• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலில் கொழுப்பின் அளவை நிர்வகிக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!

உடலில் கொழுப்பின் அளவை நிர்வகிக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொலஸ்ட்ரால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இன்றியமையாத அங்கமாகும், மேலும் இது செல் சவ்வுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது.

  • Share this:
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் எளிதில் காணக்கூடிய ஒரு கொழுப்புப் பொருள். ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால், பக்கவாதம், இருதய நோய் போன்ற உடல்நலச் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் உணவு மற்றும் நீங்கள் உட்கொள்ளும் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமற்ற உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.

Healthline.com படி, கொலஸ்ட்ரால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இன்றியமையாத அங்கமாகும், மேலும் இது செல் சவ்வுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது. இருப்பினும், அதிகப்படியாக சாப்பிடும் எதுவும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் இருந்தால், நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் சீரான கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க வேண்டிய உணவுகளும் உள்ளன.

சாப்பிடக் கூடாத உணவுகள் :

கேக் : சர்க்கரை எப்போதுமே உடலுக்கு ஆபத்துதான். அதிக அளவு உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். கேக்குகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற இனிப்பு உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

பிரஞ்சு ஃபிரைஸ் : பிரெஞ்ச் ஃபிரைஸ், டீப்-ஃபிரைட் என உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் மற்றும் சாட் வகைகளை பலருக்கும் பிடிக்கும். அதில் குறிப்பாக பிரஞ்சு ஃபிரைஸ் பிடித்த சிற்றுண்டியில் ஆரோக்கியமற்ற அளவு எண்ணெய் உள்ளது. எனவே அது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்றது.

பதப்படுத்தப்பட்ட உணவு : பதப்படுத்தப்பட்ட உணவும் சுவை காரணமாக பலரும் சுவைக்கக் கூடும். இதனுடன்,சீஸ், சிக்கன் , மையோனைஸ் மற்றும் சாஸ் வகைகள் என பல சுகாதாரக் கேடு தரும் விஷயங்களும் சேர்க்கப்படுகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகம் உள்ளவர்கள் அத்தகைய உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.



சாப்பிட வேண்டிய உணவுகள் :

ஓட்ஸ் : ஓட்ஸ் சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் நிறைய பேர் ஓட்ஸை விரும்புகிறார்கள். கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், சாப்பிட எளிதாகவும் செரிமானத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. இருப்பினும், பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

Sitaphal | சீத்தாப்பழம் சாப்பிட்டால் என்னாகும்? கட்டுக்கதைளும் உண்மைகளும்!- Explainer

நட்ஸ்: பாதாம், அக்ரூட் பருப்புகள், பெக்கன்கள் போன்றவை நட்ஸ் வகைகளாகும். அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். ஏனெனில் இது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL ஐ அதிகரிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் குறைந்த LDL ஐ அதிகரிக்க உதவுகிறது.

வெண்டைக்காய் : வெண்டைக்காய் அனைவரும் பரவலாக விரும்பி சாப்பிடும் காய்கறி. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும். இந்த ஆரோக்கியமான கூறுகளுடன், வெண்டைக்காய் கொலஸ்ட்ரால் ஃபிரெண்ட்லி என அழைக்கப்படுகிறது. எனவே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: