்வார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையில்லாத உடல் மற்றும் மனரீதியான எந்த விதமான அழுத்தத்தையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இதில் வேலையில் இருக்கும் பெண்களுக்கு வொர்க்-பிரஷர் கூடுதலாக பாதிக்கலாம்.

பரிசோதனையில் கர்ப்பம்... ஸ்கேன் செய்தால் கரு உருவாகவில்லை... என்ன காரணம்..?

இதனால் பெண்கள் கட்டாயமாக வேலையை விட வேண்டுமா என்று கேட்டால், அவசியம் இல்லை! முறையாக திட்டமிட்ட ஜிவிஎப் சிகிச்சையுடன், வேலையை விடாமல் ஆரோக்கியமாக குழந்தையை பெறலாம்.

IVF சிகிச்சை பெறும் போது எவ்வாறு வேலை மற்றும் ஆரோக்கியத்தை பேலன்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.

IVF சிகிச்சை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும் :

IVF சிகிச்சை என்பது பெண்ணின் கர்ப்பப்பைக்குள் இருந்து கருமுட்டையை எடுத்து ஆணின் விந்தணுவை செலுத்தி சில நாட்கள் கழித்து மீண்டும் கருப்பைக்குள் செலுத்துவதன் மூலம் குழந்தை வளரும் என்பது கிடையாது. IVF மூலமாக கர்ப்பமாகும் பெண்களுக்கு இந்த மேற்கூறிய இந்த செயல்முறையை பல முறை செய்யும் சூழல் ஏற்படலாம்.

எனவே IVF சிகிச்சை தொடங்குவது என்பது நீங்கள் முதல் முறையாக சிகிச்சைக்காக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதில் இருந்தே தொடங்குகிறது. அதுமட்டும் இல்லாமல் நீங்கள் அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை மற்றும் அவசியம் இருப்பதால் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் நம்பகமான ஐவீஎப் சிகிச்சை மையத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் சிகிச்சை பற்றிய முழு விவரங்களையும் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் வருகை தர வேண்டும், ஒவ்வொரு செஷனும் எவ்வளவு நேரம், எடுக்கும் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் அலுவலக வேலையை திட்டமிடலாம்.

குழந்தையின்மைக்கு மன அழுத்தம்தான் காரணமா..? செஃப் வெங்கடேஷ் பட் பதிவுக்கு மருத்துவர் விளக்கம்..!

உங்கள் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள் :

நீங்க IVF சிகிச்சை பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் சக ஊழியர்கள் மற்றும் உங்கள் பாஸிடம் தெரிவிக்க வேண்டுமா என்பதை பற்றி சிந்தித்து முடிவெடுங்கள்.

IVF சிகிச்சை மூலம் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது மற்றவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் உங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று நீங்கள் அச்சப்பட வேண்டாம். தற்போதைய காலகட்டத்தில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் நலன் மீது அக்கறை செலுத்தி வருகிறது. இதனால் உங்கள் சிகிச்சைக்கு ஏற்றவாறு உங்கள் வேலை நேரத்தை மாற்றவோ அல்லது கூடுதல் விடுமுறை அழிக்கவோ அல்லது வேலை பளுவை குறைக்கவோ உங்கள் நிறுவனமும் முன்கூட்டியே திட்டமிட்டு உங்களுக்கு உதவலாம்.

உங்களுக்கு ஆதரவாக இருக்கும் IVF மையங்கள் :

எப்படி உங்களுடைய சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வேலை நேரத்தை மாற்றியமைகிறீர்களோ, அதேபோல உங்கள் வேலைக்கு சப்போர்ட் செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆதரவாக இருக்கும் கிளினிக்கையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஒரு சில IVF சிகிச்சை மையங்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நேரத்தை பின்பற்றுவார்கள். அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு ஏற்றவாறு முன்கூட்டியே அப்பாயின்ட்மெண்ட் பதிவு செய்யும் வசதி, அல்லது இறுதி நேரத்தில் மாற்றி அமைக்கும் வசதி கொண்ட மையங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Pregnancy care, Working women