• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • PCOD பிரச்னையை ஆயுர்வேத முறையில் சரி செய்யும் சிகிச்சை வழிமுறைகள்..!

PCOD பிரச்னையை ஆயுர்வேத முறையில் சரி செய்யும் சிகிச்சை வழிமுறைகள்..!

பிசிஓடி

பிசிஓடி

PCOD கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தில்சிறந்த சிகிச்சை முறை உள்ளது, இது 100% இயற்கையானது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது என்று கூறி உள்ளார் விகாஸ் சாவ்லா.

  • Share this:
பாலிசிஸ்டிக் ஓவரி டிஸ்ஆர்டர் (PCOD- பி.சி.ஓ.டி) என்பது ஏராளமான பெண்களுக்கு பொதுவாக காணப்படும் ஒரு கோளாறாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்ய கூடிய ஹார்மோன் கோளாறு என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். இது கருப்பையால் சுரக்கும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படும் ஹார்மோன் கோளாறு ஆகும்.

மாதவிடாய் சுழற்சியில் கோளாறு, முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சி, கட்டுப்படுத்த முடியாத உடல் எடை, குழந்தையின்மை பிரச்சனை உள்ளிட்ட பலவற்றிற்கு காரணம் PCOD கோளாறு கூறப்படுகிறது. 12 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்த கோளாறு பெரும்பாலும் வெளிப்புற விளிம்புகளில் வளரும் சிறிய நீர்க்கட்டிகளுடன் கருப்பைகள் பெரிதாக வழிவகுக்கிறது.

நாம் முன்னரே பார்த்தபடி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அதிகப்படியான உடல் மற்றும் முகத்தில் காணப்படும் முடி வளர்ச்சி, உச்சந்தலையில் இருந்து முடி மெலிவது, முகப்பரு மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவை பி.சி.ஓ.டி அறிகுறிகளில் அடங்கும். இந்த பாதிப்பு இருப்பதால் பல பெண்கள் எளிதில் கர்ப்பமடைய முடியாமல் தவிக்கின்றனர். Vedas Cure என்ற ஆயுர்வேத கிளினிக்கின் நிறுவனர் மற்றும் இயக்குனரான விகாஸ் சாவ்லா, PCOD கோளாறுக்கு ஆயுர்வேதத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் அத்ரி விளக்கமாக கூறி உள்ளார்.PCOD ஏற்படுவதற்கான காரணங்கள் :

இது பற்றி பேசியுள்ள விகாஸ் சாவ்லா, முதலில் PCOD ஏற்படுவதற்கான மூல காரணத்தை புரிந்துகொள்வது மிக முக்கியம். கருப்பைகள் சுரக்கும் ஹார்மோன்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வே PCOD என குறிப்பிடப்படுகிறது. ஒரு சாதாரண சூழலில் பெண்களின் கருப்பைகள் பெண் பாலியல் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் தவிர ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆனால் PCOD கோளாறு இருக்கும் போது, பொதுவாக ஆண் பாலியல் ஹார்மோன்களாக மட்டுமே கருதப்படும் மற்றொரு ஆண் பாலின ஹார்மோனான ஆண்ட்ரோஜன் பெண்களின் கருப்பைகள் மூலம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலை ஹைபராண்ட்ரோஜனிசம் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக பெண்களிடம் மிக குறைவாக காணப்படும் ஆண்ட்ரோஜனின் உயர் மட்ட சுரப்பு அண்டவிடுப்பில் சிரமத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மாதவிடாய் சுழற்சியை தொந்தரவு செய்கிறது.

குடும்பத்தில் வேறு யாருக்காவது ஏற்கனவே PCOD கோளாறு இருக்கும் பட்சத்தில், அந்த குடும்பத்தை சேர்ந்த மற்ற பெண்களுக்கும் PCOD கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாக PCOD உள்ள பெண்களில் சுமார் 50% பெண்கள் இதே மருத்துவ நிலையில் ஒரு தாய் அல்லது சகோதரியை கொண்டிருக்கின்றனர்.ஆயுர்வேதத்தில் PCOD-க்கான சிகிச்சை?

PCOD கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தில்சிறந்த சிகிச்சை முறை உள்ளது, இது 100% இயற்கையானது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதது என்று கூறி உள்ளார் விகாஸ் சாவ்லா. பிரச்சனையின் தீவிரம் மற்றும் கருப்பையின் அளவைப் பொறுத்து சிகிச்சை காலம் 3 முதல் 6 மாதங்கள் வரை இருக்கும். ஆயுர்வேதம் ஒரு மனிதனின் தேகக்கட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

PCOD பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது..? பாலிவுட் பிரபலம் பகிர்ந்துகொண்ட அனுபவம்..!

காந்தாரி (Gandhari) மற்றும் வருணா (Varuna ) போன்ற மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மூலிகை உருவாக்கம் நீர்க்கட்டிகளை கரைக்கும். தவிர கச்னார் குகுலு ( Kachnaar Guggulu) எனப்படும் கிளாசிக்கல் ஆயுர்வேத மாத்திரை PCOD-யிலும் பரிந்துரைக்கப்படுகிறது. PCOD இருப்பதற்கான அறிகுறிகளை பொறுத்து ராஜ்பர்வத்னி வதி (Rajparvatni Vati) மற்றும் சந்திரபிரபா வதி (Chandraprabha Vati) போன்றவையும் வழங்கப்படுகின்றன.

* PCOD இருப்பது கண்டறியப்பட்டவுடன் ஒருவர் அவர்களின் உடல் எடையை உன்னிப்பாக சரிபார்க்க வேண்டும். கூடுதல் எடையை குறைக்க கூடுதல் வேலை செய்வதும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதும் இதில் அடங்கும்.* உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். கார்போஹைட்ரேட்டை குறைத்து எடுத்து கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட ஜூஸ்களை தவிர்த்து வீட்டிலேயே பிரெஷ் ஜூஸ் தயாரித்து பருகலாம்.

* நாள்தோறும் தவறாமல் சராசரி வேகத்தில் குறைந்தப்பட்சம் 30 நிமிடங்களாவது வாக்கிங் செல்வது மிக முக்கியம். லேசான உடற்பயிற்சியுடன் பூர்த்தி செய்யப்பட்ட புதிய உணவு முறையை பின்பற்றுவது எடையை குறைக்க உதவும்.

* பொதுவாகவே மனஅழுத்தம் மனிதர்களுக்கு மோசமான விளைவுகளை தரும். அதிலும் PCOD இருக்கும் பெண்களுக்கு மனஅழுத்தம் என்பது அறவே இருக்க கூடாது. கருவுறுதல் பிரச்சனைகள் மனச்சோர்வு மற்றும் விரக்தியை ஏற்படுத்தினாலும், அதை அதை பற்றியெல்லாம் நினைக்கலாம் மனஅழுத்தமின்றி கடந்து செல்வது PCOD பாதிப்புகளை சரியாக கையாள உதவும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: