ஊரடங்கு சமயத்தில் மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது..? உளவியல் நிபுணரின் ஆலோசனை..!
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் முடிந்த வரை அவர்களுக்கு செய்திகளின் நிலையை தெரியப்படுத்த வேண்டாம்.

- News18 Tamil
- Last Updated: April 18, 2020, 2:13 PM IST
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பது மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் குடும்பப் பிரச்னை, அலுவலகப் பிரச்னையால் மன அழுத்தம் என்றால் அது குறைந்த நாட்களுக்குள் சமாளித்து தீர்த்துவிடலாம். ஆனால் இதுபோன்ற கால வறையற்ற மன அழுத்தம் என்பது சமாளிப்பதற்கு கடினம்தான் என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
அதாவது கொரோனா தொற்று அதிகரிப்பது , குறைவதைப் பொருத்தே தற்போது 144 நீக்கம் உள்ளது என்பதால் அது நிச்சயமில்லாத தேதியாக உள்ளது. இதனால் மன அழுத்தமும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் இதில் நமக்கான நெருக்கடி வாழ வேண்டும் என்பது மட்டும்தான். எனவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் யோசிக்க வேண்டும். இதற்கு மன அழுத்தத்தை எப்படி மறக்கலாம். கடந்து வரலாம் என்பதே நம் முன் இருக்கும் சவால்.
எப்படி சமாளிப்பது..? விளக்குகிறார் சித்ரா சிந்தனைகளை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். இது கடினம்தான் என்றாலும் அதை முயற்சிப்பது அவசியம். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையை வளர்த்துக்கொண்டால் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.
மேலும் இந்த மன அழுத்தத்தை தவிர்க்க சமையல், வீட்டு வேலை, குடும்பத்தினருடன் இண்டோர் கேம்ஸ் என கவனங்களை சிதறச்செய்தல் அவசியம்.
நம்பிக்கை அவசியம். இந்த நேரத்தில் நம்பிக்கை என்பது மனித சக்தியைத் தாண்டியதாக இருப்பதுதான். அது கடவுளாகவும் இருக்கலாம். மக்கள் இந்த நேரத்தில் மலைபோல் நம்பியிருப்பதும் கடவுளைத்தான் என்பது மறுப்பதற்கில்லை.வாழ்க்கை முறையை சீராக்குவது அவசியம் . வீட்டில் இருப்பதால் பலருடைய தினசரி வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இந்த மாற்றம் தடை நீங்கிய பின் பெரும் சிக்கலாக மாறிவிடும். எனவே மதிய தூக்கத்தை முடிந்த அளவு தவிர்த்து இரவு தூக்கத்தை பழக்கப்படுத்துங்கள். செல்ஃபோன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள். இரவில் படம் பார்ப்பது, கேம்ஸ் போன்ற கேளிக்கைகளை தவிறுங்கள்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் முடிந்த வரை அவர்களுக்கு செய்திகளின் நிலையை தெரியப்படுத்த வேண்டாம். இதுதான் விஷயம் என அவர்களுக்கு புரிய வைத்தால் போதும்.

நீங்களும் என்ன நடந்தாலும் அது நடக்கத்தான் போகிறது என்கிற மனநிலையைக் கொண்டு வாருங்கள். எப்படியும் வராமல் இருப்பதற்கான வழிகளைத்தான் பின்பற்றுவோம். இருப்பினும் வந்தால் அது விதியின் கையில் என நினைத்து கடந்து செல்லுங்கள். வருமோ வருமோ என தினம் தினம் நினைத்து பதட்டம் , பயம் வேண்டாம்.
படம் பார்க்கும்போது திகில் படங்களைத் தவிர்ப்பது நல்லது. நம்பிக்கை, மகிழ்ச்சியை உண்டாக்கும் காமெடி , ரொமான்ஸ், காதல் , சாமி படங்களைப் பார்ப்பது நல்லது.
தியானம், யோகா, உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
லீவு தானே என எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, சாப்பிடுவது குளிப்பது என்றில்லாமல் சும்மாவே உட்கார்ந்தாலும் வேலைக்குச் செல்வது போல் எழுந்ததும் தயாராகுங்கள். இல்லையெனில் அதுவும் மனச் சோர்வுக்கு உள்ளாக்கும்.
எனவே இந்த நேரத்தில் ஆரோக்கியம் என்பது உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் இருக்க வேண்டும் என்கிறார் சித்ரா அரவிந்த்.
பார்க்க :
அதாவது கொரோனா தொற்று அதிகரிப்பது , குறைவதைப் பொருத்தே தற்போது 144 நீக்கம் உள்ளது என்பதால் அது நிச்சயமில்லாத தேதியாக உள்ளது. இதனால் மன அழுத்தமும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் இதில் நமக்கான நெருக்கடி வாழ வேண்டும் என்பது மட்டும்தான். எனவே வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் யோசிக்க வேண்டும். இதற்கு மன அழுத்தத்தை எப்படி மறக்கலாம். கடந்து வரலாம் என்பதே நம் முன் இருக்கும் சவால்.
எப்படி சமாளிப்பது..? விளக்குகிறார் சித்ரா